👌👌👌🙏🙏🙏🙏👌👌👌
👉 சித்தர்களின் ஒளி உடல் ரகசியங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்வுலகில் மனிதன் முதலில் "ஒர் அறிவு " உயிராக தான் தோன்றுகிறான்.
பிறகு படிப்படியாக இறைவனின் அருளால் பரிமாண வளர்ச்சிபடி ,
""ஆறறிவு "" உள்ள மனிதனாகிறான் .
"ஒரு உயிருக்கு ஐந்து அறிவு உள்ளவரை"
பெரிதாக கர்மவினை எனறு ஒன்றுமில்லை,
ஆனால் சிந்திக்கும் தன்மை என்கிற "ஆறாவது அறிவு" (மனிதனாக)கொடுக்கப்பட்ட உடனே ,
அந்த உயிர் தனிப்பட்ட முறையில் செயல்பட ஆரம்பிக்கிறது .
குணபேதங்களால் நன்மை தீமைகளில் ஈடுப்படுகிறது .
அதன் விளைவால் அந்த உயிருக்கு கர்மவினைகள் ஏற்படுகிறது .
அதை அனுபவிக்க ,
அந்த உயிர் அதற்கு தகந்தால் போன்ற சூழ்நிலைகளில் பிறவி எடுக்கிறது .
ஆதி சூன்யத்தில் இருந்த உயிருக்கு ,
இறைவன் மனித பிறவி கொடுப்பதன் நோக்கமே,
அந்த மனிதன் முழு
விழிப்பு தன்மை உண்டாகி,
இறைவனோடு இரண்டற கலப்பதற்கே,
மனிதனுக்கு என்ன வேண்டும்?
சித்தர்கள் காட்டிய வழியில் யோகத்தின் மூலம் பெறப்படுகிற "ஒளி " உடல் வேண்டும் .
உடல் என்பது ஸ்தூலமாகும் .
உயிர் என்பது சூட்சுமமாகும் .
இந்த உயிரின் தன்மையை,
"யோகத்தின்" மூலம்உடலுக்கு ஏற்ப்படுதினால் கிடைப்பது
""ஒளி ""
உடல் ஆகும் .
இதுவே சித்தர்களின் ,
""யோக ரகசியமாகும்""
"யோகம் "என்பது நம் உடலை கடந்து உயிரின் முழு 'விழிப்பு' தன்மையோடு ,
இணைந்து இருப்பதாகும் .
இந்தஉயிரின் அதே சூட்சும தன்மையை,
நம்முடைய ஸ்தூல உடலுக்கும் ஏற்படுத்தும் போது,
உயிரின் தன்மையை உடலும் அடைந்து ,
"ஒளி "உடல் பெறுவதாகும்.
நம்முடைய உயிரின் பல சூட்சும பகுதிகளை,
யோகத்தின் மூலம் நாம் இயக்கி,
அந்த சூட்சும பகுதிகளோடு தொடர்பு கொள்ளும் போது இப்பிறவி என்பது,
நமக்கு முதலில் கொடுக்கப்பட்ட பிறவி இல்லை என்பதுவும்,
பல பிறவிகள் கடந்து வந்த நிலையையும்,
அந்த பலப்பிறவிகளின் காரண காரிய கர்மவினைகளின்
படியே ,
நம்முடைய ஒவ்வொரு பிறவியின் அனுபவமும் இருக்கின்றது என்கிற உண்மையை உணரும் போது ,
உயிர் தன்னுடைய இயல்பு தன்மையான 'விழிப்பு" தன்மையைஅடைய துவங்குகிறது .
வாழ்வின் அனுபவங்கள்,
ஒவ்வொருவரையும் விழிப்பை நோக்கியே நகர்த்துகிறது .
விழிப்பின் அவசியமும் ஏன் நம்மில் அனைவருக்கும் தேவைப்படுகிறது?
வாழ்வின் இறுதி எல்லை மற்றும் அதனுடைய பயன் குறித்து,
தெளிவுசெய்து கொள்ளும் அவசியமும்,
அதற்கு உதவுவதற்கு 'விழிப்பு ' தேவைப்படுகிறது .
"யோக விழிப்பின் "உதவியால் ஒவ்வொரு மனிதனும்,
தம்முடைய பிறவியின் அடிப்படையை பற்றியும்,
மரணம் மரணத்துக்கும் அப்பால் எனவும்,
அதற்கு மேலான உயரிய நிலைகளுக்கு மாறும் பொழுது
மரணமிலாப் பெருவாழ்வு என்கிற உயிரின் அமரத்துவம் குறித்து தெரிந்து கொள்ளும் அவசியமும் ஏற்படுகிறது.
வாழ்வின் மிக உயர் நிலையான இறவாப் பெருநிலை என்கிற நிலையில் தான் ,
மரணத்தை தவிர்த்து அனைத்து சித்தர்களும்,
அமரத்துவம் பெற்று உடலும் உயிரும் ஒன்றிய நிலையில் இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகின்றனார் .
அவர்களின் நிலை எப்படிப்பட்டதாகஇருக்கும்?
பிறப்பு ஏற்படுவதற்கு முதல் உதவியாக அமைந்த "ஒளி" அணுக்களால் ஆகிய "ஒளி"
உடலையே தன்னுடைய
உடலாக உருமாற்றம் அடைந்தவர்கள் சித்தர்கள்.
சித்தர்கள் யாரும் ஒரு போதும் மரணத்தை சந்திப்பதே கிடையாது!
இறந்தால் பிறந்தாக வேண்டும்!
அது போலவே பிறவாமல் இருக்க வேண்டுமென்றால்,
நாம் முதலில் இறவாமல் இருக்க வேண்டும்.
அப்பொழுது தான் பிறவி என்னும் நிலை நமக்கு ஏற்படாது.
இந்த நியதிக்கு மாறாக,
உடலளவில் மரணத்தை அடைந்தவர்கள்,யாரும்,
சித்தர்கள்'என்று குறிப்பிட முடியாதவர்கள் ஆகிறார்கள்.
சித்தர்கள் இன்றும் கூட இறப்பின் தொடர்புக்கே செல்லாமல்,
இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சித்தர்களும் நம்மை போலவே சரசரியான உடலோடு இவ்வுலகில் பிறந்தவர்களே.
''அவர்களுக்கு ஏற்பட்ட உண்மை ஞானியரின் தொடர்பு,
அவர்களைமெல்ல மெல்ல மரணமிலா நிலை வரை கொண்டு சென்று இருக்கிறது.
சித்தர்களின் உடல் மிக உயர்ந்த "ஒளியின்" தன்மைக்கு ஏற்றவகையில்,
"யோகத்தின்" மூலம் மாற்றப்பட்டுஇருக்கிறது.
அவர்களின் உடல் "ஒளி" ஊடுருவும் தன்மையில் இருப்பதால்,
"ஒளி " அவர்களின் உடலில் உள்ளே சென்று வெளியே போய் விடும்.
"சுத்த சத்துவ உடல்''என்னும் நிலை,
"ஒளி" ஊடுருவும் தன்மைக்கு மாற்றப்பட்டு இருக்கும்.
இதன் காரணமாகவே சித்தர்களின்,
உடல் நம்முடைய பார்வைக்கு தெரியாமல் மறைந்து இருக்கிறது.
ஆனால் எந்தவிதமான குறைவும் அடையாமல்,
நம்முடைய அருகிலேயே இருந்து வருபவர்கள் சித்தர்கள்.
ஏன் ஒளி ஊடுருவும் தன்மைக்கு உடலை,
மாற்றி அமைக்கிறார்கள் சித்தர்கள் ?
நம்முடைய தற்போது உடலின் அணுக்கட்டமைப்பின் நிலை வேறாகவும்.
உயிர்என்னும்,
ஆற்றலின் அடிப்படையின் தன்மை வேறாகவும் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த உடல் உயிர் என்கிற இரு வேறுப்பட்ட இரண்டு தன்மைகளை மாற்றி,
அதாவது உயிரின் தன்மைகே உடலையும் மாற்றுகிறார்கள்.
இந்த மாறுபாடு உயிரின் அடிப்படை நிலையான அருவ நிலைக்கு உடலும் மாறுகிறது.
இதனால் உயிர் நம் கண்களுக்கு எப்படி தெரியாமல் மறைந்து இருக்கிறதோ,
அது போல் உடலும்அருவ நிலையை அடைந்து மறைந்து போகிறது.
இந்த நிலையை அடைந்த சித்தர்கள் ,
நம்முடைய அருகிலே இருந்தாலும் கண்களுக்கு தெரிய மாட்டார்கள்.
"ஒளி அணுக்களின்" தன்மையை பெற்ற உடலில்,
சுவாசமும் தங்குவதில்லை !
"ஒளியும் " தங்குவதில்லை !
"ஒளி" நம்முடைய உடலில் தங்குவதாலும்,
அப்படி தங்கி அங்கு ஏற்படும் தடை காரணமாக திரும்பி பிரதிபலிக்கத் துவங்குவதாலும் தான்,
நம்முடைய உடல் பிறர் கண்களுக்கு பார்க்க கூடியதாக இருக்கிறது.
சித்தர்கள் விரும்பினால் அவர்களது உடல்வடிவ நிலையை,
நமக்கு பார்க்கும்படி மாற்றி கொள்ளவும் முடியும்.
இதற்குஅவர்களுக்குள் முழு அளவில் இயங்கி கொண்டு இருக்கும்
"ஆதார மையங்கள்"உதவி செய்கிறது.
"யோக ஆதார தளங்கள்"
அனைத்திலும் உயிரின்
"ஒளி ஆற்றலே" நிறைந்து இருக்கிறது.
இந்தஆற்றலை புருவ மைய பகுதியின் வழியாக வெளியே வர வைக்க முடியும்.
அப்பொழுது அவர்களது உடலில் இருந்து,
நாம் காணும் வகையில் "ஒளியானது" வீச துவங்கும்.
இதன் காரணமாகவே சித்தர்களை தரிசனம் செய்தவர்கள்,
சித்தர்கள் "ஒளி" பொருந்திய சாரீரத்துடன் இருந்ததாக கூறுவார்கள்.
""ஒளியாற்றல்""
மூலாதாரத்தில் இருந்து உள்முகமாக மேலேறி திரும்புவதால்,
"ஒளி " உடலின் உள்பகுதியில் தங்கிவிடுகிறது.
இதனை திரும்பவும் மூலாதாரத்தை நோக்கி,
""ஒளி "" அடையும்படி மாற்றி அமைக்கும் போது,
சித்தர்கள்உடல் நமக்கு தெரிய துவங்குகிறது.
உடல், உயிர் , யோக ஆதார தளங்கள் ,
என்று அனைத்திலும் "ஒளியின்" அணு ஆற்றலே நிறைந்து இருக்கிறது.
இதுவே அனைத்திற்கும் மூல ஆற்றலாகும்.
ஆம் . . .
🙏ஒளியே🙏
பிரபஞ்ச படைப்பு அனைத்திற்கும் ஆதாரமாகும்.
இந்தஆதார "ஒளி "ஆற்றல் நாம் பார்க்க கூடிய நிலையில் இருக்கும் போது,
அதனுடைய மூல தன்மையை இழக்கிறது.
இதுவேதூய்மை விலகிய நிலை ஆகும்.
இதே ஆற்றல் மறுபடியும் தன்னுடைய 'ஆதி' தன்மையை பெறும் போது,
தூய்மை பெறுவதாக சித்தர்கள் கூறுகிறார்கள்.
கண்களால் காண கூடிய நம்முடைய உடலை வள்ளலார்
""இருள்தேகம்""
எனவும்,
ஒளியின் மூலம் தூய்மை பெற்ற உடலை
""அருள்தேகம்""
எனவும் கூறுகிறார்.
ஒளியே நாம் காணும் அனைத்து பொருள்கள் உள்பட,
நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்,
என்றுபஞ்சபூதங்கள் வரை அடிப்படை ஆற்றலாக இருந்து இயங்கி வருகிறது.
ஒளியின் இயல்பு தான் சேரும் பொருள் அல்லது,
""பஞ்சபூத ""
ஆற்றலை தனது தூய்மை நிலைக்கு ஏற்ற வகையில்மாற்றி அமைக்கிறது.
இந்த மாறுதல் சித்தர்களின் உடலில்,
அவர்களால் கட்டுப்படுத்தபட்ட நிலையில் ஏற்படுவதால்,
அவர்கள்உடல் முழுவதுமாக மாறிவிடுகிறது.
நமது உடலில் ஒளி கட்டுப்படுத்தப்படாத நிலையில் இயங்குவதால்,
நம்முடைய உடல் சாதரணமாகவே இருக்கிறது.
'யோகம்' என்பதன் முழுமையான உள்ளர்த்தமும்,
சித்தர்கள் பெறுகின்ற இந்த தன்மையை குறிப்பிடுவதாகவேஇருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக
'யோகத்தை'
உடலையும் , உயிரையும்,
இணைக்கும் பயிற்சியாகவே சித்தர்கள் செய்துள்ளார்கள்.
யோகம் ஆகட்டும்,
பிராணயாமமாக இருக்கட்டும்,
இறைமையை அனுபவிக்க ஒளி உடல் தேவை.
அந்த ஒளி உடலை பெற்று மரணமிலாப் பெரும்நிலையை அடைய,
உருவாக்கபட்டதே சித்தர்களின் சாகக்கல்வி.
ஒளி உடல் என்கிற பூரண நிலையை பெறுவது,
அதனை தொடர்ந்து மரணமிலாப் பெருநிலை பெரும் வழிமுறையே,
அனைத்து ஆலய வழிபாட்டு முறைகளிலும் மறைமுகமாக நமக்கு உணர்த்தபடுகிறது.
நாம் அனைவரும் ஒவ்வொரு பிறவிகளிலும் நற்கர்மாக்களை செய்து,
🙏 சித்தர்களை போல் மரணமிலா பெருநிலையை அடைவோம்.
🙏ஹர ஹர மஹா தேவா 🙏
. 🙏திருச்சிற்றம்பலம்🙏
. 🙏ஓம் நமசிவாய🙏
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.