புத்தர் கூறுகிறார் :
நீங்கள் விழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டால் வாழ்க்கை
முழுக்க
ஒரே இடத்தில் சிக்கிக் கொண்டிருந்ததை
உணர்ந்து கொள்வீர்கள்
விழித்துக் கொண்டவர்களின் அகம் ஓரிடத்தில் இருப்பதில்லை
அது வளர்ந்து கொண்டேயிருக்கும்
கடவுளை போகிற போக்கில் சந்திக்க முடியாது
கடவுளை எங்கும் தேடிக் கண்டு பிடிக்க முடியாது
நீயே கடவுளாகிப் போவதுதான் கடவுளை அடைய வழி
ஆன்மிக உலகம் மிக நுண்ணிய உலகம்
அதை உணரத்தான் முடியும் ஆனால் பார்க்க முடியாது
தெளிவு பிறந்து விட்டால் நீ அகத்தில் எதையும் சேகரித்து வைத்துக் கொள்ள தேவையில்லை
சேர்த்து வைத்துக் கொள்வது எல்லாம் கடந்த காலத்தின் குப்பைகளே
சேகரித்து வைத்த கடந்த காலமே உன் அகங்காரம் ஆகிறது
அகங்காரம் உனக்குள் நிறைந்து போக கடவுள் அங்கே நுழைய இடம் இல்லாமல் போகிறது
எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் எதையும் சேகரித்து கொள்ளாமல் இரு என்கிறார் புத்தர்
தெரிந்து வைத்துக் கொண்டதெல்லாம் கடந்த காலத்தை சேர்ந்தது
தெரிந்து கொள்வது என்பது நித்தியம் அது நடந்து கொண்டு இருப்பது
ஒரு பண்டிதர் தெரிந்து வைத்திருப்பவர்
ஒரு அறிஞர் தெரிந்து வைத்திருப்பவர்
ஆனால் ஒரு புத்தர் தெரிந்து கொள்பவர்
தெரிந்து கொள்பவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள்
அவர்கள் எப்போதும் பிரக்ஞையுடன் இருக்கிறார்கள்
எனக்கு தெரிந்து விட்டது என்று எப்போதும் சொல்ல மாட்டார்கள்
ஒரே நதியில் இரண்டு முறை காலை நனைக்க முடியாது என்கிறார் ஹெராக்ளிட்டஸ்
யாரும் எப்போதும் அதே ஆளாக இருப்பதில்லை
அவர்களுடைய உணவு தெரிந்து கொள்வதில் இருக்கிறது
அவர்கள் எப்போதும் காலியாகவே வாழ்கிறார்கள் அப்படி இருப்பதில் ஒரு பரிசுத்தம் இருக்கிறது
நீ தெரிந்ததை கழித்துக் கட்டி விட்டு தெரிந்து கொள்ளும் பிரக்ஞையாகிப் போய் விடு
சுதாரித்தலோடு
கவனமாக இருக்கிற
சாட்சியாக இருக்கிற
பிரக்ஞையாகிப் போய் விடு
ஓஷோ
தம்ம பதம் III
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.