Friday, 1 April 2016

வெற்று படகு

வெற்று படகு


ஒருவன் படகின் மேல் ஆற்றைக் கடந்து கொண்டிருக்கும் சமயம் ஒரு வெற்றுப்படகு  அவனுடைய படகை மோதினால் அவன் எவ்வளவு கெட்டகுணம்  உள்ள மனிதனாக இருந்தாலும் அவன் கோபப்படமாட்டான்.  ஆனால் அவன் அந்தப் படகில் யாரேனும் ஒருவர் இருப்பதைப் பார்த்தால் படகை சரியாக செலுத்தும்படி கூச்சலிடுவான்.அவன் கூச்சலிடுவது கேட்கப்   படாமல் இருந்தால் அவனைத் திட்ட ஆரம்பித்து விடுவான்.இவை ஏன் நடக்கிறது என்றால் எதிரே வந்த படகில் யாரோ ஒருவன் இருக்கிறான்.ஆனால் அந்தப் படகு வெறுமையாய் இருந்தால் அவன் கூச்சலிடமாட்டான்.கோபம் அடைய மாட்டான்.
எப்பொழுதெல்லாம்,யாரேனும் உங்கள் மீது கோபப்பட்டால் அல்லது யாராவது  உங்கள் மீது மோதினால்,நீங்கள் இதற்குப் பொறுப்பு அவர்தான் என்று எண்ணுவீர்கள்.இப்படித்தான் அறியாமை முடிவு செய்கிறது.இப்படித்தான் அறியாமை மாற்றிக் கூறுகிறது.அறியாமை எப்போதும் சொல்லும்,''மற்றவர்  தான் இதற்குப் பொறுப்பு.காரணம்''ஆனால் விவேகம் சொல்கிறது,''மற்றவர்கள்தான் இதற்குப் பொறுப்பு,காரணம்  என்றால் நானும் இதற்குப் பொறுப்பாவேன், காரணமாவேன்.''மோதலைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி,'நான்'அங்கு இல்லாமல் இருப்பதுதான்.;நான்;பொறுப்பு என்று சொன்னால் ஏதோ நீங்கள் செய்து விட்டதாகப் பொருள் அல்ல.நீங்கள் ஏதும் செய்யாதிருக்கலாம்.ஆனால் அங்கே நீங்கள் இருப்பது ஒன்றே போதுமானது,அவர்கள் கோபமடைய.நீங்கள் நல்லது செய்கிறீர்களா,கெட்டது  செய்கிறீர்களா என்பது கேள்வி அல்ல.நீங்கள் அங்கு இருக்கிறீர்களா என்பதுதான் கேள்வி.''நீ உன்னுடைய படகை வெறுமையாக இருக்கச்செய்ய முடியுமானால் இந்த உலக ஆற்றைக் கடக்கும்போது ஒருவரும் உன்னை எதிர்க்க மாட்டார்கள்.உன்னை ஒருவரும் துன்புறுத்தமாட்டார்கள்.''

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.