Sunday, 20 March 2016

சிந்திப்போம், தெளிவும் பெறுவோம்.

வேதாந்தத்திற்கும், சித்தாந்ததிற்கும் ஒரு சிறு வேறுபாடு உண்டு.

வேதாந்தம் புரிதலே ஞானம் என்று கூறுகிறது.

ஆனால், சித்தர்கள் உணர்தலே ஞானம் என்பார்கள்.

மகரிஷி இதை இரெண்டையும் இணைத்து மனவளக்கலை கொடுத்திருக்கிறார்.

புரிதலுக்கு விளக்கம் வேண்டும். உணர்தலுக்கு பயிற்சி வேண்டும்.

ஆகையால் நாமும் நமக்குள் இருக்கும் முந்தைய கருத்து தான் சரி என்று வலுவாக நிற்காமல், இங்கு சொல்லக்கூடிய கருத்துகளில் ஏதாவது சரியாக இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

தற்போது மகரிஷி இல்லை என்றாலும்கூட அவருடைய கருத்துக்கள் இன்னும் உயிரோடு தான் நம்மிடையே பல வேதாத்ரிய விழுதுகளால் வளம் வந்துகொண்டு தான் இருக்கிறது.

நமக்கு எழும் சந்தேகளுக்கு நம் சிந்தனையின் மூலமாகவோ அல்லது உணர்த்து தேர்ந்த ஞான ஆசிரியைகளின் மூலமாகவோ நாமும் உணர்வதற்கு முயற்சி செய்வோம்.

பல நேரங்களில் நமக்குள் நாம்முடைய சிந்தனையில் ஆழ்ந்து சிந்திக்கும்போது பதில் வந்துவிடும்.

சிந்திப்போம், தெளிவும் பெறுவோம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.