Tuesday, 8 March 2016

கவனித்தல்

கவனித்தல் - பகிர்வு

எதை கவனிப்பது? யாரை கவனிப்பது? எப்படி கவனிப்பது ?

இதற்கான பதிலை இந்த பதிவின் இறுதியில் புரிந்து கொள்ள முடியும் 

இந்த கவனித்தல் என்பது இன்றைக்கு எல்லோருமே எதுவாக இருந்தாலும் தன் முழு உள் சக்தியை கொண்டு தான் கவனிக்கிறோம், ஆனால் எந்த ஒன்றை  நாம் ஆழமாக கவனிக்க வேண்டும் -அது தான் நமக்கு மாற்றத்தை கொடுக்கும் என்பது தான்  தெரிவதில்லை!

இது மிக பெரிய பதிவு உங்களை உங்களுக்கு உள்ளே கொஞ்சம் திரும்பி பார்கக வைக்கும்

"பணம் மட்டுமே வாழ்க்கை என நினைப்பவர்களுக்கு இந்த பதிவு முற்றிலும் பொருந்தாது"

கீழே வருமாறு இருவகை செய்திகள் உதாரணங்களுடன் குறிப்பிட்டு உள்ளேன்

1.வெளிதோற்ற கவனிப்பு

கடந்த ஞாயிறு அன்று நானும் என் மனைவியும் coimbatore  brooke field complex சென்று கொண்டிருந்தோம், அப்பொழுது நான் car driving செய்து கொண்டிருந்தேன், திடீரென ஒரு two wheeler வண்டி cross ஆனது அந்த சமையத்தில் ஒரு இளம் பெண் தன் கூந்தலை அழகாக design செய்திருந்தார் அதை நான் கவனித்தேன்,

அப்பொழுது அந்த பெண் தன் கூந்தல் கலையாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை மிக கவனத்துடன் அதை பாதுகாப்பு செய்து கொண்டு பயணம் செய்ததை பார்த்தேன்,

அருகில் இருந்த மனைவியிடம் பாரு அந்த பொண்ணு அழகாக இருக்கிறார் அந்த கூந்தல் அழகாக இருப்பதை எப்படி மெனக்கெட்டு அதை பாதுகாக்க செய்கிறார் என்று சொன்ன  உடனே எனக்கு ஒரு அடி மண்டையில்  விழுந்தது வேற விஷயம் - driving பண்ணும் பொழுது அங்க என்ன வேடிக்கை என்று !

திரும்ப நாங்கள் அந்த complex உள்ளே சென்ற போது பல பேர் பல்வேறு விதமான ஆடைகள் அணிந்து வந்து ஒவ்வொரு கடை முன்பும் ,ஒரு முடி கலையாமல் பார்த்து பார்த்து மிக கவனத்துடன் தன் முழு சக்தியை பயன் படுத்தி camera  மூலம் "selfie" எடுத்துக் கொண்டு  சந்தோஷம் அடைவதும், எப்பவும் போல நாங்களும் selfie எடுத்து சந்தோஷம் அடைந்தோம்.

பின்பு ஒவ்வொரு கடைக்கு உள்ளே வியாபாரம் செய்பவர்களும் சரி பின்பு அதை வாங்க செல்பவர்களும் சரி தன் பொருளை எப்படியாவது விற்று விட வேண்டும் என்று தன் முழு சக்தியை பயன்படுத்தி கவனத்துடன் பேசுவதும், வாங்க செல்பவர்கள் தனக்கு தக்கவாறு உடைகளுக்கு  matching ஆக  அணிகலன் வாங்க மிக கவனத்துடன் பார்த்து பார்த்து தன் முழு சக்தியை பயன் படுத்தி வாங்குகின்கறனர்.

இது போல ஒரு மனிதனுடைய ஓட்டு மொத்த status தெரிந்து கொள்ள மிக உண்ணிப்பாக எப்படியாவது அவர் நிலையை(Car, வீடு ,business ,furniture ,மொத்த சொத்து மதிப்பு )என  முழுமையாக தெரிந்து கொண்டே தீர வேண்டும் இல்லையேல் மண்டை வெடித்து சிதறி விடும் என்ற நிலையில்  முழு கவனத்துடன் முழு சக்தியை கொண்டு  இன்னொரு நபரை பற்றி தெரிந்து கொள்கிறோம்.

இதெல்லாம் ஒரு வகையில் சந்தோஷத்தை கொடுத்தாலும் இறுதியில் மனம் அவர்களுடன் நிச்சயமாக ஒப்பிட்டு பார்த்து நிம்மதியை இழக்க செய்யும் என்பதை புரிந்து கொள்வதில்லை,

தன் கூந்தலை பாதுகாப்பது என்பது தனிப்பட்ட சந்தோஷம் என்றாலும் அந்த நாள் முழுவதும் அதை பாதுகாக்கவே தன் நேரமும் முழு சக்தியும் செலவு ஆவதையும் நம்மை சுற்றி உள்ள இயற்கையாக விளையாடும் குழந்தை, மரங்கள் என எதையும் ரசிக்க மறைத்து விடுகிறது இந்த கவனிப்பு என்பது புரிவதில்லை,

இது போல முழுக்க முழுக்க நம் சந்தோஷத்தை வெளிதோற்றத்தீர்க்கு மட்டுமே செலவழித்து உண்மையான நிலையான சந்தோஷம் என்னவென்று தெரியாமல் ஒரு கட்டத்தில் வாழ்க்கையே waste என்று சொல்லி சலிப்பை ஏற்படுத்தி கொள்கிறோம்

---------------

இங்கு உங்களது கேள்வி என்னவென்று புரிகிறது இதெல்லாம் இல்லாமல் எப்படி வாழ்வது என்று  ?இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவு அடிப்படை விஷயத்துக்கு  தேவை தான்,  ஆனால் அது மட்டுமே அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்- ஒரு கட்டத்தில் இது தேவையே இல்லை என புரிந்து கொள்ள முடியும் .

இன்னொரு கேள்வி வந்திருக்க வேண்டும் அதாவது மனைவியை வைத்து கொண்டு இன்னொரு பெண்ணை பார்ப்பது என்ன நியாய தர்மம் என்றும் ,நீங்கள்  என்ன ஆன்மீகவாதியா?

திருமணம் ஆகி கிட்ட திட்ட கடந்த 3-1/2 ஆண்டுகளாக  நான் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்வது வழக்கம் அது போல எந்த ஒரு அழகான காட்சி(அழகான பெண் முதல் அழகான மழை சாரல் வரை அழகான  நாய்,பூனை வரை )என என் அருகில் இருப்பது எதுவாக  இருந்தாலும் சொல்லி விடுவேன் அது போல ஆன்மீகத்தை சார்ந்த எந்த ஒரு விஷயமும் உடனுக்குடன் பகிர்வது வழக்கம் எனவே எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை அது போல தான் மனைவியும் பகிர்ந்து கொள்வார்- எனவே அங்கு சண்டையே வந்தாலும் அதற்க்கு பின்பு ஆழமான புரிதல் வரும் எனக்கு இது தான் ஆன்மீகமாக தெரிகிறது

ஒருவருக்கு ஒருவர் வெளிப்படையாக இருப்பது மூலம் வர கூடிய அன்பு ஆழம் ஆகிறது கணவன் மனைவி என்ற உறவை தாண்டி  சிறந்த நண்பர்கள் ஆன உணர்வை உணர முடிகிறது  - இப்படி இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் மறைத்து- மறைந்து பார்த்துக் கொண்டும்  இருக்கும் பொழுது சந்தேகம் மற்றும் பிரிவுநிலைக்கு தான் தள்ளப்படும் என நான் கண்ட உண்மை 

எனவே என்னை ஆன்மீகவாதி இல்லை- இவன் வேடம் போடுகிறான் என எதை சொன்னாலும் அதை பற்றி கவலை பட போவதில்லை

அதனால் இனிமேல் பொதுவாக நடக்கும் எதுவாக  இன்பம் துன்பம் எதுவாக இருந்தாலும் அதர்க்கு நானே பொறுப்பு என உணர்ந்து கொண்டேன், அடுத்த நிமிடம் என்ன  நடக்கும் என தெரியாது அதை பற்றிய கவலை இல்லை 

---------------

சரி matter க்கு வருவோம்

2.உள்தோற்ற கவனிப்பு

உள் கவனிப்பு என்பது எப்படி நீங்கள் உங்கள் முழு சக்தியை வெளித்தோற்றத்துக்கு பயன் படுத்தி இறுதியில் நிரந்தரமான சந்தோஷத்தை இழந்தோமோ, அதை நிரந்தரமாக இழக்காமல் இருக்க உங்கள் சக்தியை உள்ளே திருப்புவது

உங்கள் முழு சக்தியையும் வைத்து  உங்களுக்கு உள்ளே கவனிக்க செய்வது

உங்களுக்கு உள்ளே நடக்கும் குணங்கள் மீது முழு சக்தியை கொண்டு கவனிப்பது
ஒரு பொறாமை குணம் வந்தால் என்ன நடக்கிறது - பொறுக்க முடியாமல் நம்மை சுற்றி உள்ளவர்களை  பற்றி அவதூறு பேசி  நாம் நிம்மதியை இழப்பது 

கோபம் வந்தால் உடல் நடுக்கம், உடல் சுடு ,பதட்டம்ம் தன்னிலை அறிவை இழப்பு

மகிழ்ச்சி வந்தால் எப்படி ரசிக்கிறோம் என்ன மாறியான உணர்வை கொடுக்கிறது

வெறுப்பு வந்தால் என்ன நடக்கிறது

பணம் வந்தால்- போனால்  என்ன மாறி நிகழ்கிறது 

பசி வந்தால் உணவுக்கு முன்- பின் என்ன நடக்கிறது

குளிக்க செல்லும் முன் இருக்கும் சோர்வு இருப்பதும் தண்ணீர் பட்ட உடனே காணாமல் போகும் சோர்வும் அதன் பின் வரும் சுறுசுறுப்பு உணர்வும் 
தாகம் வரும்  முன் எப்படி இருந்தது தண்ணீர் அருந்திய பின் ஏற்பட்ட உள் மகிழ்ச்சி

காமம் வரும் பொழுது ஏற்படும் உள் உணர்வு

பொய் பேசும் பொழுது நிகழும் தடுமாற்றம்

உண்மையை பேசும் பொழுது ஏற்படும் சந்தோஷம் மற்றும் தைரியம்

உறங்கும் பொழுது வரும் உள் உணர்வு

சிறுநீர் -மலம் இவை வரும் முன் -பின் நடக்கும் உணர்வுகள் மீது கவனிப்பு

தியானம், exercise செய்யும் பொழுது நிகழும் உள் உணர்வு என உங்களுக்கு உள்ளே ஆழமாக  முழு சக்தியை கொண்டு கவனியுங்கள்

இந்த கவனிப்பு உங்களுக்கு உள்ளே இருக்கும் குணங்களில் இருக்கும் அழுக்குகளை காண்பித்து கொண்டே இருக்கும்
அந்த அழுக்குகளை தூய்மை செய்ய வழிகளையும் காட்டும் ,

இந்த தூய்மை என்பது உங்கள் முழு விழிப்புணர்வு மூலம் நடப்பதால் உங்களுக்கு உள்ளே ஆழமாக இந்த குணங்கள் கடந்த நிலைக்கு கட்டாயம் அழைத்து செல்வதை உணர முடியும் ,

இந்த குணங்கள் கடந்த நிலையில் உங்கள் சிந்தனை நின்று அங்கு ஆழமான நிரந்தரமான சந்தோஷத்தை (பேர் ஜாதி, மதம் ,இனம், பதவி, நேரம் ,காலம், ஏழை,பணக்காரன், நல்லவன் ,கெட்டவன் ) என எந்த அடையாளங்கள் இல்லாத அற்புதமான உணர்வு சிறுக சிறுக சுவைக்க ஆரம்பம் ஆகும்

இந்த உணர்வு வரும் பொழுது உங்கள் மேல்  படும் வெய்யில், காற்று, மழை , மரம் ,செடி, நாய், பூனை முதல் மனித உணர்வுகள்  வரை அனைத்திலும் எந்த வித எதிர்பார்ப்பு இல்லாத உண்மையான அன்பு மூலம் கிடைக்கும் நிரந்தரமான சந்தோஷத்தை உணர்ந்து  கொண்டு வாழ முடியும்

முழுக்க முழுக்க நம்மை நாம் முழு சக்தியுடன் கவனிப்பது - இதற்கு எதிர்பார்ப்பு இல்லாத தியானம் தான் சிறந்த வழி

உன்னை நீ முழுமையாக (எந்த வித கவன சிதறல் இல்லாமல் - கவனம் இல்லாமல் போவதையும் விழித்து கொண்டு) கவனி உன்னில் உள்ள உண்மையை உணர முடியும்!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.