கிருஷ்ணன் என்ற மனிதன்
.
ஓஷோ கிருஷ்ண தத்துவம்
உண்மையிலேயே, கிருஷ்ணனைப் புரிந்து கொள்வது கடினம்தான்.
ஒருவனுக்கு அமைதி தேவைப்படும்போது, அவன் இந்த உலகத்தை விட்டு ஓடிப் போவான் என்பதைப் புரிந்து கொள்வது சுலபம்.
ஆனால், நெரிசலான கடைவீதியின் மத்தியில் ஒருவனால் அமைதி காணமுடிகிறது என்பதை ஒப்புக் கொள்வது, உண்மையிலேயே கடினம்.
ஒருவன் தன் பந்தங்களிலிருந்து விடுபட்டுச் சென்றால்தான் மன அமைதி காணமுடியும் என்பது புரிந்து கொள்ளக்கூடிய விஷயம்.
.
ஆனால், உறவுகள், பந்தங்களின் நடுவே, ஒருவன் பற்றற்றவனாகவும், கள்ளமற்றவனாகவும் இருக்க முடியுமானால், உண்மையிலேயே அதைப் புரிந்து கொள்வது கடினம்தான்.
அது புயலின் நடுவில் உயிர்த்துடிப்புடனும் அமைதியாகவும் இருப்பது போல.....
காற்று, சூறாவளிகளிலிருந்து ஒதுங்கி, பாதுகாப்பான இடத்தில், ஒரு மெழுகுவர்த்திச் சுடர் அசையாமல் எரிவதைப் புரிந்து கொள்வது கடினமில்லை.
ஆனால், வீசும் சூறாவளிகளுக்கும், புயல்களுக்கும் நடுவே, அந்தச் சுடரை ஆடாமல், அசையாமல் எரிய வைப்பதை எப்படி நம்ப முடியும்.....???
ஆகவே, கிருஷ்ணனை நெருங்கியிருப்பவர்களாலும், அவனைப் புரிந்து கொள்வது கடினம்.
.
~~ஓஷோ~~
கிருஷ்ண தத்துவம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.