கடவுள் ஒருதரம் உலகத்துக்கு வந்த போது நடந்த கதை இது....
கடவுளாகவே இருந்தாலும் நம்ம ஊருக்கு வந்ததால பசி தாகம் தூக்கம்னு எல்லாம் அவரும் அனுபவிக்க வேண்டியதாப் போச்சு.....
அப்படி பசியோட நடந்து போய்க்கிட்டு இருக்கும் போது ஒரு பால்காரன் வீடு கிட்ட இருந்தாரு கடவுள்...
பால்காரன் கிட்டப் பால் கேட்ட போது அவன் அவர ஏற இறங்க பாத்துட்டு ஏதோ டிராமா பார்ட்டின்னு முடிவு பண்ணி வேற வீடு பாருன்னு அலட்சியமாச் சொல்லிட்டுக் கதவை சாத்திக்கிட்டுப்
போயிட்டான்.
கடவுள் கடுப்பாயிட்டரு...
கடவுள் இன்னும் கொஞ்சம் நடந்த போது ஒரு சோம பானக் கடை இருந்தது... (அதாங்க அந்தக் காலத்து டாஸ்மாக் பார் )
தாகம் தணிக்க ஏதாவது குடுன்னு கடவுள் கேட்டதுக்கு அவரு வாய் நிறைய உள்ளார வாங்கன்னு ரொம்ப மகிழ்ச்சியா அழைச்சிட்டு போயி சிறப்பு அறைல உட்கார வச்சிட்டு,
அவரு போட்டுருந்த நிறைய நகையில ஒன்னேஒன்ன மட்டும் (அதுவே எத்தனையோ பவுன் இருந்திருக்கும்) வாங்கிக்கிட்டு அதையும் உரசிப்பாத்து சோதிச்சுட்டு தான் கடைக்காரன் ரொம்ப சந்தோஷத்தோட கடவுளுக்கு இருப்பதிலேயே சிறந்த சோமபானங்களை வயிறு முட்ட குடிக்க குடுத்து அவர குளிப்பாட்டீட்டான்.....
கடவுள் களிப்பாயிட்டாரு....
அப்போ கடவுள்
"பசிக்குப் பால் குடுக்காத
நீ வீடு, வீடா அலைஞ்சு பால்
ஊத்துவாய்"ன்னு
பால் காரனுக்கு சாபமும்,
"என் தாகம் தணிச்ச உன் கடையைத் தேடி வந்து தங்கத்தை குடுத்தாவது
எல்லாரும் தாகம் தணிச்சுப்பாங்க" ன்னு
சோமபானக் கடைக்காரருக்கு வரமும்
குடுத்துட்டுப் போயிட்டாரு...!!
அதோட விளைவுகளைத் தான் இப்ப வரைக்கும் நாம எல்லாம் அனுபவிச்சிட்டு இருக்கோம்...!!!!
அவரு எப்போ திரும்பி வரப் போறாரோ...!?!
நம்ம நாடு எப்போ உருப்படப் போகுதோ...???
Thursday, 9 June 2016
கடவுள் ஒருதரம் உலகத்துக்கு வந்த போது நடந்த கதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.