நமச்சிவாய வாழ்க
"சிவ விலங்கு = மாடு"
சிவ விலங்கு ஏன் மாடு???
சிங்கம்- பிற உயிரைக்கொன்று உடல் வளர்க்கும்.
புலி-பிற உயிர்களைக்கொன்று உடல் வளர்க்கும்.
மயில்-பிற உயிர்களைக்கொன்று உடல் வளர்க்கும்.
எலி- பூமிக்கடியில் இருளிலேயே வாழும். (இருள் = அறியாமை)
யானை- மதம்பிடித்துவிட்டால் வளர்த்தவனையே தூக்கிப்போட்டு மிதிக்கும்.
கழுகு-பிற உயிர்களையும், இறந்த உடல்களையும் தின்று உயிர் வளர்க்கும்.
ஆனால்....... மாடு அப்படி அல்ல. ஈசனை என்குணத்தான் என்று கூறுவர். என்குணம் என்றால் எட்டு குணம். இயற்கை அறிவு, முற்றறிவு,
வரம்பில் ஆற்றல், வரம்பில் இன்பம், தூய உடம்புடைமை, இயல்பாகவே கட்டின்மை, பேரருளுடைமை, தன் வயமுடைமை. இந்த எட்டு குணங்களை கொண்டவர்தான் சிவபெருமான்.
இந்த எட்டு குணங்களில் ஒன்றான தூய உடம்புடைமை என்னும் குணத்தை இயற்கையிலேயே பெற்ற ஒரே விலங்கு மாடுதான்.
தூய உடம்பு என்றால், உடலிலிருந்து வெளியேரும் மலம் தனக்கும் பிறருக்கும் தீங்கு வளைவிக்காமல் இருக்கும் உடல் என்று அற்த்தம்.
மாட்டின் கழிவுகள் கிருமி நாசினியாக பயன்படுகிறது. பால் தயிர் மோர் வென்னை நெய் ஆகியவை பிறர் உடல் வளர்க்க உதவுகிறது. மாடு இறந்தபின்னர், அதன் தோலைவைத்து இசைக்கருவிகள் செய்ய பயன்படுகிறது. உழவுத்தொழிலுக்கு எருது பயன்படுகிறது.
ஆகையால்தான் சிவபெருமான் மாட்டை வாகனமாக கொண்டுள்ளார். இறைவனின் குணத்தை, அவர் கொண்ட வாகனமே பறைச்சாற்றும்.
நேசம் நிறைந்தவரின் வாழ்கை எப்போதும் பிறருக்கு பயனுல்லதாகவே அமையும். மாட்டின் இயல்பே நேசம். என்குணத்தில் ஒரு குணம் மட்டும் உடைய மாடு இத்தகைய தன்மை கொண்டதாக இருக்கையில், எட்டுகுணமும் கொண்ட ஈசனின் நேசம் எப்படி இருக்கும் என்பது உணர்ந்தவருக்கு மட்டுமே தெரியும்.
நாம் கேட்பதையெல்லாம் தந்து தந்து நம்மை அடிமைப்படுத்தி வைப்பது மாயை. மாயையிலிருந்து விடுவித்து என்குணத்தையும் நமக்கு தந்து நம்மை சிவமாக்கும் தன்மை சிவபெருமான் ஒருவரால் மட்டுமே முடியும்.
இதைத்தான் மாணிக்கவாசகர் " சித்தமலம் அறுவித்து சிவமாக்கி எனையாண்ட" என்று பாடுகிறார்.
நாமும் தயாராக இருந்தால், சித்தமலம் அறுத்து சிவமாக்க சிவபெருமான் காத்திருக்கிறார்.
சிவனை நினைப்பதும்
சிவனை உரைப்பதும்
சிவனடி சேரவே சீவித்திருப்பதும்தான் நாம் சிவமாகும் வழி.
இந்த வழியில் பயணிப்பதும் வழிபாடுதான்.
வாழ்தலே வழிபாடு. நமச்சிவாயம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.