Thursday, 9 June 2016

மன இயக்கம்

மன இயக்கம்
🌰🌰🌰🌰🌰🌰🌰
🌿🌿🌿🌿🌿🌿🌿
ஆழ்மனது வெளிமனது & உள்மனது என இருபிரிவாக உள்ளன. அது போக என உயர்ந்த நிலை மனதாகவும் உள்ளது. மேல் மனது ஒரு எண்ணஅலை நீளத்தில் இயங்கும் & ஆழ்மனதும் வேறு ஒரு எண்ண அலைநீளத்திலும் இயங்கும். அதுபோல் சூப்பர் கான்சியஸ் மனதும் அதன் அருகில் இயங்கும் நிலையில் உள்ளது.
🐚🐚🐚🐚🐚🐚🐚
காலை சூரிய உதயத்திற்கு முன் ஆழ்மனது மிகவும் நிலைக்குச் சென்று சுறுசுறுப்பாகவும், அதிக விழிப்பு, தெளிவு நிலையில் இருக்கும். அமைதியான குளத்து நீரின் தன்மையை ஒட்டி இருக்கிறது.அந்த நேரம் நாம் எப்படி சிந்திக்கிறோமோ, அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம், அறிவு, படிப்பு, விளையாட்டு பற்றிய சிந்தனை செயல்கள் மூளையில் பதிந்து செயல்படுகின்றன. அதற்கான இயக்கம் அன்று நடைபெறுகின்றன.
🌺🌺🌺🌺🌺🌺
ஆராய்ச்சி செய்யும் மனது & தேர்ந்தெடுக்கும் மனது & புத்தகம், உடைகள். வாகனங்கள், வீடுகள், உணவுகளைத் தேடும் மனது & தடுமாறும் மனது. சூழலால் பாதிப்படையும் மனது & எல்லா முடிவுகளையும் தீர்மானிக்கும் மனது வெளி மனது. ஆனால் சில அனிச்சை செயல்கள் நமது உடலில் பல நேரம் இயங்க வேண்டும். அவைகள் புற மனதைத் தவிர்த்தே பல நேரங்களில் நடைபெறுகின்றன. உணவு, ஜீரணம், இரத்த ஓட்டம், மூச்சு சுவாசம், ஜீரண நீர் சுரப்புகள், நாளமில்லா சுரப்பி இயக்கங்கள் இவைகள் அனைத்தும் ஆழ்மனதினால் நம்மை அறியாமலே இயல்பாக, இனிமையாக, சுலபமாக பல நேரம் நடைபெறும். அதுவே ஆரோக்கியத்தின் உன்னத நிலை. குறிப்பாக ஆழ்மனது ஏதேனும் விஷயத்தில் ஒன்றிவிட்டால் அதை செயல்படுத்த முனையும். காரணங்கள் தேடாது. ஆராய்ச்சி செய்யாது. வாதம், விவாதம் செய்யாது.
🙏�🙏�🙏�🙏�🙏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.