Monday, 4 April 2016

நம்மை நாமே செதுக்கி சிற்பமாவோம் !

நம்மை நாமே  செதுக்கி சிற்பமாவோம் !

ஒரு மனிதனின் வாழ்வு உயிர்ப்பு தன்மையுடன் இருக்க வேண்டுமாயின் அவனது வாழ்விற்கு தேவையான அனைத்து விஷயங்களும் எளிமையாக கிடைத்துவிடக்கூடாது.அவன் தனது அடிபப்படை விஷயங்களுக்குகூட போராடி கஷ்டப்பட்டுதான் பெற வேண்டும்.

அவ்வாறு போராடி அதற்காக முயன்று அதை அடையும்போது கிடைக்கும் மன நிறைவுக்கு ஈடு இணையில்லை.

எல்லா வசதிகளும் நினைப்பதற்கு முன்னே எவ்வித போராட்டமும் இல்லாமல் பெறப்படுவனுக்கு அடிப்படையாக பெறவேண்டிய
மன நிறைவு என்பது கிடைக்காமல் போய்விடுகிறது.

எனவே இறைவன் நம்மை மட்டும் வசதி குறைவான இடத்தில் பிறக்கவைத்து விட்டான் என தினந்தோறும் எண்ணி வருந்திக்கொள்ளாதீர்கள்.இறைவன் உயிர்ப்பு தன்மையுடையவானாக இருக்கும்படி உருவாக்கியிருக்கிறான் என இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

இந்த இடத்தில் கவிஞர் தாராபாரதியின் கவி வரிகள் பொருத்தமானதாக இருக்கும்.

"வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் எல்லாம் மூலதனம்" என்றார்.

எனவே கஷ்டப்பட்டு ஒரு உயரிய நிலையை அடைபவனைதான் காவியஙகளும்,கதைகளும் கதாநாயகர்களாக்குகிறது.கடினமாக உழைத்து பெறும் ஊதியத்தில் ஒரு ஆடை அணியும்போது கிடைக்கும் மனதிருப்திக்கு ஈடுஇணையில்லை.இது எந்த செல்வந்தர் குழந்தைகளும் அடைய முடியாத சொத்து ஆகும்.இதேபோல ஒரு ஆண்டு முழுவதும் கடினமாக உழைத்து படித்து ஒரு மாவட்ட/மாநில அளவில் முதலிடம் பெறும் போது அடையும் மனநிறைவுக்கு ஈடு இணையில்லை.

ஒரு மனிதன் ஒரு துறையில் வெற்றி பெற வேண்டுமாயின் அது சம்பந்தமான மனதிற்குள் திட்டத்தை மனதிற்குள் திடமாக முடிவு செய்து நாளும் அது பற்றிய சிந்தனையிலும் மற்றும் முயற்சியிலும் ஈடுபடவேண்டும்.

கவிஞர் ப.விஜய் கூறியதுபோல

"ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்" எனவே தினமும் அதற்கு தேவையான மனப்பயிற்சி அவசியம செய்ய வேண்டும்.

நமது மனது ஆழமாக எந்த துறையை விரும்புகிறதோ அந்த துறைதான் வெற்றி பெற உகந்த வழியாகும்.எனவே அந்த மனம் சொல்லும் வழியை தேர்ந்தெடுப்பதில்தான் நமது வெற்றியின் ரகசியமே இருக்கிறது.

நாம் தினந்தோறும் காலை எழும்போதும்,படுக்க செல்லும்போதும் நாம் எந்த துறையில் வெற்றி பெற விரும்புகிறோமோ அதை பற்றிய எண்ணத்தை மனதில் விதைத்து அதில் வெற்றி அடைந்துவிடப்போவதாக அதாவது "ஐ கேன் வின்" என சொல்லி பழக்கி ஆழ்மனதில் பதிய வைக்கும்போது அது கட்டாயம்  ஒரு நாள் வெற்றியை நோக்கிய பாதையில் நம்மை இட்டு செல்லும் என உளவியல்  நிபுணர்களின் கருத்தாகும்.

நாம் எதை விதைக்கிறோமோ அதற்கான பலனை அறுவடை செய்வதுபோல மனதிற்குள் எதை விதைக்கிறோமோ அதுவே விருட்சமாக வளரும்.ஆதலால்.நம்பிகக்கையை விதைப்போம்.

எனவே நமக்குள் எழும் தேவையில்லாத எண்ணங்களையும் ,சிந்தனைகளையும் செதுக்கி நம்மை நாமே சிற்பமாக மாற்றி கொள்வோம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.