நான் யார்.......???
என்று எனக்குள் கேட்டால், ஒரு காலத்தில் நான் சுத்தவெளி.
சுத்தவெளியாக இருந்த நான் விழித்துக் கொண்டேன்.
ஏன் விழித்தேன் என்று எனக்கு தெரியாது.
விழித்த பிறகு தான் நாம் செய்யக்கூடிய வேலைகள் அனைத்தும் நினவிற்கு வரும்.
நான் என்னில் இருந்து ஆராய்ச்சி தோன்றுகிற போது, சுத்தவெளியில் இருந்து நான் வெளிப்படிருகிறேன் என்பதை விட, நான் சுத்தவெளியாக இருந்தேன்.
என்னவாக....???
அறிவு இல்லாதவனாக அறியாமையில் இருந்தேன்.
சுத்தவெளியில் அறிவு இருக்கிறது. ஆனால், அடக்கமாக இருக்கிறது.
அறிவு அடங்கி இருக்குமானால் அறியாமை.
அறிவு எழுச்சி பெருமானால் அறிவுடைமை.
எழுச்சி, அடக்கம் என்ற சொல்லினுடைய பொருளை புரிந்துகொள்ள வேண்டும்.
அறிவு அடங்குமானால் அறியாமை. அறியாமை என்றால் அறிவு இல்லை என்ற அர்த்தம் இல்லை.
அறிவு இருக்கிறது என்பதை அறியாத நிலை தான் அறியாமை.
நான் எப்படி இருந்தேன் ஊழிக்காலத்தில் நான் அறியாமையில் இருந்தேன்.
அதாவது என்னை நான் அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தேன்.
இப்போது என்னை அறிந்த பிறகு நான் எதுவாக இருந்தேன் என்று தெரிந்து கொண்டேன்.......!!!
நான் என்று கூறுவது என்னை மட்டும் அல்ல.......!!!
ஒவ்வொரு சுயத்தையும்........!!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.