Thursday, 31 March 2016

ஆத்மா பற்றிய விளக்கம்

👉ஆத்மா பற்றிய விளக்கம்👈

A nice explanation for soul

👉 உடலுக்குள் ஆத்மா உண்டா??

👉 அது அழிந்து போகாதா??

உடல் அழிந்து போகிறதே?.
~~~~~~~~~~~~~~~~~~

👉 விளக்கம் சொல்லுங்கள் என்ற சீடனுக்கு குரு விளக்கினார். .

"  பால் "
பயனுள்ளதுதான்...

ஆனால் அதை அப்படியே விட்டால் கெட்டுப்போகும்..

அதில் ஒரு துளி
உறை மோர் விட்டால் பால் தயிராகி விடும் கெடாது...

தயிரான பால் இன்னும் ஒரு நாள் தான் தாங்கும்....

அப்படியே விட்டால் கெட்டுப் போகும்...

அதைக் கடைய வேண்டும்.... கடைந்தால் வெண்ணெய்
ஆகி விடும் கெடாது...

வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது....

அப்படியே விட்டால் கெட்டுப் போகும்....

அதை உருக்க வேண்டும்...

சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும்...

அந்தப் பரிசுத்தமான நெய் கெடவே கெடாது......

கெட்டுப் போகும் பாலுக்குள்
கெடாத நெய் இல்லையா??

அதுபோலத்தான்...

👉 அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஆன்மா உண்டு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.