Sunday, 5 June 2016

ஞானி

ஒரு ஞானி தன்னை வெளிப் படுத்திக் கொள்வது இல்லை
அவர் ஒரு காட்சிப் பொருளாக இருப்பது இல்லை
அவர் தன்னைத் தனக்கு மட்டுமே காட்டிக் கொகொள்கிறார்
அவர் மற்றவர்களின் அபிப்ராயத்தை தேடி அலையாதவர்
தன்னை வெளிப் படுத்திக் கொள்ள துடிப்பவன் ஆன்ம
வறுமை உள்ளவன்
அவன் நேரடியாகத் தன்னைத் தானே தெரிந்து கொள்ள முடியாதவன்
அவன் தன்னைப் பற்றி பிறர் மூலமாகத்
தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான்
அரசியல் என்பது தன்னுடைய அதிகாரத்தை பிறர் மூலம் தெரிந்து கொள்வது
ஆன்மிகம் என்பது தன்னுடைய சக்தியை தானே நேரடியாக தெரிந்து கொள்வது
தன்னுடைய ஜீவிதத்தை தானே உணர்ந்து கொள்வது
அவர் தன்னுடைய சக்தியை பரப்பி வீணடிக்காதவர்
அவர் தன்னை நியாயப்படுத்திக் கொள்வதில்லை
தான் சரியாகத்தான் இருக்கிறோம் என்பது அவருக்கு தெரியும்
எவனொருவன் தன்னை நியாயப் படுத்திக்
கொள்கிறானோ அவனிடம் குற்றம் இருக்கிறது
தன்னை வெளிப் படுத்திக் கொள்ளாதவர் ஒளி பொருந்தியவர் ஆகிறார்
அவர் தற் பெருமை கொள்வது இல்லை
அவர் கர்வம் கொள்வதில்லை
அவர் முழுமையை தன்னோடு பாதுகாத்து வைத்து இருக்கிறார்
ஓஷோ
தாவோ
மூன்று நிதியங்கள்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.