Thursday, 30 June 2016

கர்ம வினைகள் நீக்கும் தானங்கள் !!

கர்ம வினைகள் நீக்கும் தானங்கள் !!!

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம்.  நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம்.

பொருட்கள்      -        தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்
  
அன்னம்            -         வறுமையும், கடனும் நீங்கும்

துணி                 -        ஆயுள் அதிகமாகும்

தேன்                  -       புத்திர பாக்கியம் உண்டாகும்

தீபம்                   -       கண்பார்வை தெளிவாகும்

அரிசி                  -       பாவங்களை போக்கும்

நெய்                   -       நோய்களை போக்கும்

பால்                    -      துக்கம் நீங்கும்

தயிர்                   -       இந்திரிய சுகம் பெருகும்

பழங்கள்             -       புத்தியும், சித்தியும் உண்டாகும்

தங்கம்                -      குடும்ப தோஷங்களை நீக்கும்

வெள்ளி              -       மனக்கவலை நீங்கும்

பசு                        -       ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்

தேங்காய்           -       நினைத்த காரியம் வெற்றியாகும்

நெல்லிக்கனி      -      ஞானம் உண்டாகும்

பூமி தானம்         -      ஈஸ்வர தரிசனம் உண்டாகும்

மேற்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ள பொருட்களை தானம் செய்வது சிறப்பு.  சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும்.  அவர்களால் தானம் செய்வது சிரமம். அவர்கள் கவலை கொள்ள வேண்டாம்.  இவற்றைக் காட்டிலும் சிறந்த தானம் ஒன்று உண்டு.  அது என்ன?

அது தான் பசுவிற்கு உணவளிப்பது.  கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது.  பசுவிற்கு என்ன பொருட்கள் தானமாக தரலாம் என்ற கேள்விக்கு பதில் இதோ.

பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம்.  ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம்.  அன்னதானம் செய்யலாம்.  அதாவது பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம்.  பழங்களை அளிக்கலாம்.  பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது.  ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.  இதை விட சிறந்த ஒரு பொருள் ஒன்று உண்டு.  அது தான் அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.  இதை அதிகமாக தரக்கூடாது.  பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர்.  அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா?  முடியும்.  பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம்.  எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.

அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்து நமது கர்ம வினைகளை போக்குவோம்.  அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும்.  நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும்.  நமது குலம் தழைக்கும்.  திருவண்ணாமலை தலத்தில் பசுவிற்கு உணவளித்தலே உலகின் மிகப்பெரிய தானம் ஆகும்.  இவ்வாறு செய்யும் தருணம் மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்களுக்கே கிட்டும்.

அமாவாசை நாளில் நமது முன்னோர்களை வழிபடும் போது செய்யப்படும் படையல் பொருள்களை (சாதம், வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு, வடை, பாயசம் முதலியன) கன்றுடன் இருக்கும் பசுவிற்கு தானமாக அளித்துக் கொண்டே வாருங்கள்.  தங்களின் வாழ்வில் எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும்.  அனைத்து கர்ம வினைகளும் தீரும்.

ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் பசுவிற்கு உணவளிப்போம். நமது கர்ம வினைகளை தூள் தூளாக்குவோம்.

குழப்பம்

குழப்பம் - பகிர்வு

குழப்பம் ஏன் வருகின்றது என்று பார்த்தால்

முதலில் சரி எது தவறு எது என்று தெரிவதில்லை

சில வற்றை சரி என்று செய்து கொண்டு இருப்போம் பின்பு ஓரு நாள் அது தவறாக தெரியும் - தவறு என்று நினைத்தது சரி என்று தோன்றும்

இந்த சரி தவறு என்பது எப்பொழுது தோன்றுகிறது இருக்கும் நிலையை வைத்து புதிதாக கேட்கும் அல்லது தெரிந்து கொள்ளும் நிலையை வைத்து ஒப்பீடு செய்து கொள்வது

ஒப்பீடு செய்த பின்னர் நாம் அப்படி இல்லையே - இப்படி இல்லையே என்று தடுமாறி கொள்கின்றது இந்த தடுமாற்றம் குழப்பமாக மாறுகிறது

சரி தவறு என்று ஏன் தோன்றுகிறது என்று பார்த்தால் அதற்கு அடிப்படையாக இருப்பது சந்தேகம் என்ற தன்மை தான் காரணமாக இருக்கிறது

சந்தேகம் ஏன் வருகின்றது என்று பார்த்தால் எந்த செயலிலும் - எது நிலையானது - ( எது உண்மையானது ) என்பதை உணராததே காரணமாக அமைகின்றது

உண்மையே ஆயினும் முழுமையாக உள் வாங்கி அதை உணர்வாக மாற்றி அமைத்து கொள்ளும் தன்மை இருக்கும் வரை குழப்பம் தான் ,

ஏனெனில் பெரும்பாலும் ஆன்மீக கருத்துக்களை முழுமையாக உள் வாங்கி கொள்ளாமல் அவசர அவசரமாக படித்து விட்டு அதை உணர்ந்தது போல பாவித்து கொண்டு நம்மை நாமே ஏமாற்றி கொண்டு செயல் ஒன்று விளக்கம் ஒன்று என்ற அடிப்படையில் குழம்புவது அதிகமாகவே உள்ளது

ஒரு விளக்கத்தை உள் வாங்கி அதை ஆழமாக உணர்வு பூர்வமாக நமது தியான சக்தியை கொண்டு நடைமுறை வாழ்வில் அனுபவமாக இறுதியில் உணர்வாக பெரும் பொழுதே உண்மை என ஒவ்வொரு தனி நபரும் உணர்ந்து கொள்ள முடியும்

இந்த உண்மையை உணரும் பொழுது , சந்தேகத்தின் அடிப்படையில் வரும் சரி தவறு என்பதை ஒட்டி வரும் குழப்பம் இல்லாத தெளிவு கிடைக்கும்

குழப்பத்தில் வரும் தெளிவு இன்னும் ஆழமாக உள்ளே செல்ல வைக்கும்

குழப்பத்தை புரிந்து கொண்டால் அது தெளிவுக்கு உண்டான அற்புதமான வழிகாட்டி என்பதை புரிந்து கொள்ள முடியும்

ஆனால் குழப்பத்தில் முடங்கி கொள்வதை  அவரவர் உடைத்து கொள்ளாமல் இருப்பது மிக கொடுமையான வேதனையாகவே அமைகிறது

உண்மை தேடல் இருக்கும் பொழுது எந்த குழப்பம் வந்தாலும் முழு தெளிவு பெரும் வரை உள் தன்மை ஓய்வு எடுக்காது , சோம்பேறி ஆகவும் ஆகாது

தியானம் எல்லா குழப்பங்களையும் தெளிவு செய்யும்

நன்றி

குப்பைத்தொட்டி

#குப்பைத்தொட்டி !
*******************
மிக அவசியமான உலகின் ஒரு பொருள் !
பலரும் இழிவாக மதிப்பிடும் ஒரு பொருள் !
குப்பைத்தொட்டி இல்லையென்றால்
மற்ற இடங்களின் அழகு இல்லாமல் போய்விடும் !
குப்பைத்தொட்டி இல்லாத வீடோ,
அலுவலகமோ இருக்கவே முடியாது !
என்னை பிரமிக்க வைத்த ஒரு பொருள் !
வாழ்க்கையின் பல யதார்த்தங்களை
ரகசியமாய் சொல்லிக்கொடுக்கும் ஒரு பொருள் !
குப்பைத்தொட்டியிடமிருந்து நான் கற்றவை பல !🗣🗣🗣
என்ன சிரிக்கிறாயா ? ! ?🗿
குப்பைத்தொட்டியில் என்ன பெரியதாக
கற்றுக்கொள்ள இருக்கிறதென்று யோசிக்கிறாயா ? 📢 📢 📢
கற்றுக்கொடுக்காத பொருள்களே
உலகத்தில் இல்லை !🗿🗿
கற்றுக்கொள்ள உனக்கு
ஆசையிருந்தால் எதிலிருந்தும்,
பலவற்றையும் கற்றுக்கொள்ளலாம் !🙌🏾🙌🏾
எந்த ஒரு பொருளையும்,
இழிவாக,உபயோகமில்லாததாக ஒரு பொழுதும்
நினைக்கவே நினைக்காதே !
சரி ! இப்போதைக்கு நாம்
குப்பைத்தொட்டியினால்
கிடைத்த பாடங்களை கற்றுக்கொள்ளலாம் ! 💤
💤
தேவையில்லாததை சேகரித்து,
மற்ற இடங்களை சுத்தமாக வைப்பதில்,
குப்பைத்தொட்டிக்கு சமானம் குப்பைத்தொட்டியே !
வாழ்க்கையில் தேவையில்லாததை
தனியாக எடுத்துப் பிரித்து விட்டாலே
வாழ்க்கை மிகவும் நிம்மதியாக
இருக்கும்!
இது நான் குப்பைத்தொட்டியிடமிருந்து
கற்ற முதல் பாடம் !☺ ☺
தான் குப்பையைத்தான்
சேகரிக்கிறோம் என்ற அலட்சியம்
இல்லாத,தாழ்வு மனப்பான்மை
இல்லாத,அசிரத்தையில்லாத ஒன்று
குப்பைத்தொட்டி !
நம் கடமை அடுத்தவருக்குக்
கேவலமாகத் தெரிந்தாலும்,நாம்
அதிலிருந்து நழுவாமல்,முழு மனதோடு,
வெறுப்பில்லாமல் அதில் ஈடுபடவேண்டும் !
இது நான் குப்பைத்தொட்டியிடமிருந்து
கற்ற இரண்டாவது பாடம் !☺
படித்தவன்,படிக்காதவன்,
வயதானவர்,இளையவர்,
ஆண்,பெண்,
பணக்காரன்,ஏழை,
என்ற எந்த பாகுபாடும்
பார்க்காத ஒன்று குப்பைத்தொட்டி !
யார் எதுவாக இருந்தாலும்,
எப்படியிருந்தாலும், நீ
என்றும் மாறாதிரு !
இது நான் குப்பைத்தொட்டியிடமிருந்து
கற்ற மூன்றாவது பாடம் !☺
ஏதோ ஒரு மூலையில்,
யாரும் மதிக்காமல் இழிவாகக்
கிடந்தாலும்,அவரவர்க்கு தேவையான
சமயத்தில் தன் பக்கம் அவர்களை
வரவைக்கும்,தன் கடமையைச்
செய்யும் ஒரு கர்மவீரன் குப்பைத்தொட்டி !
நீ உன்னுடைய கடமையை
செய்துகொண்டு ஒதுங்கி இரு!
தானாகவே உன்னைத் தேடி
உலகம் வந்தே தீரும் !
இது குப்பைத்தொட்டியிடமிருந்து
நான் கற்ற 4வது பாடம் !☺ ☺
தனக்கென்று ஒதுக்கப்பட்ட
இடத்தைப் பற்றி கவலைப்படாமல்,
தன்னிடத்தை அவமதிக்காமல்
இருப்பது குப்பைத்தொட்டி !
உனக்கென்று பகவான் கொடுத்த
இடத்தை ஒரு நாளும் நீ
கேவலப்படுத்தாமல்,உன் வாழ்க்கையில்
நிம்மதியாய் வாழ்ந்து வா !
இது குப்பைத்தொட்டியிடமிருந்து
நான் கற்ற 5வது பாடம் !☺ ☺
இன்னும் பல பாடங்களை
குப்பைத்தொட்டி
எனக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது !
அதை எல்லாம் நான் உனக்கு
சொல்லவேண்டிய அவசியமில்லை !
எப்பொழுதும் அடுத்தவர் முதுகில்
பயணம் செய்யாதே !
அப்படிச் செய்தால் உன்னை
சுலபமாகக் கீழே தள்ளிவிடலாம் !
உன் முயற்சியில் வாழக் கற்றுக்கொள் !
உன் முயற்சியே உனக்கு சந்தோஷம்!
நீ சிரத்தையோடு பார்த்தால்
எல்லாவற்றிலும் பாடம் கற்றுக்கொள்ளலாம் !
நீ சிரத்தையோடு பார் !
நீ கற்றுக்கொள் !
உன் மனம் குப்பைத்தொட்டியில்லை !
தேவையில்லாததை வைத்துக்கொள்ளாதே !
உன் வாழ்க்கை குப்பைத்தொட்டியில்லை !
தேவையில்லாதவற்றை சேகரிக்காதே !
உன் நேரம் குப்பைத்தொட்டியில்லை !
வீணான விஷயங்களை செய்யாதே !
தினமும் இனி நீ செய்யவேண்டியது !
காலையில் எழுந்தவுடன்
உன் அகம்பாவத்தைக்
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் சுயநலத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் திமிரை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் சந்தேகத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் இயலாமையை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் துக்கத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் பைத்தியக்காரத்தனத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் சோம்பேறித்தனத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் முட்டாள்தனத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் பேராசையை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் பொறாமையை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் பயங்களை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் அழுக்கை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் காமத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் அழுகையை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் பாவங்களை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் குழப்பங்களை
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன்னிடம் தேவையில்லாமலிருக்கும்
அனைத்தவற்றையும்
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
உன் மனதில்
எப்பொழுதெல்லாம்
தேவையில்லாதவைகள்
தோன்றுகின்றதோ,
உடனே அவற்றையெல்லாம்
குப்பைத்தொட்டியில் வீசி எறி !
வீசிப்பார் ! மனம் சமாதானமடையும் !

மனதார நன்றி !!

மனதார நன்றி  !!🗣🗣🗣🗣

🙏🙏🙏🙏🙏🙏🙏

எனது அஹம்பாவங்களை
தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத்
தந்த என் கஷ்டங்களுக்கு
மனதார நன்றி !

என்னை அவமரியாதை செய்து
எனக்கு வைராக்கியம் வரக்காரணமான
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு
மனதார நன்றி !

எனக்கு வலியைத்தந்து
அடுத்தவரின் வலியை எனக்குப்
புரியவைத்த புரியாத நோய்களுக்கு
மனதார நன்றி !

எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை
உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த,
என் பலவீனத்திற்கும்,உடலுக்கும்
மனதார நன்றி !

என்னை ஆழமாக சிந்திக்கவைக்க
எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு
மனதார நன்றி !

என் பலத்தை நான் உணர்ந்து
என் வாழ்வை நானே நடத்தக் காரணமான
என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
மனதார நன்றி !

என் உடல் உறுப்புகளின் மதிப்பை
எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த
உடல் ஊனமுற்றோருக்கு
என் மனதார நன்றி !

மனித வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை எனக்குத் தெளிவாகப்
புரியவைத்த மரணத்திற்கு
மனதார நன்றி !

என் பெற்றோரின் பெருமையை,
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு
மனதார நன்றி !

ஒரு சிரிப்பினால் உலகையே
வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு
மனதார நன்றி !

பணத்தினால் மட்டுமே வாழ்வில்
எல்லா சுகமும் கிடைத்துவிடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத
பணக்காரர்களுக்கு மனதார நன்றி !

பக்தி என்பது வெளிவேஷமல்ல
என்பதை எனக்குப் பயங்கரமாய்
புரியவைத்த வெளிவேஷதாரிகளுக்கு
எப்பொழுதும் மனதார நன்றி !

நாமஜபத்தின் அற்புத மஹிமையை
எனக்குச் சரியாகப் புரியவைத்த
என்னுடைய பாபங்களுக்கு
என்றுமே மனதார நன்றி !

ஒவ்வொரு முறையும் மனிதரிடம்
ஏமாந்துக் கொண்டிருந்த என்னை,
அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய
என் Kadavuluku மனதார நன்றி !

இன்னும் பலருக்குச் சொல்லவேண்டும் !
இந்த வாழ்நாள் போதாது !

எனக்கு என்னை ஆத்மா என்று
உணர வைக்க என்னை குருவிடத்தில் சேர்ப்பித்த என்னுடைய வாழ்க்கைக்கு
என்றென்றும் மனதார நன்றி . . .

நான் என்றும் நன்றிக்கடன் பட்டவன் ! ! !
மனதார நன்றிகள் .

Wednesday, 29 June 2016

வாசி யோகப் பயிற்ச

*வாசி யோகப் பயிற்சி*

ஓகத்தின்படி நம் உடலில் ஏழு அடிப்படையான தளங்கள் உள்ளன. இவற்றை சக்கரம் என்றும் இயம்புகின்றனர். இதில் மூலாதாரம் எனும் மூல அடிப்படையில் குண்டலினி எனும் ஆற்றல் பாம்பு வடிவில் உறைவதாகச் சொல்வர். ஓகம் (யோகம்) பயிற்றுவிக்கும் ஆசான்கள், குருமார்கள் இந்த குண்டலினி ஆற்றலை முதுகந்தண்டு வழியே மேலே ஏற்றிக் கொண்டு போய் உச்சந்தலையில் அமைந்த பதின்நூறு ஆரச்சக்கரத்தில் (ஸஹஸ்ராரம்) சேர்க்க வேண்டும் என்பதை மட்டும் சொல்கின்றரே தவிர அதை மீண்டும் அப்படி கீழே கொண்டு வந்து மூல அடிப்படையிலேயே சேர்த்துவிட வேண்டும் என்று சொல்வதேயில்லை. அச்சாகும் ஓக நூல்களிலும் இந்தக் குறை உள்ளதை வாசிப்பவரால் அறியமுடியும். இது ஏனென்றால் அந்த ஆசான்களுக்கு, குருமார்களுக்கு அது பற்றி தெரியாமை ஒரு காரணம் எனலாம், மற்றொன்று ஒருவரது ஓக அனுபவத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமே எனலாம். ஓகத்தை பழகுவோர் தம் குண்டலினி ஆற்றலை மேலே ஏற்றி பதின்னூறு ஆரச்சக்கரத்தில் கொண்டு சேர்ப்பதற்கு அவரது முயற்சியைப் பொருத்து 12 முதல் 30 ஆண்டுகள் வரை பிடிக்கின்றன. இதனாலேயே பலர் ஓகத்தில் ஆர்வம் செலுத்துவதில்லை. மாறாக ஆன்மீக முன்னேற்றம் தராத சடங்கு, மதம் ஆகியவற்றை காலம், எளிமை கருதி கைக் கொள்கின்றனர்.
இந்த நீண்ட கால ஓகப் பயிற்சியைத் தவிர்த்து சில நாள்களில் அல்லது சில மாதங்களில் அந்தக் குண்டலினியை பதின்னூறு ஆரச்சக்கரத்திற்கு கொண்டு போவதோடு அல்லாமல் அதை மீண்டும் கீழேயுள்ள அதன் மூலஅடிப்படையிலேயே கொண்டு வந்து சேர்க்கவும் அமைந்த எளிய ஓகப் பயிற்சி தான் இந்த வாசி யோகம் எனும் காற்றுப் பயிற்சி. இதை தமிழ் நாட்டு சித்தர்கள் பன்னூற்றாண்டுகளாகப் பழகி வந்துள்ளனர். ஆனால் ஒரு இயக்கம் நடத்தி மக்களிடையே இந்த வாசி ஓகத்தைக் கொண்டு செல்லாமல் தம்மை  அண்டிவந்த தம் மாணவர்களுக்கு மட்டும் கற்றுக் கொடுத்தனர். அந்த மாணவர்கள்  தம் இசைவைப் பெறாமல் வாசி ஓகத்தை பிறருக்கு சொல்லிக் கொடுத்தால் அவர்தம் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் என்று எச்சரித்து மக்களிடம் பரவாமல் தடுத்துவிட்டனர். இது ஏனென்றால் இந்த பயிற்சியால் கிட்டும் சித்துகளை பக்குவமற்ற பழகுநர் தம் சொந்த நலனுக்காகப்  பயன்படுத்தி தமக்கும், பிறருக்கும் கேட்டை பயக்குவர் என்பதால் எனலாம். மக்களுடைய எல்லா நல்ல, தீய செயல்களுக்கும் எங்கும் நிறைந்த பரம்பொருளே கட்டுப்பாட்டாளன் (controller) என்பதால் சித்தர்களின் இந்த அச்சம் தேவையற்றது. தமிழ்ச் சொல் ஆண்டவன் என்பதற்கும், சமற்கிருதத்தில் ஈஸ்வர என்பதற்கும் கட்டுப்பாட்டாளன் என்பதே பொருள்.
இனி, வாசி ஓகம் பழகும் முறையை குறித்து தெளிவான விளக்கமும், அதன் பின் அதைப் பழகுபவருக்கு அதனால் ஏற்படும் ஆன்மீக அனுபவங்களும் என்னென்ன என்பதும் சொல்லப்படும். வாசிஓகத்தில் அடிப்படையானது காற்று. வாசி என்றால் காற்று எனப் பொருள். இதை பழக விரும்பவர் எட்டு அகவைக்கு மேற்பட்டவராக,  உடல் வளைவதற்கு இயன்றவராக இருந்தால் போதும். பிற ஓக, ஊழ்க (தியான) பயிற்சி முறையில் உள்ளது போல் சைவ உணவே
உண்ணவேண்டும் என்பது போன்ற உணவுக் கட்டுப்பாடு ஏதும் இதில் இல்லை. ஒரு நாளில் ஒரேஒரு முறை மட்டும் இதைப் பழகினால் போதும். காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு அமைதியான மன நிலையில் இதைப் பழுகுவது சாலவும் நன்று.

பயிற்சி முறை:

வாசிஓகம் பழகுநர் முதலில் ஒரு தடியான விரிப்பை தரைமேல் விரித்துக் கொள்ள வேண்டும். இது முட்டியில் வலி ஏற்படாமல் தவிர்க்கும்  உடலை வளைத்து பழக வேண்டி உள்ளதால் தளர்த்தியான ஆடையே மிகவும் ஏற்றது. முதலில் விரிப்பின் ஒரு கோடியில் முட்டி போட்டு அமர்ந்து இடது கால் கட்டை விரல் மேல் வலது கால் கட்டை விரலை வைத்து அழுத்தியபடி புட்டத்தை கால்களின் மேல் இருத்தி அமர வேண்டும். பின்பு, வலதுகைப் பெருவிரலால் வலது மூக்குத் துளையை மூடி  இடது மூக்குத் துளை வழியாகக் காற்றை மெல்ல மெல்ல முழுமையாக இழுத்து பின்பு அக்காற்றை உள்ளே நிறுத்தி வைக்காமல் உடனேயே இடது மூக்குத் துளையை நடுவிரலால் மூடி வலது மூக்குத் துளை வழியாக உள்ளே உள்ள காற்று முழுவதையும் வெளியே விட்டுவிட வேண்டும். அதனைத் தொடர்ந்து அதே வலது மூக்குத் துளை வழியாக காற்றை மெல்மெல்ல உள்ளுக்கிழுக்க வேண்டும். காற்றை இழுத்த பின் இப்போது வலது மூக்குத் துளையை மூடிவிட்டு இழுத்த காற்று அத்தனையையும் மெதுவாக இடது மூக்குத் துளை வழியாக முழுவதுமாக வெளியே விட்டுவிட வேண்டும். இது மூக்கில் உள்ள காற்றடைப்பை அகற்றி இனி செய்ய இருக்கின்ற வாசிஓகப் பயிற்சியில் தடை ஏதுமின்றி மூக்குத் துளையில் காற்று போய் வருவதற்கு உதவிசெய்யும். P
இனி, முட்டியிட்டு அதே உட்கார்ந்த நிலையில் இரு தொடைகளின் மேல் கைகளை வைத்து இடக்கால் பெருவிரலை வலக் கால் பெருவிரலால் அழுத்தியபடி முதுகை நேராக நிமிர்த்தி இருக்கவேண்டும். பின்பு வாயை முன்குவித்து காற்றை மெல்லிதாக 'ஊ' என உள்ளே இழுக்கவேண்டும். காற்று உள்ளே செல்லும் போது அடிவயிறு இயல்பாகக் குறுகி மார்பு விரிவடையும். இப்படி முக்கால் அளவிற்கு காற்றை இழுத்துக் கொண்டிருக்கும் போது தலையை முன்னோக்கி வளைத்தபடியே தொடை மீதுள்ள இரு கைகளையும் தரையோடு தேய்த்தாற்ப்போல் நீட்டி தரையில் கையை பதித்தபடி குனிந்து நெற்றியால் தரையைத் தொடவேண்டும்.      நெற்றியால் தரையைத் தொடுவதற்கு வளைகின்ற போது வயிறு அப்படியே மடிந்து உள்நோக்கி சுருங்கி வளையும். வயிறு வளைந்தால் அவர் பயிற்சியை முறையாகச் செய்கின்றார் எனக் கொள்ளலாம். குனியும்போது உடலும் முன்னோக்கி நகரும். நெற்றியால் தரையைத் தொடும் வரை காற்றை 'ஊ' என உள்ளே இழுக்கவேண்டும்.
கீழே குனிந்து நெற்றியால் தரையைத் தொடும் போது மட்டும் வாயை லேசாக  திறந்து  'ஆ' என்று காற்றை வெளியே விடவேண்டும். ஆனால் முழுமையாக விடவேண்டும்  என்று இல்லை. அதைத் தொடர்ந்து இரு கைகளையும் தரையை ஓட்டினார் போல் தொடையை பின்நோக்கி இழுக்க வேண்டும். கைகளை  இழுக்கின்றபோது மீண்டும் வாயைக் குவித்தபடி  'ஊ' என்று காற்றை உள்ளுக்கிழுத்தபடியே தோளைத் மேலே தூக்காமல் கழுத்தையும் சேர்த்தே  பின்னோக்கி இழுத்து நேராக நிமிர்ந்து இரு கைகளையும் தொடைகளின் மேல் இருத்த வேண்டும். இப்படி குனிவில் இருந்து மெல்ல எழுந்து நிமிரும் வேளையில் காற்றை முக்கால்வாசி இழுத்திருப்பீர்கள். மீண்டும் முன்போல் காற்றை உள்ளுக்கு இழுத்தபடியே தொடைமேல் உள்ள கைகளை முன்னோக்கி நகர்த்தி தரையைத் தேய்த்தாற் போல குனிய வேண்டும். நெற்றி தரையைத் தொடும் நேரத்தில் மட்டும் சிறிது வாய் திறந்து காற்றை 'ஆ' என்று விடவேண்டும். பின் மீண்டும் இரு கைகளையும் தொடையை நோக்கி இழுக்க வேண்டும். தோளை உயர்த்தாமல் கழுத்தையும் பின்னே இழுத்து உடலை நிமிர நிறுத்த வேண்டும். பின்னோக்கி இழுக்கின்ற போது வாயைக் குவித்து காற்றை மெல்லமாக 'ஊ' என்று இழுக்கவும் வேண்டும். இதனால் காற்று உடல் முழுவதும் நிறையும். உடல் காற்றாலேயே நிறைந்து போகும். உடல் முழுதும் வியர்க்கும். இப்படியே 30 நிமிடங்கள் காற்றை உள்ளுக்கிழுத்தும் விட்டும் வரும் பயிற்சியால் காற்று கழுத்து வரை நிரம்பிவிடும். (காற்றை விரைந்து நிரப்ப சில நாள்களில் இந்த குனிந்து நிமிர்வதை வேகமாக செய்யவேண்டும்).
காற்று கழுத்து வரை நிரம்பிய பின் குனிந்து எழுவது கடினமாகிப் போகும். அப்போது முதுகு நிமிர்ந்த நிலையிலேயே கண்ணைமூடி சிதறாத கவனத்துடன் வலக்கண் பாப்பாவில் மனத்தைக் குவித்தபடி வாயைக் குவித்து காற்றை 'ஊ' என்று உள்ளுக்கு முழுமையாக இழுக்க வேண்டும் பின் வாயை சிறிதளவே  திறந்து  'ஆ' என்று சிறிதளவே காற்றை விட வேண்டும். இப்படியே சில நிமிடங்கள் காற்றை இழுப்பதும் விடுவதும் நிகழ்த்திவந்தால் காற்று கண் வரை நிரம்பும். அதன் பின் கண்ணைத் திறந்து ஒரு கண்ணாடியில் தன் வலக்கண் பாப்பாவை மட்டும் முறைத்துப் பார்க்கவேண்டும். இதனால் அப்போது கண்ணில் நீர் கசியும். கண்ணீர் நின்றதும் காற்று வலக்கண்ணுக்கு மேலே ஏறுவது  தெரியும். காற்று அப்படியே ஏறிச்சென்று உச்சந்தலையில் உள்ள பதின்னூறு ஆரச்சக்கரதில் நுழையும். காற்று நுழைவதை உற்று கவனிப்பதால் உச்சந்தலையில் குயவன் சக்கரம் சுழல்வது போல் ஒரு சக்கரம் அல்லது தாங்கி (bearing) சுழல்வதை உணரமுடியும். அங்கேயே எண்ணம் சிதறாமல் கவனித்துக் கொண்டிருந்தால் அருவி போல் நீர் வடியும். இது நீரில்  குளிப்பது போல இருக்கும். இதை அந்த வாசிஓகப் பழகுநர் மட்டுமே அனுபவித்து உணர்வார். மற்றவர் கண்களுக்கு இது தெரியவே தெரியாது. இதைத் தான் காசியில் குளிப்பது என்றனர் ஓகியர். இதில் குளிப்பவர்க்கு மறுபிறப்பு கிடையாது என்பர். இந்த வாசிஓகப் பயிற்சியில்  ஈடுபடுபவர் உள்ளுக்கு இழுத்து விடும் காற்றை மட்டுமே கவனிக்க வேண்டும் வேறு சிந்தனையில்  ஈடுபடக் கூடாது. காற்று உடலின் உள்ளே எங்கே நுழைகிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.    
இந்த பயிற்ச்சியை தொடர்ந்து செய்து வந்தால் நாளாவட்டத்தில் குனிந்து விழுந்து எழுவதை தவிர்த்து நிமிர்ந்த நிலையிலேயே வாய்வழியாகவே காற்றை இழுத்தும்  வாய்வழியாகவே விட்டும் பழகிக்கொள்ளலாம்.    
இன்னும் சில நாள்கள் இப்பயிற்சியைத் தொடர்ந்து செய்துவர வாசிஓகப் பழகுநரின் தலை உச்சியில் (பதின்னூறு ஆரச்சக்கரத்தில்) கவனம் மேம்பட்டுவரும். அந்த சிதறாத கவனத்தால்  அக்காற்று பனியாக மாறி பழகுநருக்கு பனிக்காற்று உணர்வை ஏற்படுத்தும் அதனால் உடல் முழுவதும் குளிரால் நடுங்கும். இதில் வெப்பக் காற்று குளிர் காற்றாக மாறுகிறது. இதன்பின் கட்டி கட்டியாகத் தொங்கும் பனியாக அது வளர்ச்சி பெறும். இதை 'வெள்ளி பனித்தலையர்'  நிலை எனலாம். இதை அந்த வாசிஓகியால் மட்டுமே அனுபவிக்க முடியும் மற்றவருக்கு இது சிறிதளவும் தெரியவராது.  இந்த நிலையை கடந்தால் சில நாள்களில் பதின்னூறு ஆரச்சக்கரம் தானாகவே திறக்கும். அப்போது வான்மண்டலமே அங்கு தெரியும். பின் காற்று அதன்வழியே வெளியே போகும். அண்டவெளிக் காற்று அந்தத் துளை வழியாக இறங்கும். இதுவே பத்தாவது வாசல் காற்று எனப்படும். இங்கு தான் நான் என்ற தனியாள் உணர்வு அந்த சுழியத்தோடு (cosmic entity)
இணைகின்றது. அப்போது நானும் அவனும் ஒன்று என்ற உணர்வு மேலிடும். இதுவே துவைதம் எனப்படும் இருமை நிலை ஆகும். இதாவது, இறைவனும் இருக்கிறான் நானும் இருக்கிறேன் என்பது.    
இந்த இருமை நிலையை உணரும் போது நீல நிறம் தெரியும் என்பது மட்டும் அல்ல கண்ணால் காணும் புற உலகப் பொருள்கள் யாவும் நீலநிறமாகவே காட்சியளிக்கும். அந்த நீல நிறத்தை பதின்னூறு ஆரச்சக்கரத்தின் வழியாக கீழே உடலுள் இறக்க வேண்டும். இதற்கு பதின்னூறு ஆரச்சக்கரத்திலேயே கவனத்தை குவிதிருந்தால் போதும் காற்றை இழுத்து விடத் தேவை இல்லை. இந்த நீல நிறத்தின் ஊடாகவே இறை மூலஅடிப்படையில் (supreme muladhara) இருக்கும் ஐம்பெரும் பூதங்களையும் ஒவ்வொன்றாக உடலுள் ஈர்க்க வேண்டும். இதை ஈர்க்கும் போது முட்டிபோட்டு வாசிஓகம் செய்வது போல் உட்காரத்தேவையில்லை. அப்போது  இயல்பாக உட்கார்ந்து கொண்டு வலது கால் மேல் இடது காலை வைக்க வேண்டும் அல்லது தட்சிணாமூர்த்தி போல் அமர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இடக் காலை வலக் காலின் மேல் போட்டு உட்காருவது காற்றை கீழ் நோக்கி செலுத்தவும் உடலைக் குளிருட்டவும் செய்கின்றது.  இந்த நிலையில் வாய்வழியாக காற்றை உள்ளிழுத்து விடுவதை நிறுத்த தேவையில்லை. மூக்கு வழியாக இயல்பாக மூச்சை இழுத்து விட்டால் போதுமானது. இந்த பயிற்சியை சிலநாள்கள் தொடர்ந்தாற்போல் செய்தால் அந்த இறை மூலஅடிப்படையை நம்முடைய மூலஅடிப்படையில் கொண்டு வந்து சேர்க்க முடியும். இடையில் கிட்டும் சித்துக்களில் ஈடுபாடு உண்டாகுமானால் மேற்சொன்ன முன்னேற்றம் கிட்டாமல் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடை உண்டாகும். ஆதலால் அவற்றை நாடவே கூடாது. இவ்வாறு இறை மூலஅடிப்படையை சேர்த்தால் ஒருவர் ஐம்பெரும் பூதங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறுவதோடு முக்காலத்தையும் உணர்ந்தவர் ஆகின்றார். இந்த நிலையில் அந்த வாசிஓகப் பழகுநர் "அவனே நான், நானே அவன்" என்ற உணர்வை அடைகின்றார். இதுவே "நான் கடவுள்" எனும் "அஹம் பிரம்மாஸ்மி" என்ற உபநிடதக் கருத்துநிலை எனப்படுகிறது. இந்த நிலைதான் இரண்டன்மை எனும் அத்துவைதம் ஆகும். இது தான் உண்மையில் வீடுபேறு எனும் மோட்சமுமாகும். மோட்சம் என்று தனியே வேறொரு இடம் இந்தப் புடவியில் (universe)
இல்லவேயில்லை. ஆகவே வீடுபேறு என்பது தன் மூலஅடிப்படையுடன்  இறை மூலஅடிப்படையை சேர்த்தால் மட்டுமே வாய்க்கும்.
இப்படியாகப்பட்ட உயர்நிலையை எய்தியவர் மனநாட்டம் காரணமாக ஐம்பெரும் பூதங்களினால் ஆன உலகியலில் ஈடுபாடு கொள்வாரானால் இறைஆற்றல் அவரைவிட்டு நீங்கப்பெற்று அவரது குண்டலினி மீண்டும் கீழே இறங்கிவிடும். அப்போது அவர் மற்றவர் போல் இயல்பான மனிதராக ஆகிவிடுவார். இதை அவரால் நன்றாக உணரமுடியும். ஆனாலும் பயிற்சியின் வாயிலாக மீண்டும் அந்த உயர்நிலையை அவரால் எளிதில் எய்தமுடியும். நல்ல தேர்ச்சி ஏற்பட்ட பின் குனிந்து வளையாமல் இயல்பாக அமர்ந்து வாய்வழியாகவே காற்றை 'ஊ' என இழுத்தும் 'ஆ' என விட்டும் வாசிஓகத்தை பழக முடியும்.   
பழனிமலைக் கோவிலின் திருச்சுற்றில் கல்வெட்டாய் பொறிக்கப்பட்டுள்ள அகத்தியர் பாடல் ஒன்றில் உச்சந்தலையில் சக்கரம் சுழல்வது, அருவி போல் நீர் கொட்டுவது, பனிக்குளிர் வீச்சு, பனிகட்டியாக ஆதல், நீல நிறக்காட்சி ஆகியன பற்றிய குறிப்பு மேற்சொன்னவை யாவும் உண்மை என்பதற்கு ஒரு சான்றாகும்.  மக்களைப் பிளவுபடுத்தும் மதத்தை விட்டொழித்து உண்மையான ஆன்மீக முன்னேற்றத்தை எல்லோரும் நாடி அடையவேண்டும் என்ற நன்னோக்கத்தில் தான் இதுகாறும் கமுக்கமாக சொல்லித்தரப்பட்ட இந்த எளிய வாசிஓகத்தை பொதுப்பட வழங்கியுள்ளேன். இந்த வாசியைப் பழகி இந்த அனுபவங்களை எல்லாம் முழுதுமாகப் பெற்று 'நானே அவன், அவனே நான்' என்ற நிலையையும் எய்தியவர் எடுத்துரைத்த (narrate) செய்திகளே இங்கு தரப்பட்டுள்ளன.