உயர்வு - தாழ்வு மனப்பான்மை - பகிர்வு
நீ நீயாக வாழ ஒப்பீடு கொண்ட உயர்வு தாழ்வு குணத்தை உடைத்து விட்டால் சாத்தியம்
எது உயர்வு தாழ்வு ??
தான் இருக்கும் நிலையை வைத்து பிற உயிரோடு, பிற பொருளோடு, பிற பதவியோடு, பிற தொழிளோடு, (பிற பிற என ) தன்னை வைத்து ஒப்பீடு செய்து அதில் ஏற்றத்தாழ்வை காணும் பொழுது ஏற்படக்கூடிய உணர்ச்சியே உயர்வு - தாழ்வு மனப்பான்மை ஆகும்
சமநோக்கு நிலை இல்லாத பார்வையே உயர்வு தாழ்வு மனப்பான்மையை மனம் உருவாக்குகிறது
சமநோக்கு இல்லாத நிலை என்பது உயர்வும் இல்லை
தாழ்வும் இல்லை- உள்ளது உள்ளவாறு அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலை
இந்த ஏற்றத்தாழ்வு இல்லாத நிலைகள் - சமநோக்கு நிலை எல்லாமே மாறி மாறி வருவது மனித இயல்பு தான் - ஆனால் இயற்கைக்கு ஒப்பீடு கிடையாது எனவே அங்கு ஏற்றத்தாழ்வுக்கு இடமே இல்லை
ஆனால் மனித மனம் எப்பொழுதும் ஏற்றத்தாழ்வு கொண்டே வாழ்கிறது காரணம் சதா நேரமும் தன்னை வைத்து வெளியேவும் உள்ளேயும் ஒப்பீடு செய்து கொண்டே இருக்கிறான்
இரண்டு விதமான ஒப்பீடுகள் நடக்கின்றன
உதாரணம்
1. வெளித்தோற்ற ஒப்பீடு
நீ தனக்கு உள்ள ஆடைகள் , அழகு ,பொருள்கள் , வீடு, தோட்டம் - தோரவு, தொழில் , கலை ,கல்வி ,திறமை என கண்ணை திறந்து பார்க்கும் அனைத்திலும் தனக்கென ஒரு மதிப்பை உருவாக்கி கொண்டு வாழ்வது
இந்த மதிப்பு என்பது தனக்கு இருக்கும் குண்டு ஊசி முதல் தோட்டம் தோரவு வரை ஒரு ஒரு கோடி ரூபாய் தேரும் என்ற மதிப்பை தனக்கு உள்ளே ஒரு மூட்டையை மனதில் ஒட்ட வைத்து சுமந்து கொண்டு - அதை இன்னொரு சக மனிதன் உடன் ஒவ்வொன்றும் ஒப்பீடு செய்து அதில் குறைவாக இருந்தால் தாழ்வு மனப்பான்மையும் - உயர்வாக இருந்தால் உயர்வு மனப்பான்மையும் எழுந்து ஒரு மனிதனை மனிதனாக பார்க்காமல் பொருளாக பார்க்கும் மனோநிலையைக் கொண்டு வாழ்ந்து கொள்ளும் நிலையைக் உருவாக்கி வைத்து உள்ளாய்
இதனால் உனது மகிழ்ச்சியை இழந்து வாழ்கிறாய்
உன் car உடன் மற்ற காரை ஒப்பீடுவது
உனது பொண்டாட்டியை வைத்து இன்னொரு பெண்ணை ஒப்பீடுவது
உனது வீடு , furniture இவைகளை கொண்டு பக்கத்து வீட்டுடன் ஒப்பீடுவது
உனது அழகை வைத்து மற்ற நபருடன் ஒப்பீடு செய்கின்றாய்
உனது தொழில் , திறமை ,பணம் , கலை என அனைத்திலும் பிறருடன் ஒப்பீடு செய்து கொண்டே செல்கிறாய்
உனது பதவி வேலையை வைத்து உன்னுடைய சக வேலையாலை ஒப்பீடு செய்வது
இன்னும் ஏராளமான விஷயங்களை கொண்டு ஒப்பீடு செய்து கொண்டே செல்வது மூலம் நிறைவு சுத்தமாக இருப்பது இல்லை
இதனால் விசேஷங்களில் இன்னொரு மனிதனை மதிக்காமல் வரும் ஏளனம்
தரக்குறைவாக நடத்தும் மனபாங்கு
உணர்வுகளை புரிந்து கொள்ளாத நிலைகள்
2. உள் தோற்ற ஒப்பீடு
உனது குணங்கள் உடன் குணங்களை சதா எந்நேரமும் ஒப்பீடு செய்து கொண்டே இருக்கின்றாய் இதுவும் உனக்கு நிறைவை தருவது இல்லை,
காரணம் ஒப்பீடு என்ற இரட்டை தன்மையில் செயல் படுவது தான் காரணம்
இந்த நொடியில் இருக்கும் உனது துக்கம் மூலம் உன் சந்தோசத்தை ஒப்பீடு செய்கின்றாய்
இந்த நொடியில் இருக்கும் உன் சந்தோசம் மூலம் துக்கத்தை ஒப்பீடு செய்து கொள்கிறாய்
இது போல
உண்மை - பொய்,
காமம் - கற்புநெறி
கோபம் - பொறுமை,
இன்பம் - துன்பம் ,
ஒழுக்கம் - ஒழுக்கம் இல்லை,
பற்று - ஈகை
புகழ் - இகழ்தல்
சுறுசுறுப்பு- சோர்வு
குழப்பம் - தெளிவு
பொறாமை - போட்டி
உணர்ச்சி - உணர்வு
விருப்பு - வெறுப்பு
ஏன் ஆன்மீக ஞான வெளிப்பாடுகளை கூட இன்னொரு நபருடன் ஒப்பீடு செய்யும் முட்டாள் தனமான விஷயங்கள்
அது போல ஆன்மீகத்தில் நான் இந்த நிலையில் உள்ளேன் அவர் அந்த நிலையில் உள்ளேன் என்ற முட்டாள் ஒப்பீடுகள்
ஏனெனில் உணர்வுக்கு நிலைகள் இல்லை
என உனது உள் குணங்களை ஒன்றிலிருந்து ஒன்றை ஒப்பீடு செய்து கொண்டே அதில் ஏற்றத்தாழ்வையே உனக்கு உள்ளே கண்டு கொண்டு இருக்கிறாய்
இந்த இரட்டை தன்மை இருப்பதால் நீ எந்த ஒரு தனிப்பட்ட குணத்திலும் முழுமையாக வாழ முடிவதில்லை- இதனால் உன்னை நீ ஆழமாக கவனிக்க முடிவதில்லை
வெளித்தோற்ற ஒப்பீடு குறைக்க உனக்கென உனது அடிப்படை தேவைகளை நிர்ணயம் செய்து இது இருந்தால் போதுமானது என்ற நிலைக்கு உனது உள் நிலையை வாழ்ந்து பார்த்து செதுக்கி கொள்
உள்தோற்ற நிலையை ஒப்பீடு செய்யாமல் இருக்க இந்த நொடியில் நிகழும் ஒரு குணத்தினை மட்டுமே ஆழ்ந்து கவனிக்க தொடங்கி அதன் வேர் வரை செல்ல முயற்சி செய்
உயர்வு தாழ்வு மூலம் ஏற்படும் உடல் ரசாயன மாற்றம்
நிறைவு இல்லாத நெஞ்சில் பாரம் , பொறுக்க முடியாத எரிச்சல், வெறுப்பு கொண்ட கோப வார்த்தைகள் மூலம் சூடு, தன்னை நியாய படுத்தி கொண்டே இருக்கும் நிலை மூலம் வரும் பரபரப்பான ரத்த ஒட்ட அதிகரிப்பு , தலை பாரம், என சொல்லிக் கொண்டே போகலாம்
இது உன் உள் உணர்வுகளுக்கு பொருந்தாத நிலை என்பதை உணர முடியும்
இவை அனைத்தும் உனது வாழ்வில் நிகழும் மனதின் அடிப்படையில் வரக்கூடிய ஒரு மேலோட்டமான நிகழ்வு இதில் சலிப்பை - வெறுப்பை ஏற்படுத்திக் கொள்ள அவசியம் இல்லை
நீ சலிப்பை அல்லதை வெறுப்பை ஏற்படுத்திகொள்ள அவசியம் இல்லை ஆனால் அது உனது இயல்பில் ஒப்பீடு மூலம் சலிப்பை ஏற்படுத்தும்
இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஒப்பீடு மூலம் வரும் சலிப்பையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள பழகு
இந்த பழக்கம் எதோ ஒன்றில் ஆழ்ந்து கவனிக்க துவங்கி விடும்
இந்த கவனிப்பு என்பது தியானத்தன்மையில் இருக்கும் பொழுது வரக்கூடிய ஒன்று
தியானத்தன்மையை நீ உருவாக்க தேவை இல்லை நீ தினசரி செய்யும் தியான உணர்வுகள் மற்ற நேரங்களிலும் உனக்கு உள்ளே இருந்து உனக்கு உதவி கொண்டே இருக்கும்
உனக்கு நீயே உதவியாக இருந்து உன்னை ஓரே நிலையில் இருந்து கவனிக்க தியானத்தில் ஆழ்ந்து செல்வதை தவிர வேறு எதுவும் இல்லை
ஒப்பீடு என்ற தன்மையை உனக்கு உள்ளே உடைத்து
சமநோக்கம் - நேர்நிலை - சமநிலை உணர்வு என்ற விழிப்புணர்வு என்பது இந்த அடிப்படையில் வருவது தான்
எனவே விழிப்புணர்வு ஆழமாக மலர ஆழ்ந்த தியானம் கொண்ட கவனிப்பு தான் உனக்கு துணை என்ற அடிப்படையை புரிந்து கொண்டு பயணம் செய்
வாழ்வு எப்பொழுதும் சாந்தோசமே - கொண்டாட்டமே
நீ நீயாக வாழ ஒப்பீடுகளை கொண்ட உயர்வு தாழ்வு குணத்தை உடைத்து விட்டால் சாத்தியம்
நன்றி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.