Thursday, 10 March 2016

குழந்தையாக மாறுவோம்- மகிழ்ச்சியாக வாழ்வோம் - பகிர்வு

குழந்தையாக மாறுவோம்- மகிழ்ச்சியாக வாழ்வோம் - பகிர்வு

சற்று முன்னே என் அருகில் ஒரு இரண்டு வயது குழந்தை அதன் இயல்பில் ஓடி- ஆடி, கையை - மேலே கீழே வீசிக் கொண்டு சந்தோஷமாக ஆடி- பாடி , விளையாடியதை நண்பர் ஒருவரிடம் பாருங்க குழந்தை ஆனந்தமாய் ஓடி ஆடி அது அதன் இயல்பில் யாரை பற்றிய கவலையும் இல்லாமல் விளையாடி கொண்டு இருப்பதையும் ஆனால் நமக்கு இது போல கையை கால்கள்  வீசி ஆடி பாட தோன்றினாலும் ஆடுவது இல்லை காரணம் அவுங்க-இவுங்க என்ன நினைப்பார்கள் என நம் சந்தோஷத்தை அடுத்தவர்கள் அபிப்ராயத்தில்  கொடுத்து நம் உணர்வுகளை அடக்கி வைக்கும் முட்டாள்கள் ஆக இருக்கிறோம் என்று   பகிர்ந்து கொண்டேன் ,

அதன் பின் அந்தக் குழந்தை பக்கத்தில் இருந்த  ஒரு சிறு waste பொருளை எடுத்து யதார்த்தமாக விளையாடிக் கொண்டு இருந்தது, குழந்தையை தேடி வந்த அம்மா அந்த குழந்தையை அவர்கள் வேலை கெட்டு விட்டு  தேட வேண்டி உள்ளது என்றும் ,அந்த சாதாரண waste விளையாட்டு பொருளை எடுத்ததுக்கு  அந்த குழந்தையை அடித்து  எடுத்து சென்றார்.

குழந்தையில் இருந்தே அதன் இயல்பான உணர்வை, சந்தோஷத்தை அடக்கி, அதை உணர்வற்ற ஜடம் போல உருவாக்கும் தன்மையை என் உள்ளே ஒரு உணர்வு சொன்னது இது போல நம் தன்மை இருக்க கூடாது என்று.

பின்பு குழந்தைகள் நிலை பற்றி- வேதாத்திரி மகரிஷி அவர்களும், ஓஷோ அவர்களும் குழந்தைகளை அடக்காமல் அதனை அதன் இயல்பில் வாழ விடுவதில்லை- நீங்கள்  திரும்பவும்  குழந்தையாக மாறுங்கள் என்ற சொன்னதை  தத்துவமாக   கேட்டதை  இன்று ஆழமாக உணர்வு பூர்வமாக  புரிந்து கொள்ள முடிந்தது,

நாம் ஒரு திருவிழா நடக்கும் பொழுது  அல்லது நாம் வண்டியில் பயணம் செய்யும் பொழுது, எங்கேயாவது மத்தாலம் தட்டி எல்லோரும் ஆடி பாடுவதை பார்க்கும் பொழுது, எதாவது ஒரு hi base song - குத்து பாட்டு  நம் அருகில் நம் காதில் நுழையும் பொழுதும், எட்டி குதித்து ஆடி பாடலாம் என்று தோன்றும் ஆனால் ஆட மாட்டோம் காரணம் சமுதாயத்தில் நம் மேல இருக்கும் இமேஜ் என்ன ஆவது ஆன்மீகத்தில் இருப்பவன் ஆடி பாடினால் பைத்தியம் கிறுக்கன் என்று சொல்லி விடுவார்கள்  என்ற முட்டாள் தனமான ego தான் காரணம் என்பதை நான் உணர்ந்தேன்,

இப்பொழுது உங்கள் கேள்வி நீ ஆடி பாடினாயா என்று ?

ஆம் நான் ஆடி பாடி மகிழ்ந்தேன் மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன்

நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் பொழுது car ஓரமாக நிறுத்தி ஆடிய நாட்கள் உண்டு இப்பவும் வாய்ப்பு கிடைத்தால் ரெடி தான், குதித்து- பறந்து நிற்பது போல photo எடுத்த தருணத்தில் 31வயதில் இருக்கும் நான் குழந்தை ஆனதை உணர்ந்து மகிழ்ந்தேன்,

இரண்டு  வருடங்கள் முன்பு  ஒரு நாள் ,எங்கள் ஊர் திருவிழாவில் என்னால் முடிந்த வரை சந்தோஷமாக எல்லோர் முன்பு   ஆடின பொழுது என்ன அமைதியாக  இருப்பவன் இப்படி ஆட்டம் போடுகிறான், புதிதாக தண்ணி அடித்து கொண்டு ஆடி கொண்டிருக்கிறான் என்று என்னை சொல்லி உள்ளதை மறுநாள் காதில்  கேட்ட பொழுது சிரிப்பு வந்தது!

ஆடி பாடும் அந்த சமயங்களில் இந்த மனம் ஓடுங்கி சந்தோஷத்தில் ஆழ்ந்து கவலைகள் குப்பைகள் இல்லாத நிலையில் spiritual music போட்டு ஆடும் பொழுது மிக்க மகிழ்ச்சி அடைவதை உணரும் பொழுது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை தாண்டி, என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் சந்தோஷத்தை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என்பதையும் உணர்கிறேன். அது நிகழ் காலத்தில் இருந்து பழகவும் உதவியாக உள்ளது,

இதனால் நான் ஆன்மீகவாதி இல்லை என்றால் மிக்க மகிழ்ச்சி , ஆனால் நம் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது அதனால் மற்றவர்களுக்கு உண்மையில் இன்னொருவருக்கு துன்பம் இல்லாத நிலை தான் ஆன்மீகம் என என் உணர்வு சொல்கிறது. 

நான் ஆடி பாடுவதினால் இன்னொருவருக்கு இவன் மட்டும் ஆடி கொண்டிருக்கிறான் என்றும், நானும் ஆடினால் என்  இமேஜ் என்ன ஆவது என்று தனக்கு உள்ளே இருக்கும் ஆசையை முடக்கி வைத்து அங்கலாயித்து கொள்வதுக்கும், அவர் துன்ப பட்டு கொள்வதுக்கும் நான் பொறுப்பு
அல்ல !

உண்மையில் அடி மனதில் இருந்து அவரவர் தன்னை கேட்டு கொண்டால் வாய்ப்பு கிடைத்தால் ஆடுவதுக்கு எல்லோரும் ரெடியாக தான் இருப்போம் ஆனால் நம் ego நம்மை பாட படுத்துகிறது.

இதெல்லாம் எந்த ஞானி சொன்னார்கள் இவன் என்ன ஆன்மீகத்த்தை கெடுத்து,  குட்டு செவிறு ஆக்கி விடுவான் என்று நினைப்பவர்கள், சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால் உங்கள் ஆள் மனதில் இப்படி ஒரு  வாய்ப்பு கிடைக்கவில்லையே என்றும், வாய்ப்பு கிடைத்தும் நம் இமேஜ் உடைக்க முடியவில்லை என்பதும் புரியும்

ஆடி பாடி தான் சந்தோஷத்தை தேட வேண்டுமா என்ற கேள்வி வரும் ?

அப்படி இல்லை உங்களுக்கு உள்ளே எப்படி வேண்டுமானலும் சந்தோஷம் அடையாளம், எந்த விஷயம் உங்களுக்கு உண்மையில் சந்தோஷத்தை கொடுக்கின்றது என உங்களுக்கு உள்ளே பாருங்கள் அதில் மகிழ்ந்து குழந்தை ஆகுங்கள் ,  ஆனால் அந்த சந்தோஷமான உணர்வுகளை அடுத்த நபருடைய அபிப்ராயத்திர்க்காக இது போல உள்ள என்னில் அடங்காமல் உள்ள  உங்கள் சந்தோஷத்தை குழந்தை தனத்தை இழக்காதீர்!

என் பெருமையை வெளிப்படுத்துகிறேன் என்பதை தாண்டி அதில் உள்ள உட்கருத்தை ஆழமாக சிந்தித்து பார்கக எழுதிய பதிவு இது,உங்களுக்கு உள்ளே இருக்கும் சந்தோஷத்தை உணர வைக்கவும், என் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள  எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு.

விருப்பம் இருந்தால் எடுத்து கொள்ளலாம், இல்லை எனில் படிக்காமல் விட்டு விடலாம்!

குழந்தையாக மாறுவோம்- மகிழ்ச்சியாக வாழ்வோம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.