Sunday 20 March 2016

பதஞ்சலி யோகம் ஞானமடைதலை பின் வருமாறு தொகுத்து இருக்கிறது

பதஞ்சலி யோகம் ஞானமடைதலை பின் வருமாறு தொகுத்து இருக்கிறது

உடலில் இருந்து மனதிற்கு
மனதில் இருந்து ஆன்மாவுக்கு

ஆன்மாவில் இருந்து அந்த எல்லையற்ற பிரபஞ்சத்திற்கு

என்று ஒன்றன் பின் ஒன்றாக அது கூறுகிறது

ஆனால் உடலுக்கும் ஞானமடைதலுக்கும் சம்பந்தமே இல்லை

ஒன்றின் மேல் ஆசைப் பட்டு அதையே தொக்கி நிற்கும் குறிக்கோள் துன்பத்தையே தரும்

நீங்கள் எதையும் அடைய நினைக்காமல் ஒரு புதிய வழியில்

எதிர் கொள்வதை அப்படியே ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள்

உங்களை சுற்றி உள்ளவற்றை மிக ஆழமாக பாருங்கள்

அப்போது அவைகள் மாறுவதைக் கண்டு ஆச்சரியப் படுவீர்கள்

அந்த மாறுதல் உங்கள் உள்ளே நடைபெறுகிறது

நீங்கள் மாறும் போது இந்த உலகமே மாறுகிறது

ஆசைப் படுவதால் எதுவும் நிகழ்ந்து விடாது

ஆனால் நீங்கள் ஆனந்தமாக இருந்தால் அது நிகழும்

மனம் என்றாலே ஆசைப் படுவது தான்

மனம் எப்பொழதும் உங்களை அலைக்கழித்துக் கொண்டே இருக்கும்

இப்பொழுது இங்கே இருந்து கொண்டே அப்போதைக்கு அப்போது செயல் படுங்கள்

நன்றாக சிரியுங்கள் ஓய்வாக இருங்கள்
ஆனந்தமாக இருங்கள்

நீங்கள் இங்கே இப்பொழுது இருக்கும் போது மனம் இருக்காது

ஞானம் என்பது அனுபவித்தல்
(Experiencing)

அது அனுபவம் அல்ல
(Experience)

அறிபவரும் அறிதலும் இரண்டும் வேறாக இல்லாத நிலையில் ஒரு முழுமையான

புதிய தன்மை ஏற்படும் அதுதான் (Experiencing)

உங்களால்
ஆடவும் பாடவும்
அன்பு செலுத்தவும்

அனுபவித்து சாப்பிடவும் நடக்கவும்
நன்றாக தூங்கவும் முடியும்

இவற்றை நீங்கள் முழுமையாக செய்யும் போது அவை மிகவும் அழகாக இருக்கும்

நீங்கள் நடக்கும் போது பேசும் போது யார் செய்கிறார்கள்
என்று கவனியுங்கள்

உங்களுடைய ஆழமான மைய நிலையில் நீங்கள் செய்யவே இல்லை

உங்களுடைய ஆழமான மைய இருப்பு நிலை தொடப் படாமல் அப்படியே இருக்கிறது

இந்த நிலைதான் சாட்சியாக இருத்தல்
(Witnessing).

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.