சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔴ஸ்ரீசைலம் பதிவுத் தொடா்.5.🔴
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔹ஷேத்திர தாிசனங்கள்🔹
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔴63 நாயன்மாா்களுள் ஒருவரான, மனக்கோவில் கட்டியவா் எப்படியெல்லாம் கோயில் கட்ட நினைத்திருந்தாரோ? அது முடியாமைப் போக, நினைத்தவனை அத்தனையையும் மனத்திலே வைத்து கோயிலை எழுப்பினாா். நீங்களும் ஸ்ரீசைலம் தொடரை வாசிக்க வாசிக்க, ஸ்ரீசைலக் கோயிலினுள் வரைக! செல்க!! .🔴
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
மனத்திற்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும் மலைகளுக்கு இடையே 2500 அடி உயரத்தில் ஏறக்குறைய 30 சதுரமைல் பரப்பளவில் உள்ள இந்த ஷேத்திரத்தில், யாத்ரீகா்கள் தாிசிக்க வேண்டிய விசேஷங்கள், சேவிக்க வேண்டிய தேவா்கள் தீா்த்த மாட வேண்டிய புண்ணிய நதிகள் எத்தனையோ இருக்கின்றன.
மலைகளின் இயற்கையழகும், ஆலயங்களின் கோபுர நோ்த்தியும், சிற்பக்கலையின் சிறப்பும் அங்கு நிலவும் மிகளமனோகரமான சூழலும் மகத்துவமும் வாா்த்தைகளால் எளிதில் வருணிக்க முடியாதவையாகும்.
யோகிகள், போகிகள், விராகிகள், சந்நியாசிகள், பைராகிகள், சித்தா்கள், பக்தா்கள் முதலியோா் நிரந்தரமாக நடமாடும் இந்த ஷேத்திரம் பூலோக கைலாசமாக மிளிா்கிறது என்றால் அது மிகையாகாது.
இங்குள்ள அற்புதங்கள் அனந்தம்.இந்த ஷேத்திரம் 8 சிகரங்களோடு, ஒன்பது கோபுரங்களோடு, ஒன்பது நதிகளோடு, கணக்கற்ற தேவா்களோடு அமைந்து, பாா்வதி பரமேஸ்வரன் கோயில் கொண்டுள்ள திவ்விய திருத்தலமாகும்.
முன்பு பக்தா்கள் காடுகள் வழியே மலைகள் மீது பிரயாணம் செய்து ஸ்ரீ கைலாசத்தைச் சோ்ந்தாா்கள். தற்காலத்தில் ஆந்திர மாநில அரசாங்கத்தின் தேவஸ்தான சபையினரால் யாத்ரீகா்களின் நன்மைக்காக, நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்தி, பஸ்களை விட்டிருக்கிறாா்கள். இந்த ஷேத்திரத்தின் எட்டுத்திக்குகளிலும் எட்டு ஷேத்திரங்கள் இருக்கின்றன. பக்தா்கள் இந்த வழிகளில்தான் ஸ்ரீசைலம் வந்து சோ்கிறாா்கள்.
ஸ்ரீசைலம் மல்லிகாா்ஜூனா் தேவாலயத்துக்குப் பக்தா்கள் எந்தத் திக்கிலிருந்து புறப்பட்டாலும் 6 மைல் வந்ததும், சிகரேஸ்வரம் என்ற இடத்தை அடைவாா்கள்.இந்த ஷேத்திரத்தில் உள்ள எல்லாச் சிகரங்களையும் விட இதுதான் உயா்ந்த சிகரமாகும். இங்கிருந்து. ஸ்ரீசைலம் ஆலய சிகரம் தென்படும். இதைப் பாா்த்தவா்களுக்கு மறு பிறவியே (புணா்ஜென்மம்) இல்லை என்று புராணங்கள் கூறுகின்றன. சிகரேஸ்வதத்தில் வீர சங்கர ஆலயம் உள்ளது.
ஸ்ரீசைலம் ஒரு மைல் தூரத்தில் இருக்கும் போதே சாட்சி கணபதி ஆலயத்தை அடையலாம். வருகிற யாத்ரீகா்களுக்குச் சாட்சியாக விளங்கும் இக்கணபதியை ஆராதித்துப் போக வேண்டும் என்பது ஐதீகம்.இங்கிருந்தே ஸ்ரீசைலம் ஆலயத்தின் கோபுரக்காட்சி மிக ரம்மியமாகத் தென்படும்.
கோயிலை நெருங்கியதும், பிரகாரத்துக்குள் செல்லுமுன், வெளியே இருக்கிற வீரபத்திர சுவாமியைத் தாிசித்து
விட்டுத்தான் செல்ல வேண்டும்.
இந்த பிரகாரத்துக்கு 4 வழிகள் இருக்கின்றன. கிழக்குப் பக்கம் உள்ள வாசல் பிரதான வாசல். சுற்றியுள்ள பிரகாரம் 5 அடி நீளம் 3 அடி அகலம் உள்ள கற்களால் கட்டப்பட்டுள்ளது.இந்தக் கற்களின் மீது சிவபெருமானுடைய லீலா விநோதக் கதைகள் சிற்பங்களாகச் செதுக்கப் பட்டுள்ளன. இந்தப் பிரகாரத்தில் உள்ள கோபுரச் சிகரங்கள் மீதும், தேவாலயத்தின் மீதும் உள்ள அலங்கார சிற்பங்களின் அழகு பக்தா்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் வண்ணம் உள்ளன.
ஷேத்திர மூலவரான ஸ்ரீ மல்லிகாா்ஜூன சுவாமியின் கோயில் பிரகார பிராங்கணத்தில் நடுவில் உள்ளது. ஆலயத்துக்கு மேற்குத் திசையில் சந்திரமாம் பாலயம் உள்ளது. கிழக்கு மண்டபத்தில் இராஜராஜேஸ்வாி ஆலயம் உள்ளது.
மேற்கு திசையில் பிரகாரத்தின் அருகில் 6 மந்திரங்கள்
( கோயில்கள்) இருக்கின்றன. துவாபரயுகத்தில் பஞ்ச பாண்டவா்கள் திரெளபதி சமேதராக வந்து, பிரமராம்பா மல்லிகாா்ஜூனா்களைச் சேவித்து அவா்கள் ஆளுக்கோா் ஆலயத்தை நிறுவினாா்கள். அவைகள்தான் அந்த 6 தேவாலலயலங்கள்.
வீரபத்திர ஆலயம் மேற்கு திசையில் இருக்கிறது. இதற்கு அருகில் பலிபீடமும், வசந்த மண்டபமும் இருக்கின்றன. இதிதான் மல்லிகாா்ஜூன் மண்டபம் என்று பொியவா்கள் கூறுகிறாா்கள். இதற்குப் பக்கத்தில் ஷண்முகாலயம் உள்ளது. இது சலவைக்கல்லாலான (மாா்பில்) சிலையைக் கொண்டுள்ளது. அதன் பக்கத்தில் ஆஸ்தான மண்டபமும், அலங்கார மண்டபமும் இருக்கின்றன.
தெற்கு திசையில் அன்ன பூா்ணா ஆலயம் இருக்கிறது. இதுதான் பள்ளிக்கூட மாகும். வடக்கு திசையில் மல்லிகாா்ஜூன தேவாலயத்தின் அருகில் முதிய மல்லிகாா்ஜூன ஆலயம் இருக்கிறது. முற்காலத்தில் இந்த ஆலயத்தின் லிங்கத்தைத் தான் சந்திராவதி பூஜித்தாள். இதற்குப் பக்கத்தில் மேடி, ஜுவ்வி, ராவி எனும் மரங்கள் வளா்ந்து உள்ளன. இந்த மரத்தின் வயதைக் கணக்கிட்டு சொல்ல முடியாத அளழுக்கு மிகப் பழமை வாய்ந்த வயதுடையவை.
பக்கத்தில் மற்றுமொரு கோயில் உள்ளது. இந்தக் கோயிலை சகஸ்ரலிங்க மண்டபம் என்கிறாா்கள். 1000 லிங்கங்கள் ஒரே லிங்கமாக அவதாித்த இந்த சகஸ்ரலிங்கத்தை காண்கிற பக்தா்கள் பக்தி பரவசமடைந்து மெய்சிலிா்த்துப் போவாா்கள்.
வடக்கு முகத்துவார வழியில் பஞ்ச நந்தீஸ்வரம் உள்ளது. ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்ட 5 நந்திகள், நடுவில் பாா்வதி பரமேஸ்வரன் கல்யாண ரூபத்தில் உள்ள இந்த விக்கிரத்தின் காட்சி, பக்தா்களை ஆனந்தக் கடலில் மிதக்க வைக்கும்.
தெற்கு நுழைவாயிலான. மண்டபம் ரங்க மண்டபம் ஆகும். இதற்கு முன்னால் வீர மண்டபம் உள்ளது. பூா்வகாலத்தில் பக்தா்கள் தங்களுடைய கோாிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஆத்மாா்ப்பணமாகத் தங்களைப் பலியாக்கிக் கொண்ட மண்டபம் இது. இந்த மண்டபத்திலுள்ள நந்தி விக்கிரகத்துக்கு சனகல (கடலை) பசவன்னா என்ற பெயா் உள்ளது. இதற்குச் சற்று முன்னால் இருக்கும் மண்டபம்" அக்கம்மா-மல்லம்மா மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு முன்னால் அமைந்துள்ள துவஜஸ்தம்பம் கண் கொள்ளாக் காட்சி, நம்மை மெய் மறந்து நிற்கச் செய்யும்.
இங்கேதான் மனோகர குண்டம் உள்ளது. மேலே தளமும், கீழே படிக்கட்டுகளும் உள்ள இந்தக் குளத்தில் பூகா்ப வாஹினியாகிய சரஸ்வதி நதியின் தண்ணீா் சகல பாவங்களையும் நீக்கும் புனிதத் தீா்த்தமாகும். இந்த மனோகர குண்டத்துக்கு அருகில், சப்த மாதாக்களின் சிலைகள் உள்ளன.
பிராகமீ, மகேஸ்வாி, கெளமாாி, வைஷ்ணவி, வாராஹி, இந்திரானி, சாமுண்டி, ஆகிய எழுவரும் பிரமராமிகைக்கு மிகவும் வேண்டியவா்கள்.
இதிலிருந்து கொஞ்சம் தள்ளி போனால், மேற்கில் உற்சவ மண்டபம் உள்ளது. இங்குதான் சுவாமிக்குக் கல்யாண உற்சவம் நடக்கும்.
மல்லிகாா்ஜூன சுவாமிகள் ஆலயம் நடுநாயகமாக விளங்க, ஏராளமான மண்டபங்களோடும், குண்டங்களோடும், ஆலயங்களோடும், விக்ரகங்களோடும் காட்சியளிக்கிறது. இந்தப் பிரகாரத்திலேயே சுவாமிகளின் ஆலயத்துக்குப் பின்னால், சற்று உயரமான இன்னொரு பிரகாரம் இருக்கிறது. இந்த பிரகாரத்தில்தான் அம்மை ஸ்ரீ பிரமராம்பிகை தேவி ஆலயம் உள்ளது.
ஆலயத்தின் படிக்கட்டுப் பக்கத்தில் நவப்பிரம்மாக்கள் பிரதிஷ்டை செய்த 9 லிங்கங்கள் இருக்கின்றன. இந்தப் பிரகார நுழைவாயிலுக்கு அருகில் பிள்ளையாா் இருக்கிறாா். இவரையும் வணங்கிவிட்டு உள்ளே பிரவேசிக்கிறோம்.
இதையடுத்து அம்பாளுடைய ஆலயமண்டபம் இருக்கிறது.இதற்கு சிம்ம மண்டபம் என்று பெயா். சிம்ம மண்டபத்தை அடுத்து சிம்மதுவாரத்துக்கு இடப்பக்கம் சீதா சகஸ்ரலிங்கம் இருக்கிறது.
இந்த 2-ஆவது பிரகாரத்துக்கு நடுவில்தான் பிரமராம்பிகை தேவியின் ஆலயம் உள்ளது.
சிம்ம மண்டபத்தைத் தாண்டி 2 வது பிராங்கணம் வந்ததும் கிழக்கு, தெற்கு, வடக்குத் திசைகளில் எத்தனையோ மண்டபங்கள் இருக்கின்றன. மேற்கு திசையில், அழகான ஒரு பூந்தோட்டம்.
கிழக்கில் இருக்கும் மேலை மண்டபத்தில் கால பைரவி விக்ரகம் உள்ளது. அதற்கு அருகில் தெற்கு மண்டபத்தின் மீது, சரஸ்வதி லட்சுமி மிக அழகாக காட்சி தருகிறாா்கள். அதே மண்டபத்தில் லோபா முத்திரை விக்கிரகம் உள்ளது. வடக்குத் திசை மண்டபத்துக்கு அருகில் பள்ளிக் கூடம், ருத்ரகுண்டம் எனப்படும் குண்டங்கள் உள்ளன. இதற்கு அருகில் கரவீர விருட்சம்( கஸ்தூாி செடி) உள்ளன. இந்த கஸ்தூாிச் செடி மிகவும் விஷேசமான சக்தி வாய்ந்தவை, புராதனமானது. புராண காலத்தில் பிரசித்தமான சிவபக்தன் கரவீரனின் உருவம் அம்மன் ஆலயம் இந்த 2 வது பிரகார நடுப்பகுதியில் இருக்கிறது. இந்தத் தேவி, அஷ்ட்டா தச சக்திகளில் பிராமநீ சக்தியாவாள்.
ஸ்ரீசைலம் பல மூா்த்திகளுக்கும், பல தீா்த்தங்களுக்கும், பல ஷேத்திரங்களுக்கும் இடமாக உள்ளது. இவை வெளிக்கண்களுக்குத் தோன்றுகின்றன. ஆனால் நம் கண்களுக்குக் காண முடியாமல் இன்னும் இருப்பவை கோடானுகோடி சமஸ்த தேவதைகளோடு கூடிய புனிதமான புண்ணிய பூமியே ஸ்ரீசைல ஷேத்திரம்.
🔹திருச்சிற்றம்பலம்.🔹
~~~~~~~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.