Monday, 28 March 2016

உன்னை நீ உணர

உன்னை நீ உணர
தேவைகளற்ற தேவைகளை குறை - பகிர்வு

உன் தேவையற்ற தேவைகளை எப்பொழுது குறைத்து கொள்ள போகின்றாய்- உன்னை நீ யார் என்று தெரிந்துகொள்வதுக்க்கு எப்பொழுது தயாராக போகின்றாய்,

உன்னை சுற்றி பல விதமான offer கள் உன்னை கவர்ந்து உன்னை வியாபாரம் ஆக்கி கொண்டு  நீயே மூழ்கி கொள்வதை எப்பொழுது உணர போகின்றாய்!

உன்னை சுற்றி உள்ளவர்கள் தேவையற்ற பொருள்களை வாங்கி பெருமை பட்டு கொள்வதை கண்டு நீயும் அதில் மூழ்கி உன்னை இழக்க செய்கின்றாய்!

உன்னை சுற்றி உள்ள

soap டப்பா முதல் கொண்டு mixi grinder வரை ,

Two wheeler முதல் கார் வரை

ஆடை முதல் நகைகள் வரை

ஓட்டு வீடு முதல் அடுக்கு மாடி  concrete appartment வரை

சிறு தொழில் முதல் பெரிய export business வரை

மேலே உள்ள அனைத்துக்கும்- உன்னை சுற்றிலும் ஏதோ ஓரு offer, loan , ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என அனைத்து விஷயங்களுக்கும் digital sound effect , modern graphics செய்து சிறந்த modelling நடிகர்- நடிகைகளை கொண்டு விளம்பரம் செய்து உன்னை மயக்கி வியாபாரம் செய்து கொள்வதை- உன்னிடம் எல்லா பொருள்களுமே இருக்கும் ஆனால் முட்டாள் தனமான உன் இயல்பு மீறிய  ஆடம்பரமான தன்மையை நோக்கி சென்று நீ உன்னை அடமானம் வைத்து மண்டியிட்டு கொள்வதை  எப்பொழுது நீ எப்பொழுது உன்னை தெளிவு படுத்தி கொள்ள போகின்றாய்!

இன்றைக்கு உன்னை சுற்றிலும் தன் தயாரிப்பில் உருவான பொருள்களை விற்க எவ்வளவு மெனக்கெட்டு உன்னிடம் திணிக்கும் தன்மை இருக்கிறது- ஏன் நீ கூட உருவாக்கும் பொருளை அந்த நிலையில் தான் வியாபாரம் செய்வாய்,

இந்த சூழ்நிலைகளில் உன் பேராசையின் பேரில் சிக்கி கொண்டு வாழ்க்கை முழுவதும் அந்த கடனை அடைக்க அதன் பின்னால் தான் வெகு அவசரமாக ஓடிக் கொண்டு இருக்கின்றாய் - இந்த தேவைகளை ஓரு பாராங்கள் போல சுமந்து கொண்டு உன் நிம்மதியை இழக்க செய்கிறாய்! 

ஆனால் இது தான் உலக இயல்பாக இருக்கிறது என்பது உண்மை தான் ஆனால் இது தான் உன்னை உணர்ந்து சந்தோஷமாக வைத்துக் கொள்ளவும் தடையாக இருக்கிறது!

சரி என்ன தான் செய்வது, நீயும் யாரையும் வற்புறுத்தி மற்றவர்களின் உணர்வுகளை உழைப்பை  எல்லை மீறி உன் பேராசையின் பேரில் சுரண்டாதே - அதே போல மற்றவர்களும் உன்னை பயன் படுத்தி உன் உணர்வுகளை சுரண்டும் அளவிற்கு உன் பேராசையின் பேரில் சிக்கித் கொள்ளதே!

சரி அடிப்படையில் உன்னை உணர வேண்டும்  என்றால்- உன் தேவைகளற்ற தேவைகளை குறைக்க குறைக்க தான் உன்னை நீ யார் என்றே பார்க்க முடியும் !

உன்னை சுற்றி யார் எப்படி இருந்தால் என்ன உன் அடிப்படை இயல்பு என்ன என்பதை  நீ உணர்ந்து கொண்டு தெளிவாக உறுதியாக வாழ உனக்கு நீயே முயற்சி செய்!

உனக்கு ஒரே நாளில் 20 விசேஷங்கள் இருக்கலாம் , நீ ஊர்ல பெரிய ஆள் நான் தான் எல்லா வற்றையும் கட்டி ஆண்டு கொண்டு இருக்கிறேன் , எனக்கு 4 தொழில் உள்ளது எங்கப்பா உக்காந்து பேச நேரம் இல்லை  என பெருமை பீத்தியே உன் தேவைகளை உருவாக்கி கொள்வதும், இது போன்ற பல்வேறு வகையில் உன்னை சுற்றிலும் வெட்டி தேவைகளை உருவாக்கி
வைத்துக்கொண்டு இருக்கிறாய் , இது  ஓரு வகையில் உன்னை நீ உணர தடை தான்- அதிலும்  அளவு தேவை !

உன் தேவைகளை அதிக படுத்தி கொண்டே சென்றால் எங்கு உனக்கு உள்ளே உன்னை நீ பார்க்க நேரம் இருக்கும் - தேவைகளை எவ்வளவுக்கு எவ்வளவு நீ அதிக படுத்தி கொண்டு செல்கின்றாயோ அவ்வளவுக்கு அவ்வளவு உன் வாழ்க்கை முழுவதும் அதன் பின்னாடியே ஓடிக் கொண்டே இருக்க வேண்டியது தான்!

உனக்கும் உன்னை உணருவதுக்கும் எவ்வளவு தூரம் என்று பார்த்தால் உன் தேவைகளின் அளவு எவ்வளவு இருக்கின்றதோ அவ்வளவு இடைவெளி உன்னை உணர  இருக்கிறது !

நீ ஆன்மீகத்தில் பல வருடங்கள் இருக்கலாம் ஆனால் இந்த அடிப்படையை உணராமல் நீ ஆழமான
தியானத்துக்கே செல்வது சிரமம் தான்!

உன்னை நீ ஆழ்ந்து கவனித்து கொண்டே இருந்தால் நீ பல விஷயங்கள் தேவை இல்லாத ஒன்றாக தான் இருக்கும் - இதன் இறுதியில் உன் இயல்பான அடிப்படை தேவை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும் !

அந்த தெளிவில் கூர்ந்து கவனித்து ஒவ்வொன்றாக உன் இயல்பில் அதை விட விட உனக்கு உள்ளே இருக்கும் பாதையை அது விளக்கி செல்வதை நீ உணர முடியும்.

இந்த தேவைகள் குறைய குறைய தான் உனக்கு உள்ளே சிறுக சிறுக உனக்கு உள்ளே வெற்றிடத்தை உணர முடியும்.

உனக்கென நீ சேர்த்து வைத்திருக்கும் சேர்த்து கொண்டு இருக்கும் குப்பை தேவைகளை குறைத்து கொண்டே செல் உன் வாழ்வின் தன்மையை உணர்ந்து சந்தோஷமாக வாழ முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தன்மைகளிலும் ஒரே நிலையில், உன் உள் நிலைகள் நிலை குழையாமல் மயங்கி ஓட்டி கொள்ளாமல்  இருக்க இயல்பாக ஆழ்ந்த தியானம் செய்!

அது உன்னை water purifier போல purify (சுத்தம் செய்து கொண்டே செல்லும்

ஒன்றை நீ தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது எதையும் அடக்கி வைத்து குறைத்து கொள்ளாதே அது அதிகமாக தான் செய்யும் -  உன் சக்திக்கு ஏற்றவாறு முழுமையாக  அனுபவித்து விட்டு அதில் இருந்து இயல்பாக வெளியே வா இது தான் முழு மாற்றத்தை தரும் ,

ஒவ்வொன்றிலும் உண்மை நிலையை  உணர முழுமையாக உன்னை கவனித்து கொண்டே இரு - உனக்கு உள்ளே இருக்கும் இருப்பு உன் வசம் ஆகும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.