பார்ப்பதை இரசிப்பது மகிழ்ச்சி
பிடித்ததை ருசிப்பது மகிழ்ச்சி
நூல்களை வாசிப்பது மகிழ்ச்சி
உயிர்களை நேசிப்பது மகிழ்ச்சி
உறவுகளை போற்றுவது மகிழ்ச்சி
நட்பினை நாடுவது மகிழ்ச்சி
விரும்பி சமைப்பது மகிழ்ச்சி
விருந்து வைப்பது மகிழ்ச்சி
சேவைக்கு கொடுப்பது மகிழ்ச்சி
தேவைக்கு வாழ்வது மகிழ்ச்சி
இருப்பதை பகிர்வது மகிழ்ச்சி
சமமாய் நுகர்வது மகிழ்ச்சி
இசையோடு லயிப்பது மகிழ்ச்சி
இரசனையோடு துய்ப்பது மகிழ்ச்சி
பற்றிலா வாழ்க்கை மகிழ்ச்சி
சுற்றுலா செல்வதும் மகிழ்ச்சி
அன்பால் உணர்வது மகிழ்ச்சி
பண்பால் உயர்வது மகிழ்ச்சி
செய்யும் கடமை மகிழ்ச்சி
அதுவாய் ஆவது மகிழ்ச்சி
முகவரியில்லா தோழர்களின்
முகநூல் தோழமை மகிழ்ச்சி!
நீ, நீயாக வாழ்வது மகிழ்ச்சி!!!
மகிழ்ச்சியே வாழ்வின் வெற்றி........!!!!!!!"
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.