Tuesday 22 March 2016

ஜபத்தில் பலவகை உண்டு அதில் ஒரு சிலவற்றை பார்ப்போம்.

ஜபத்தில் பலவகை உண்டு அதில் ஒரு சிலவற்றை பார்ப்போம்.
1, வாசிக ஜபம் – உரக்க வாய்விட்டு { பிறர் கேட்கக் கூடிய அளவுக்கு } ஜபம் செய்வது வாசிக ஜபம் எனப்படும்.
2, உபாம்சு ஜபம் – ஒலி வெளியே எழுப்பாமல், உதடுகளும் நாக்கும் அசைய மந்திரத்தை உச்சரிப்பது உபாம்சு ஜபம் எனப்படும்.
3, மானஸ ஜபம் – இந்த முறையில் புனித மந்திரம் மனதிற்குள்ளேயே ஜபிக்கப்படுகிறது.
சாதாரண பூஜையைக் காட்டிலும் வாசிக ஜபம் பத்து மடங்கு மேலானது. அதைவிட உபாம்சு ஜபம் பத்து மடங்கு உயர்ந்தது, உபாம்சு ஜபத்தைக் காட்டிலும் மானஸ ஜபமானது 1000 மடங்கு உயர்ந்தது. அதிகமான விரைவாக பலனை தர கூடியது. என்று “ மனு சம்ஹிதை “ என்ற நூல் கூறுகிறது.
4, லிகித ஜபம் – புனித மந்திரத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை எழுதுவது என்பது லிகித ஜபமாகும்.
5, அகண்ட ஜபம் – இதில் புனித மந்திரமானது ஒரு குறிப்பிட்ட நேரம் இடைவிடாமல் ஜபிக்கப்படுகிறது. இதை கூட்டு வழிபாடாகவும் செய்வது வழக்கம்.
6, அஜபா ஜபம் – இறைவன் நாமத்தை எந்த நேரமும் ஒவ்வொரு மூச்சுடனும் இடைவிடாமல் ஓதி வருவதே அஜபா ஜபமாகும்.
7, ஆதார சக்ரங்களில் ஜபம் – இந்த முறையில் நமது உடலிலுள்ள மூலாதாரத்தில் தொடங்கி, சக்ஸ்ராரம் வரையிலுள்ள ஒவ்வொரு சக்ரத்திலும் மனதை நிலைநிறுத்தி ஜபமும், தியானமும் பழகப்படுகிறது.
இதில் ஒவ்வொரு நிலையையும் தாண்டி சக்ஸ்ராரத்தை அடைந்தவுடன் சாதகனானவன், மீண்டும் சகஸ்ராரத்தில் தொடங்கி ஒவ்வொரு ஆதாரமாக மனதை நிறுத்தி ஜபம் செய்வது புரஸ்சரணம் எனப்படும்.
இதன்படி ஜபத்தின் எண்ணிக்கையை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே சென்று ஒரு குறிப்பிட்ட இலக்கு வந்தவுடன், அதை மீண்டும் ஒவ்வ்வொரு நாளாகக் குறைத்துக்கொண்டே வர வேண்டும்.
உதாரணமாக ஒரு சாதகர் ஒரு அமாவாசைக்கு மறுதினம் பிரதமையில் ஒரு ஆயிரம் தடவை {ஆவர்த்தி} ஜபம் செய்து புரஸ்சரணத்தை தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு மறுதினம் அவர் துவிதியையில் 2000. அதற்கு அடுத்த தினம் மூவாயிரம் என்று இவ்விதமாக ஒரு நாளைக்கு ஒரு ஆயிரம் கூடுதலாக ஜபம் செய்துகொண்டே சென்று பௌர்ணமியன்று 15.000 முறை மந்திரத்தை ஜபம் செய்வார். பிறகு பௌர்ணமிக்கு மறுதினத்திலிருந்து ஒரு நாளைக்கு ஒரு ஆயிரமாக எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டே வருவார்.
இவ்விதம் இந்த புரஸ்சரணம் என்ற இந்த சாதனையை சாதகனின் குருவானவர் எவ்வளவு நாட்களுக்குச் செய்யும்படி சொல்லியிருக்கிறாரோ அவ்வளவு நாட்கள் வரை செய்து அதன் முடிவில் தான தர்மங்கள், ஹோமம் போன்றவற்றைச் செய்யவேண்டும்.
“ யோகினி ஹ்ருதய தந்திரம் “ என்ற நூல் புரஸ்சரணம் செய்வதற்கென்று சில இடங்களைச் சிறப்பாகக் கூறுகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.