Tuesday, 7 June 2016

கடவுளைக் காண்பது

நாம் நம்முடைய உள்ளே இருக்கும்
கடவுளைக் காண்பது அறிவு

மற்றவரிடத்தில் உள்ள கடவுளை மறக்காமல் இருப்பது கருணை

உன்னுடைய அறிவு உனக்கு இன்பம்

உன்னுடைய கருணை மற்றவர்களுக்கு இன்பம்

உன்னிடம் 'நான் ' என்ற எண்ணம் மறைந்தவுடன்

உன் எதிரில் இருப்பது
கடவுள்தான்

கடவுள் என்பது உருவமில்லாத ஒரு சக்தி பிரவாகம்

நான் என்னும் எண்ணம் சரணாகதி யில் அழிந்து விடும்

அப்போது நீயும் கடவுளும் ஒன்றாகி விடுவீர்கள்

நீ கடவுளிடம் சரணடைந்தால்
உன்னிடம்

சூன்யம்
வெற்றுத் தன்மை
அமைதி
மௌனம்
ஆனந்தம்
பேரறிவு
இவைகள் ஏற்படும்

மனம் தர்க்கமாக இருக்கிறது

இதயம் அன்பாக இருக்கிறது

மெய்யிருப்பு தியானமாக உள்ளது

தியானத்தைக் கொண்டு உங்கள் மெய்யிருப்பை

உங்கள் உளதாம் தன்மையை (isness)
ஆராய்ந்து பாருங்கள்

ஒரே வீடுதான் உள்ளது

மனதுக்கு அது வீடு
இதயத்துக்கு அது குடும்பம்

மெய்யிருப்புக்கு அது கோயில்

ஓஷோ
💗💕💗💕💗💕💗💕💗

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.