Friday, 3 June 2016

எல்லாம் மாறும்

குற்ற உணர்வு - பகிர்வு

நீ நீயாக வாழு என்ற ஓஷோ வின் அற்புதமான உணர்வுகள்

சுயமாக சிந்தித்தே  நீ தெளிவாய் மகரிஷி யின் உணர்வுகள்

இவை இரண்டின் அடிப்படையில் ஆழமாக உள்ளே போகும் பொழுது குற்ற உணர்வை உடைக்க முடியும்

இந்த அடிப்படையின் மூலம் என்னை நான் பார்த்ததையும் - என்னை சுற்றி உள்ள பொதுவான சூழ்நிலைகளை கொண்டு  நான் கண்ட அனுபவ விஷயத்தை எழுதி உள்ளேன் 

உன்னை நீ அடக்கி வைத்துக்கொள்ளும் நிலைகளில் - பிறர் உன்னை அடக்கி ஆழ நீ உன்னை அறியாமல் பயத்தைக் கொண்டு அடி பணிந்து  அறியாத நிலைகளில் குற்ற உணர்வு எழுகிறது

நீ நீயாக இல்லாத பொழுதே குற்றஉணர்வு உன்னை தொத்திக் கொள்கின்றது

இதற்கு அடிப்படையான விஷயம் உனது பயம் தான்

பயத்தின் அடிப்படை உன்னை பற்றிய உண்மையை நீ அறியாத நிலையில் இருப்பதுவே

உன்னை நீ இழக்கும் இடங்களில் நீ குற்ற உணர்வு கொண்ட குற்றவாளி வாழ்க்கை வாழ்கிறாய்-
உனது சுதந்திரமான வாழ்க்கைக்கு குற்ற உணர்வு தான் மிக பெரிய தடை என்பதை உணரும் பொழுது - அதை உடைக்கத் தயாராகும் நிலை ஏற்படும்

பெரும்பாலும் குற்ற உணர்வு பிறக்கும் இடம் ஒழுக்கம் பற்றிய உபதேசங்களை திணிக்கும் பொழுது அவன் ஏற்கனவே இருக்கும் நிலையை வைத்து ஒப்பீடு செய்யும் பொழுது - ஐயோ  நம்ம இப்படி இல்லையே என்ற அடிப்படையில் தன்னை தானே  ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் வரும் உணர்வு குற்ற உணர்வுகளாக மலர்கின்றது

இந்த குற்றஉணர்வு என்பது ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலில் நிற்க முடியாமல் தவிக்க கூடிய நிலை - இது தன்னை வாழவே விடாது

எப்பொழுதும் மனம்  தன்னை நடந்து முடிந்த செயலை வைத்து தனக்கு தானே குத்தி குத்தி காண்பிக்கிற நிலை ஆகும்

இதனால் நிகழ் காலத்தில் இருக்கும் சந்தோஷத்தை முற்றிலும் தனக்கு தானே ஒழித்து வாழ கூடிய நிலையில் சிக்கி தவிக்கும் முரண்பாடு ஏற்படுகிறது

இந்த சூழ்நிலையில் இப்படி இருக்க வேண்டும் என்று முன் கூட்டியே தீர்மானம் செய்து நடப்பது மாற்றி நடக்க நேரிடும் பொழுதும் ஏற்படுகிறது

முடிந்து போன நிகழ்வை வைத்து ஐயோ இப்படி செய்யாமல் விட்டு விட்டேன் என்ற ஏக்கம் கொண்ட நிலையில் வருவது குற்ற உணர்வினை கொண்ட அடிப்படை ஆகும்

எப்படி எல்லாம் குற்ற உணர்வு மலர்கின்றது என்பதை உதாரணம் கொண்டு பார்ப்போம்


உதாரணம்
--:-:-----

குருவின் பெயரை சொல்லியும் - குரு காணிக்கை நாம் செய்ய வேண்டும் என்ற வற்புறுத்தல் பேரில் குற்றஉணர்வை தூண்டி அதற்கு நீ முட்டாள் தனமான  அடிமை ஆவது,

செய்ய வேண்டிய விஷயத்தை சரியான நேரத்தில் தனது சோம்பேறி தனத்தில் செய்யாமல் இருப்பது மூலம் பின்னாடி அப்படி செய்திருக்க வேண்டும் என்ற நிலை

வேலை நேரங்களில் மொபைல் எடுத்து நோண்டி அந்த வேலையை சரியான நேரத்தில் செய்யாமல் பின்னாடி கூறு குறுக்கும் நிலை

ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருந்த நிலையை கொண்டு ஆன்மீக அமைப்புக்கு சென்ற உடனே கேட்கும் ஒழுக்க கோட்பாடு மூலம் தன்னை ஒப்பீடு செய்து தன் மேல் ஏற்படும் சலிப்பு ஓவ்வாமை

நல்லது - கேட்டது என்பதை கொண்டு ஏற்கனவே தீர்மானம் செய்த விஷயம் படி வாழ வலியுறுத்தி அதற்கும் நமது நிலைக்கும் சம்மந்தம் இல்லாமல் நடுவே சிக்கித் தவிக்கும் நிலை

கற்புநெறி உபதேசம் கேட்டு காம எண்ணங்கள் வரும் பொழுது

முறையான பயிற்சிகள்  சொல்லி தராமல் - வெளிப்படையாக காமத்தை பற்றிய தெளிவை கற்பிக்காமல் - இதற்கு முட்டு கட்டை போட்டு  வெறும் முட்டாள் தனமான உபதேசம் தந்து அதை வெறுத்து கொண்டு தன்னை புரிந்து கொள்ள முடியாத நிலையில் காம உணர்வுகளை சமன் செய்ய தனிமையில்   சுய இன்பம் மேற்கொண்ட இன்றைய ஆண் - பெண் தனது  தனிமையில் வருந்தும் நிலைகள்

வேலைகளை இப்படி தான் செய்து முடித்து ஆக வேண்டும் என்ற திணிப்பை கொண்டு நாம் மாற்றி செய்யும் நிலைகள்

பெரியவர் முன்பு நின்று பேச வேண்டும் அப்படி இப்படி இருக்க வேண்டும் என்று அடிமை படுத்தும் நிலைகள்

சாமி பெயர்களை சொல்லி இப்படி எல்லாம் பரிகாரம் செய்யவில்லை எனில் இப்படி நடந்து விடும் என்ற முட்டாள் வார்த்தைகளை கேட்டு நடக்கும் நிலைகள்

சடங்கு சம்பிரதாய முறைகளை கொண்டு அர்த்தமற்ற செயல்களை ஒருவன் செய்தது போல நீயும் செய்தாக வேண்டும் என்ற உயிர்ப்பு இல்லாத ரோபோ செயல்கள்

எப்பொழுதும் பயந்து வாழ்கிறாயோ அப்பொழுது எல்லாம் உன்னை குற்ற உணர்வு தொற்றி கொள்கின்றது

எப்பொழுது எல்லாம் ஒருவருக்கு அல்லது  சூழ்நிலைகளுக்கு  அடிமையாக மாறுகின்றார்யோ அங்கெல்லாம் உனது  வாழ்க்கை குற்ற உணர்விலேயே மிதந்து கொண்டிருக்கிறாய்

வசதி இல்லாதவனாக இருப்பது பெரிய குற்ற உணர்வாக தெரிகிறது

உன திறமையை மற்ற திறமைகளுடன் ஒப்பீடு கொள்ளும் பொழுது குற்றஉணர்வு மலர்கின்றது

நீ பொய் பேசும் இடங்களில் உனது உண்மை நிலை தெரியும் பொழுது தத்தலிக்கும் நிலைகள்,

உள் ஒன்று வைத்து வெளியே நல்லவன் போல உன்னை நீ காட்டிக் கொண்டு வாழும் நிலைகளில்,

100பொய் இருக்கும் இடங்களில் நீ ஒருவன் மட்டும் உண்மையாக இருந்து மாட்டிக்கொள்ளாதே என்று குற்றஉணர்வுடன் உன்னை நீயே அடக்கி கொள்வது

பொது சபையில் நீ ஏழையாக நிற்கும் நிலைகளில் முட்டாள் தனமான தாழ்வுமனப்பான்மை கொண்ட நிலைகள் குற்ற உணர்வை ஏற்படுத்தி கொள்கின்றது

ஒருவரை ஏமாற்றும் பொழுது உன் கண்கள் அவரை பார்க்க முடியாமல் தவிக்கும் நிலைகள்

நீ ஒழுக்க கோட்பாடுகளை கற்பித்து கொண்டு உன் செயல்களை எதிர்மறை கொண்டு யாருக்கும் தெரியாமல் மாற்றி செய்யும் நிலைகள்

உனக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயம் என்ற அடிப்படை மன நிலையில் வாழும் உனது உண்மையை பிறர் கண்டுகொள்ளும் பொழுது ஏற்படும் நிலைகள்

பக்கத்து வீட்டு குழந்தை பொறுமை மற்றும் படிப்பை ஒப்பீடு செய்து தன் குழந்தையை குற்றஉணர்வில் தள்ளுவது

என பல நிலைகளில் இந்த குற்றஉணர்வை ஒரு தனி மனிதன் பல்வேறு நிலைகளில் ஏற்படுத்திக் கொண்டு வாழ்கிறான்

உடல் ரசாயன மாற்றம்

தற்கொலை எண்ணங்கள் மூலம் உடல் நடுக்கம்  , மரணம் கொண்ட பயங்கள் மூலம் ரத்த அழுத்தம் , அடி வயிறு கலங்கிய பேதிகள் , பேச்சில் தடுமாற்றம் , உடலில் எப்பொழுதும் சோர்வு

என பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதை காண முடியும்

இது உனது உள் நிலைக்கு மிகவும் பொருந்தாத ஒரு நிலை - இதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத நிலைகள் மூலம் உன்னை நீ இழப்பது போன்றவையை உணரும் பொழுது

-------------

குற்ற உணர்வு என்பது ஒரு நோய் அதை முழுமையாக புரிந்து கொள்ள அடிப்படையான உண்மை நிலை வாழ்க்கையை உணர வேண்டும் என்று ஒவ்வொரு சூழ்நிலையிலும் தனித்துவமான நிலையில் இருந்தால் தான் இது சாத்தியம்

உனது சுதந்திரமான வாழ்க்கைக்கு குற்ற உணர்வு தான் மிக பெரிய தடை என்பதை உணரும் பொழுது அதை உடைக்கத் தயாராகும் நிலை ஏற்படும்

அப்படி உடைக்கத் தயாராகும் நிலையில் ஒவ்வொரு செயலிலும் இயற்கையில் என்ன அடிப்படையில் உண்மை நிலை வைத்து உள்ளது

அதை மனிதன் புரிந்து கொள்ளாமல் எப்படி எல்லாம் முட்டாள் தனமான செயல்களை வடிவமைத்து மறைத்து துன்ப நிலையில் உள்ளான்

அதில் நீ எப்படி சிக்கித் தவித்து கொண்டு உன்னை நீ இழந்து கொண்டு வாழ்கிறாய் என்பதை ஒவ்வொரு செயலிலும் மிக நுட்பமாக உணர்ந்து கொண்டு வாழ முடியும்

இதற்கு அடிப்படை விஷயம் தியானம் தான்

தன்னிலை உணர தியானம் தான் உதவும்

தன்னிலை உணர உணர குற்ற உணர்வுகள் இயல்பாக மறைந்து கொண்டே செல்கின்றது

ஒரு விபச்சாரி ,கொலைகாரன் , தேச த்ரோகி, என யாவரும் தன்னிலை உணர்வை உணர தயார் படுத்திக் கொண்டு  உணரும் நிலையில் ஞானத்தன்மை அடைகிறான்

அதற்கு அடிப்படையில் தன்னை தான் முழுமையாக இருக்கும் நிலையை மறுக்காமல்  ஏற்றுக்கொண்டு பழைய நடந்த குப்பைகளை உடைத்து விட்டு தன்னுணர்வு கொண்ட  புது மனிதனாக வாழும் நிலையில் பெறுகின்றான்  

உண்மையில் இவர்கள் வெளிப்படையாக செய்வது மூலம் அதை ஏற்றுக்கொள்ள நினைப்பதுமே மாற்றத்தை தருகிறது

ஆனால் எல்லா வற்றையும் மறைத்து நல்லவன் போல  வாழ்பவன் உள்ளே குற்றவாளி ஆகவும் ,விபச்சாரிகள் ஆகவும் ,திருடர்கள் ஆகவும் மரண வாழ்க்கையை வாழ்ந்து சாகின்றனர்

வெளிப்படையே உன்னை மாற்றும்

அடக்கி வைப்பது உன்னை நீயே தற்கொலையாளன் ஆக்கிக் கொள்கிறாய்

உன்னை உணர்ந்து கொள் எல்லா குப்பைகளுமே உன்னை விட்டு ஓடி விடும்

நீ சுதந்திரமான சந்தோஷத்தை பெற்று விடுவாய்

தியானம் செய் எல்லாம் மாறும்

நன்றி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.