ஆனாபானசதி தியானம்"
"ஆனாபானசதி" இது ‘கெளதம புத்தர்’ 2500 வருடங்களுக்கு முன் பயின்று வந்த தியான முறையாகும். இந்த தியானத்தை இடைவிடாமல் மேற்கோண்ட பின்புதான் "சித்தார்த்தர்" என்னும் மனிதர், 'கெளதம புத்தர்' என்னும் 'மகான்' ஆனார். பாலி மொழியில்

'ஆனா' என்றால் 'உள் இழுக்கும் மூச்சு'
'அபான' என்றால் 'வெளிவரும் மூச்சு'
'சதி' என்றால் ஒன்றியிருப்பது.
ஆக "ஆனாபானசதி" என்றால், 'நம் சுவாசத்தோடு நாம் ஒன்றியிருப்பது என்று பொருள். இதனையே, "சுவாசத்தின் மீது கவனம்" என்றும் சொல்லலாம். "ஆனாபானசதி" தியானம் உலக மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.
தியானம் என்றால் நம் சுவாசத்தின் மீது நமது முழுகவனத்தை வைத்திருப்பதாகும். அவ்வாறு மூச்சை கவனித்துக் கொண்டிருந்தால், நமது மனம் எந்த சிந்தனையுமின்றி, சாந்த நிலையை அடையும்.
மனம் அந்த நிலையை அடையும் போது, அளவற்ற விஸ்வசக்தி நமது உடலில் பாய்கிறது. விஸ்வசக்தி நமது நாடிமண்டலத்தை சுத்தகரித்து, நமது மூன்றாம் கண்ணை இயக்குகின்றது. இந்த விஸ்வசக்தியின் மூலமாக நல்ல உடல் ஆரோக்கயமும், அமைதியான மனநிலையையும் மற்றும் பல ஆன்மிக அனுபவங்களையும் பெறுவோம்.
தியானம் செய்யும் முறை
தியானம் செய்வதற்கு, சுகமான ஆசனத்தில் அமர வேண்டும். தரையில், பாய் மீதோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கொள்ளவும். பாதங்களை ஒன்றின் மீது ஒன்றாக இணைத்துக் கொள்ளவும். இரு கை விரல்களை ஒன்றுடன் ஒன்றாகக் கோர்த்துக்கொள்ளவும். உடல் இறுக்கமாக இல்லாமல் தளர்த்தியபடி இயல்பாக இருக்க வேண்டும். பின்பு கண்ணாடி இருந்தால் கழற்றி விட்டு, கண்களை மெதுவாக மூடிக்கொண்டு நம்மில் இயல்பாகவும், இயற்கையாகவும், மென்மையாகவும் நடக்கும் சுவாசத்தின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும். எந்த மந்திரங்களையும் உச்சரிக்க வேண்டாம். கடவுள் மற்றும் மகான்களின் உருவத்தை நினைக்கக் கூடாது. மனதில் எண்ணங்கள் எழும்போது, அவற்றைவிட்டு, முழு கவனத்தையும் சுவாசத்தின் மீது செலுத்தவும்.
தியானம் செய்யும் நேரம்
தினமும் குறைந்தபட்சமாக, அவரவரது வயதிற்கு நிகரான நேரம் தியானம் செய்ய வேண்டும். உதாரணமாக, 10 வயது சிறுமி 10 நிமிடங்களும், 60 வயதுடையவர் தொடர்ந்து 60 நிமிடங்களும் தினமும் தவறாமல் தியானம் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.