நானக்(Nanak) என்பவர் காபா (Kaaba) விற்கு சென்றார். அவர் மசூதிக்கு சென்றடைவதற்குள் களைப்படைந்தார், அவர் தன் கையில் இருந்த ஒரு சிறு மூட்டையை, அதில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே கீழேபோட்டுவிட்டு உறங்கிவிட்டார். அந்த மதகுரு மிகக் கோபம் கொண்டார், ஏனெனில் நான்க்(Nanak)ன் கால்கள் அந்த புனிதக் கல்லை நோக்கியிருந்தது. அதனால் அவரை இழுத்து வெளியில் போட்டுவிட்டு “என்ன முட்டாள்தனம் இங்கே செய்கிறாய்? உன் கால்கள் புனிதக்கல்லை நோக்கியிருக்கக்
கூடாது என்ற அளவிற்குக்கூட உனக்கு மரியாதை தெரியாதா? நீ கடவுள் நம்பிக்கை இல்லாதவனா?” என்றுக்கேட்டார். இவ்வாறு கேட்டதில் நானக்( Nanak) ன் தூக்கம் கலைந்தது, அவர் எழுந்து உட்கார்ந்தார். பின்பு மதகுருவை பார்த்து “கடவுள் இல்லாத இடத்தை நோக்கி என் கால்களை போடு, என்னைத் தொந்தரவு செய்யாதே” என்று சொன்னார்.
கடவுள் இல்லாத திசையே இல்லை, ஏனெனில் திசையே தெய்வம்தான், இப்பிரபஞ்சமே தெய்வம்தான், ஆனால் நீங்கள் அதற்குத் திறந்திருக்கவேண
்டும்.
மனம் மூடியிருப்பதினால்தான், இந்த முழு சோகமுடிவும், இந்த மனிதனுடைய இக்கட்டான, நிலையும் ஏற்படுகிறது. மனம் மூடியிருந்துக்க
ொண்டு, சுதந்திரமான ஒன்றுக்கு தேடிக்கொண்டேயிருக்கிறது. மனம்தான் சிறை, இந்த சிறை விடுதலையை தேடிக்கொண்டேயிர
ுக்கிறது. இதுதான் மனித இனத்தினுடைய, சோக முடிவுக்கான காரணம்.
Saturday, 26 March 2016
சோக முடிவுக்கான காரணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.