Wednesday, 23 March 2016

வாழ்வின் முதல் பாடம்

வாழ்வின் முதல் பாடம்
தன்னலம் பேணுதல்
உன்னை நேசி , உன்னை காதலி
உன்மீது இணைப்புணர்வு (TRUST) கொள்
இதுதான் அடிப்படை பாடம், பால பாடம்.
உன்னை நேசிக்க ஆரம்பி.
நீயே உன்னை நேசிக்காவிட்டால் வேறு யார் உன்னை நேசிக்கப் போகிறார்கள்
எப்போதாவது ஒருமுறை எப்படியாவது சமுதாயத்தின் பிடியிலிருந்து யாராவது ஒருவர் தப்பித்து விடுகிறார்.
எப்போதாவது ஒரு முறை ஒருவர் சமுதாயத்தினால் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கிறார்.
இது சமுதாயத்தின் ஏதாவது ஒரு தவறாகவோ அல்லது ஒரு பிழையாகவோ இருக்க வேண்டும்.
இல்லாவிடில் சமுதாயம் உனது வேரை அழிப்பதில், உன் மீது உனக்குள்ள இணைப்புணர்வை அழிப்பதில் வெற்றி பெற்று விடுகிறது.
அப்படி அது நடந்துவிட்டால் உன்னால் யாருடனும் இணைப்புணர்வு கொள்ள முடிவதில்லை.
உன்னால் உன்னை நேசிக்க முடியாத போது உன்னால் யாரையும் நேசிக்க முடியாது போய் விடுகிறது.
இது நிதர்சனமான சத்தியம், உண்மை.
இதற்கு விதிவிலக்கே கிடையாது.
உன்னால் உன்னை நேசிக்க முடியும்போதுதான்
உன்னால் அடுத்தவரையும் நேசிக்கமுடியும்.
சமுதாயம் தன்னலத்தை கண்டிக்கிறது.
அது அதை சுயநலம் என்கிறது, அது அதை கிறுக்குத்தனம் என்கிறது.
ஆம், தன்னலம் பேணுதல் கிறுக்குத்தனம்தான்.
ஆனால் அது தேவையான ஒன்று. அது உன்னைத் தாண்டி செல்லவில்லையென்றால் கிறுக்குத்தனமாகக்கூடும்.
அது உன்னைப்பற்றி மட்டும் என்று இருக்குமானால் அது ஒருவிதமான சுயநலமாக மாறும்.
மற்றபடி தன்னலம் தான் மற்ற அனைத்து அன்பிற்க்கும் ஆரம்பம்.
தன்னை நேசிக்கும் ஒரு மனிதன் கூடியவிரைவில் அன்பால் நிறைந்து வழிவான்.
தன்மீது இணைப்புணர்வு கொண்டிருக்கும் ஒரு மனிதனால் மற்றவரோடு இணைப்புணர்வின்றி இருக்கமுடியாது.
-- ஓஷோ --
Sunday at 6:16pm·P

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.