Monday, 4 April 2016

1O8

👌👌👌🙏🙏🙏👌👌👌

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள்.

பிரார்த்தனை, வேண்டுதல் என்று  அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம்,

அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.

* வேதத்தில் 108 உபநிடதங்கள்.

சைவ,
வைணவ,
திவ்ய ஷோத்திரங்கள் 108.

* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.

* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.

* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108

* அர்ச்சனையில் 108 நாமங்கள்

* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.

* சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.

ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும்  அமைகின்றன.

* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.

* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108

* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும்.

இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள  வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

* முக்திநாத் க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.

* உத்தராகண்டில் "ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் " 108 சிவசந்நிதிகள்.

* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.

* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.

* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.

* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

108 என்பது வரையறைக்குட்பட்ட  எண்ணாக இருந்து கொண்டு ,

வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.

"" 1 "" என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் ,

"" 0 ""என்பது சூன்யத்தை அல்லது  ஆன்மிகச் சாதனையில் முழுமையையும்,

"" 8 "" என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்

👌👌👌🙏🙏🙏👌👌👌

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.