அமைதியான மனம்
மக்கள் என்னிடம் வந்து அமைதியான மனத்தை அடைவது எவ்வாறு?
என்று கேட்கிறார்கள்.
நான் அவர்களுக்கு சொல்கிறேன், அமைதியான மனம் என்று ஒன்று உலகில் இல்லை. அப்படி ஒன்றை ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.
மனம் ஒருபோதும் அமைதியாக இருப்பதில்லை.மனம் இன்மையே அமைதி.
மனம் ஒருபோதும் தானாகவே அமைதியாக மவுனமாக இருக்க முடியாது.
மனதின் இயல்பே இறுக்கமாகவும் குழப்பமாகவும் இருப்பதுதான்.
மனம் ஒருபோதும் தெளிவாக இருக்க முடியாது. தெளிந்த தன்மையை அது பெற்றிருக்க முடியாது. ஏனெனில் தன்னியல்பிலேயே மனம் குழம்பியது,கலங்கியது.
மனம் இல்லாவிடில் தெளிவு சாத்தியம்.
மனம் இல்லாவிடில் அமைதி சாத்தியம்.
மனம் இல்லாவிடில் மவுனம் சாத்தியம்.
எனவே ஒருபோதும் ஒரு மவுனமான மனத்தை அடைய முயலாதீர்கள்.அப்படி நீங்கள் முயன்றால் தொடக்கத்திலிருந
்தே ஒரு அசாத்தியப் பாதைக்குள் அடியெடுத்து வைப்பவர் ஆகிறீர்கள்.
எனவே மனதின் தன்மையை புரிந்து கொள்வதே முதல் வேலை.அதன்பிறகு மட்டுமே ஏதாவது செய்ய முடியும்.
--- ஓஷோ ---
40 mins · Public
More
5 people like this.
Like Sha
Sunday, 5 June 2016
அமைதியான மனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.