Sunday 20 March 2016

கோபம்🤔

.          🤔 கோபம்🤔
காற்றில் அலைப்புறும் சருகைப்போல வாழ்வெனும் வெளியில் அலைப்புற்று இருப்பவன் மூடன்.

தான் யாரென்பது தெரியாது.

எங்கிருந்து வந்திருக்கிறோம் என்பது தெரியாது.

எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாது.

சந்தர்ப்பவசமாக பிறந்துவிட்டு சந்தர்ப்ப வசமாக இருந்து கொண்டிருப்பவன்,பிரஞ்ஞையற்றவன்.

இருத்தலையோ சத்தியத்தையோ எதார்த்தத்தையோ உளமாறத் தேடாதவன்.

கூட்டம் போகிற போக்கில் போகிறவன்,ஆட்டு மந்தை புத்தி கொண்டவன்.தனித்துவம் இல்லாதவன்.

தன்னுடையது என்று இனங்கான முடியாத அளவுக்கு அறிவு இல்லாதவன்.

பிறரை அப்படியே பின்பற்றுகிறவன்.

பெற்றோர் கொஞ்சம் சொல்லி வைத்திருக்கிறார்கள்.ஆசிரியர்கள் கொஞ்சம்,அரசியல்வாதிகள் கொஞ்சம்,பூசாரிகள் கொஞ்சம்,அவர்கள் சொன்னதை அப்படியே பின்பற்றுகிறான்.

தான் ஏன் இங்கிருப்பது?

எதற்காக?

என்ன செய்கிறோம்?

எதற்காக அப்படி செய்கிறோம்?

இப்படியான கேள்விகளை அவன் எழுப்புவதே இல்லை.

இத்தகைய கேள்விகள் அவனை அசௌகரியப்பட வைக்கின்றன.அவனுள் இறுக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அவற்றை அவன் தவிர்க்கிறான்.

தரப்பட்ட பதில்களை அவன் அப்படியே ஏற்றுக்கொள்கிறான்.அவற்றைப்பற்றிய எந்தச் சந்தேகமும் அவனுக்கு இருப்பதில்லை.

நம்பிக்கை வைக்கிறான் என்பதில்லை.அவனுக்கு நம்பிக்கை என்று ஏதும் இல்லை.

தன்னுடைய சந்தேகங்களை அவன் அடக்கி வைத்திருக்கக் காரணம் சந்தேகப் படும்போது அசௌகரியமாக உணர்கிறான் என்பதுதான்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.