Time சரியில்லை என்பது ,
மனித இருத்தலில் மூன்று வட்டங்கள் உள்ளன.முதல் வட்டம் உடல்.அது முழுமையடைய 23 நாட்கள் ஆகிறது.இது உடலின் குணாம்சங்களை பாதிக்கிகிறது.நோய் எதிர்ப்பு,பலம்,உடல் செயல்பாடுகள் மற்றும் உடல்நலம் போன்றவை வேறுபடுகின்றன.
இரண்டாவது வட்டம் உணர்ச்சிகள்.அது முழுமையடைய 28 நாட்கள் ஆகின்றன.ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு வந்தவுடன்,3 அல்லது 4 நாட்கள் சோகத்தில்,எதிர்மறையாக, சோர்ந்து, சவமாக, மிகவும் தாழ்ந்த உணர்வோடு,ஒரு நடுக்கத்தோடு ஆடிப் போகின்றாள்.பிறகு மெள்ள மெள்ள இது இப்படித்தான் என வேதனையிலிருந்து விடுபடுகிறார்கள்.
ஆணிற்கும் மாதவிலக்கு இருக்கிறது.அது கண்களுக்கு தெரிவதில்லை. அதிக உணர்ச்சிகமானது.அது எங்கிருந்து வருகிறது.எப்போது போகிறது என நமக்கு தெரிவதில்லை.28 நாள் வட்டம்.அது நிலவை தொடர்கிறது.
மூன்றாவது வட்டம் அறிவுஜீவி வட்டம்.இது ஒரு 33 நாள் காலம்.இது நம் நினைவாற்றலை, எச்சரிக்கை உணர்வை, அறிவை வாங்கி கொள்ளும் திறனை சீர்படுத்துகிறது.
ஒவ்வொரு வட்டத்தின் காலத்தில் முதல்பாதி நேர்மறையானது.இரண்டாவது பாதி எதிர்மறையானது.இந்த மூன்று வட்டங்களும் நேராக இருக்கும்போது, சந்தோசத்தின், பரவசத்தின் உச்சம் நடக்கிறது.மூன்றும் எதிர்மறையாக இருக்கும்போது நரகம் நடக்கிறது.
நாம் நம் கால கட்டங்களை கணக்கு போட்டு கவனித்தால் 10 மாதஙங்களில் நம் நேரம், சந்திப்பு, எதுவுமே தவறாகப் போகாது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.