துயரங்களின் அடிப்படை.. ( 5 )
---------------------------------------------
நமது விருப்பங்கள்தாம் நமக்குள் முரண்பாடுகளைக் கொண்டு வருகின்றன...
நமது விருப்பங்களுக்கு விரோதமாக எவை நடந்தாலும்...
அவைகளுக்கு எதிராக நாம் முரண்படுகிறோம்.
நம்முடைய முரண்பாடுகளுக்கெல்லாம் மூல காரணம்..இந்த விருப்பங்கள்தாம்.
நாம் எல்லாவற்றையும் விரும்புவதில்லை..
இன்பத்தை விரும்புகின்றோம்..
துன்பத்தைப் புறக்கணிக்கின்றோம்..
" இன்ப நாட்டம் " என்பது ..
நம்முடைய விருப்பங்களின் ஆதார செயல்பாடாக அமைந்துள்ளது..
இன்ப நாட்டந்தான்..
விருப்பங்களை ஏற்படுத்துகின்றது..
இன்ப நாட்டம் இல்லாவிட்டால்.. விருப்பம் என்று எதுவுமே இல்லை..
விருப்பம்தான் இன்ப நாட்டம்..
இன்பநாட்டந்தான் விருப்பம்..
இரண்டும் ஒன்றே..
ஆக..
இன்ப நாட்டந்தான் நமது பிரச்னைகளின் மூல காரணம்..
இன்ப நாட்டம் எதுவும் இல்லாத நிலையில்.. விருப்பங்கள் எவையும் ஏற்படாது..
விருப்பங்கள் இல்லாத நிலையில்..
விருப்பங்களுக்கு எதிரானவற்றோடு முரண்பாடுகளும் இல்லாமல் போய்விடும்..
முரண்பாடுகள் இல்லாது..
மன நெருக்கடியோ..
மனக் கவலையோ..
ஏற்படும் வாய்ப்பு இல்லை..
எனவே..
இன்ப நாட்டம் இல்லாத நிலைதான்..
சாியான நிலையாக இருக்க முடியும்..
கவலைகள் அனைத்தையும்
வென்றிடும் நிலையாகும்..
இன்ப நாட்டம் இல்லாமலிருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்..?
-- இந்நிலையில் நமது கவனம் எல்லாம்
இன்ப நாட்டம் இல்லாத நிலையை அடைவதில் ஆா்வம் காட்டுகிறது..
இதன் பொருள் என்ன..?
இன்ப நாட்டமில்லாத நிலைதான்
நல்ல நிலை.. அந்த நிலைதான் எனக்கு வேண்டும்.. ஏனெனில்,
அந்த நிலையில் இருந்தால் நமக்குப் பிரச்னைகள் எவையும் ஏற்படாது..
ஆகவே..
இன்ப நாட்டமில்லாத நிலை வேண்டும்.
ஆனால்.. இதுவும்
இன்பத்தை நாடும் போக்குதான்..
இன்பநாட்டமில்லாத நிலைதான்..
இன்பமான ஒரு நிலை என்று கருதி..
இன்பநாட்டமில்லாத நிலையை விரும்புகின்றோம்..
நாம் எதை விரும்பினாலும்..
அது.. இன்ப நாட்டமே..
ஆகவே..
நாம் நம்மையறியாமலேயே.
ஏதோ ஒருவகையில்..
இன்பத்தை நாடிச் செயல்பட்டு விடுகிறோம்..
இப்போது நாம் எங்கிருக்கிறோம்..?
ஞானம் அடைய வேண்டும் என்று விரும்பினோம்..
கவலைகள் எல்லாம் தீா்ந்து போய்விட வேண்டும் என்று விரும்பினோம்..
இவை அனைத்தும் இன்ப நாட்டங்கள்தாம்..
இன்ப நாட்டம் எங்கெல்லாம் இருக்கின்றதோ..
அங்கெல்லாம் போராட்டமும்.. பிரச்னையும் தவிா்க்க முடியாததாகும்..
அப்படியானால்.. நாம் தேடித்தேடி முயற்சி செய்வதில்..
பொருள் ஏதேனும் உள்ளதா..?
நமது முயற்சியே..
நமது தேடுதலே..
நமது துன்பங்களுக்கெல்லாம் காரணமாக அமைந்து விடுகிறது..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.