வாழ்க வளமுடன். ஏன் உங்களுக்கு தங்கம், வெள்ளி.மீது இவ்வளவு கோபம். அது வந்த கதை (உருவாகி) எவ்வளவு ஆழமானது.
அது வசதி படைத்தோரும், வாய்ப்பு உள்ளோரும் .கவலை படட்டும்.
அல்லது ஆனந்தப் படட்டும்.
நமக்குள் முன்னோர்கள் விட்டுச் சென்றதும். நாம் ஐம்புலன்களாலும்,
எண்ணங்களாலும் சேர்த்து வைத்துள்ளதை அழிக்க இன்னும் எவ்வளவு
ஆண்டுகள் ஆகுமோ? நல்ல குரு கிடைத்தும். குறைகளையே ஏன் பார்க்க வேண்டும்.
தங்கமும், வெள்ளியும் அதன் மதிப்பை ஏன் இழக்க வேண்டும்.
அதன் மதிப்பும் விலையும். குறைந்தால் எந்த மாற்றமும் ஏற்படாது.
இரும்பும், ஈயமும். மதிப்பில்லாமல் இருக்கிறதோ?
இயற்கையில் எங்கும் எதிலும் குறைவில்லை.
நாம் எடுத்துக் கொள்ளும் பக்குவத்தில் தான் மாற்றம் வேண்டும்.
தங்கம் எப்படி நெருப்பில் கொதித்து, உளியில் தட்டி. அதன்பின்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தன்னிடம் எந்த மாற்றமும்
இல்லாமல் உயர்ந்து நிற்கிறதோ? அது போல் நாம் நம்மிடம்
உள்ள குறைகளை பொறுமையோடும், சகிப்புத்தன்மையோடும்
ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்டு, இறைநிலையோடு ஒத்தும்
உதவியும் இருந்தால். எங்கும் அமைதி நிறைந்து இருப்பதை
உணர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் பார்ப்பது போலவே பலரும் இருக்கிறோம்.
மாற்றம் நமக்கு மட்டுமே வேண்டும்.
------வாழ்க வளமுடன்.
நன்றி, என்றும் அன்புடன்.
பூமிக்கடியில் இருந்தாலும் கண்முன்னே இருந்தாலும் அதன் மதிப்பு ஒன்றுதான்.
மனிதர்களில் உருவத்தில் அரக்கன், பக்தன், தேவன்..என்பது போல்
மகரிஷி இந்தத் தங்கத்தையெல்லாம் கொண்டு கப்பலுக்கு போல்ட்டு, நட்டுப்
பகுதிகளுக்கு இரும்புக்குப் பதிலாக தங்கத்தைக் கொண்டு தயாரித்தால் எப்போதும்
துருப்பிடிக்காமல் இருக்கும். என்றும் சொல்வார்.
யாருக்கு எது தெரியாமல் இருக்கிறது. எதையும் திணிக்கும் போதுதான்
அதன்மீது வெறுப்போ, ஆசையோ அதிகரிக்கிறது.இந்த உலகத்தில் வெறுப்படைய
ஒரு பொருளோ, நிகழ்ச்சியோ கூட இல்லை.என்பார் மகரிஷி.
வாசப்படியில் நாம் போய் இடித்துக் கொண்டு, வாசல்படி என்னை இடித்துவிட்டது.
என்பது போல் தான் நாம் காணும் குற்றங்கள் எல்லாம்....
------வாழ்க வளமுடன்.
நன்றி, என்றும் அன்புடன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.