Friday, 1 April 2016

அன்பு

அன்பு என்பது ஒரு சுதந்திரமான மலர்:

எப்போது மனிதன் பிறரிடமிருந்து அன்பை எதிர்பாராது,

தான் பிறரிடம் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறானோ,

அப்போது தான் அவன் முதிர்ச்சியடைந்தவனாகிறான்.

அவனிடம் ஏற்படும் அன்பு நிறைந்து வழிகிறது.

ஆகவே அதைப் பிறருக்கு பங்கிட்டு வழங்கி மகிழ முற்படுகிறான்.

அவன் பிறரைச் சார்ந்து இல்லை.

அடுத்தவர் அன்பு செலுத்தினாலும்,செலுத்தாவிட்டாலும்,அவன் அன்பைக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

ஒரு அடர்ந்த காட்டில் யாருமே புகழ்வதற்கு இல்லாத

நிலையில்,யாருமே அதன் நறுமணத்தை அறியாத

தன்மையில்,அது எவ்வளவு அழகானது என்று சொல்ல யாரும்

இல்லாத நிலையில் அதன் அழகைக் கண்டு

ஆனந்தமடைய,பங்கிட்டுக் கொள்ள யாரும் இல்லாத வெறுமை

நிலையில் ,ஒரு அழகிய மணமுள்ள மலர்ந்த மலருக்கு என்ன

நேரிடும்?அவை மலர்ந்து கொண்டேதான் இருக்கும்.

அதைத்தவிர அதற்கு வேறொன்றும் தெரியாது.

அது எப்போதும் தனது மகிழ்ச்சியைக் கடவுளுக்கு

அர்ப்பணித்துக் கொண்டேதான் இருக்கும்.

நீங்கள் அன்புக்கு பிறரை சார்ந்து இருந்தால் அது எப்போதும்

துன்பத்தையே கொடுக்கும்.

ஏனெனில் சார்ந்து இருப்பது ஒரு வகை அடிமைத்தனம் தான்.

பிறகு ,நீங்கள் உங்கள் ஆழ்மனதில் அவரை வஞ்சம் தீர்க்க முயல்கிறீர்கள்.

வழி தேடுகிறீர்கள்.

ஏனெனில் நீங்கள் சார்ந்திருந்த அவர், உங்களை ஆதிக்கம்

செலுத்த அதிகாரம் உடையவராகிறார்.

பிறர் தன்னை அதிகாரம் செய்வதை யாருமே விரும்ப
மாட்டார்கள்.

அந்த நிலையில் அன்பு பரிமாற்றம் எப்படி ஏற்படும்?அன்பு என்பது ஒரு சுதந்திரமான மலர்.

---ஓஷோ Jore Buddhan

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.