Monday, 6 June 2016

சுயம்

சுயத்தில் லயம் !
***********************
ஒவ் ஒரு உயிரினங்களுக்கும்
சுயம் என்ற இருப்புத் தன்மையும் , இயக்கத் தன்மையும் இருக்கும்.

உயிரினங்களில்
மனிதர்களை தவிர
மற்ற உயிரினங்கள் அனைத்துமே ,

அதன் சுயத்திலேயே தான் , ஒவ் ஒரு சனத்தையும் லயித்து வாழும்.

சோகமான , துக்கமான
உயிரினங்களை காண இயலாது ,

மனித இனம் மட்டுமே தான் பகுத்தறிவால்
தன்னுடைய  சுயத்தை மறந்து , இழந்து , வாழ்ந்து வருகிறோம்.

பகுத்தறிவு !
ஒவ் ஒன்றையும் பகுத்து தொகுத்து
அறிந்து கொள்ள வழங்கப் பட்டுள்ளது ,
ஆனால்,

மரணம் நேரிடும்  வரை , தான் யார் என்றும் தன்னுடைய சுயம் என்ன வென்றும் அறிகிலார்கள் இல்லை ,
பலரை இன்றும் காணுகின்றோம் ,

மற்ற உயிரினங்களுக்கு
உணவு , இனைவு , இதை தவிர வேறேதும் தேவையில்லை  தேடிப் போவதும்மில்லை,

நமது நிலைகள் ?

உணவு , உழைப்பு உடலுறவு , உறக்கம்
சிந்தனை, எண்ணம்,
செயல் , தேவை , தேவையின்மையால்
உள்ள மாயைகள் மீதான கொண்ட மோக மயக்கம் ,

இப்படி வாழ்வியல்
முறையை அமைத்து
கொண்ட நாம் எப்படி
நம்முடைய சுயத்தை
அறிவது , பிறகு எப்படி அதில் லயிப்பது ?

நமது சுயம் !

ஆதிக்கு முன் அநாதி என்ற ,

"தொடக்கமும் முடிவும் இல்லாதது"

தன் இருக்கம் ! தன்னை தானே சூழ்ந்து அலுத்தும்
ஆற்றல் !

வற்றாயிருப்பு ,
பேராற்றல் ,
பேரறிவு ,
காலம் , என்ற நான்கு
பெருவெளியாக கொண்டது .

இந்த "சுயம்" தான்
நம்மிடம் இருப்பு ஆற்றலாக இயங்கி
கொண்டுள்ளது !

"இதுவே தான் நாம்
நம்முடைய சுயம்"

இயக்கத்தின், எழுச்சி
அலைகளால் ஏற்படும் சிந்தனை  அதிலிருந்து பிறக்கும்  எண்ணங்கள் இவையெல்லாம் உதிக்க காரணமாக இருக்கும் , காரணசரீரம் என்ற பருஉடலை நாம் என்று  திடமாக நம்புவதால்.

நம்முடைய உண்மையான சுயத்தினை அறிந்து கொள்ள  முடியவில்லை,
நம்முடைய சுயத்தை
ஆத்மீக நெறி முறைகளை பின்பற்றி அறியாத வரையில் அதில் ,
லயித்திருக்க இயலாது .

லயித்திருத்தல் !

தியான வழி முறைகளிலும்
ஞானவழி முறைகளிலும்

தன்னை உணர்ந்த
பிறகு ,
மன இயக்கத்தையும் சிந்தனைகளையும்  ,
இருப்பு ஆற்றலையும் ,

ஒன்றாக இனைக்காமல்

சிந்தனை வயப்பட்டு
இருந்தாலும் ,
அதில் எந்த விதமான கவனத்தையும் செலுத்தாமல் ,

நீங்கள் உங்கள் இருப்பு ஆற்றலின்
மீதே உங்களின் முழு கவனத்தையும் செலுத்தி அதிலே லயித்திருக்க வேண்டும்.

இதற்கு ஒரே வழி
ஞானங்களை
கற்றுக் கொள்ள வேண்டும் ,

கற்றபின்
நிறுத்த வேண்டும்
"நிலை நிறுத்த வேண்டும்"

கற்றவைகளை
அனுபவிக்க தொடங்க வேண்டும்.

கற்பதை நிறுத்த வேண்டும் .

கற்பதை நிறத்தாத வரை சுயத்தில் லயிக்க முடியாது. 

கற்றவைகளில்
லயிக்க வேண்டும்

சிந்தனை சுழன்றடிக்கும் போது
அதை கவனிக்காமல்
உங்களது சுயத்தின்
இருப்பில் லயிக்க வேண்டும் !

சுயத்தின் இருப்பை
சத்தியமாக உணர்ந்து தெளிந்தால், சத்தியத்தில் சத்தியமாய் நிச்சயமாக லயித்திருக்கலாம்.

*சத்தியத்தின்* *சத்தியமான*
*வார்த்தை*.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.