Tuesday, 1 March 2016

பொறுமை

🙏 ❤ பொறுமை ❤🙏

பொறுமை ஆன்மீக குணங்களில் மிகச் சிறந்தது. உன்னால் பொறுமையாக இருக்க முடிந்தால் வேறு எதுவும் தேவையில்லை.

பொறுமை மட்டுமே போதுமானது, அது மட்டுமே போதும். வெறெதுவும் தேவையில்லை. பொறுமை என்றால் இணைப்புணர்வு.

எந்த வித அவசரமும் இல்லாமல், எந்த வித அறிபறியும் இன்றி இணைப்புணர்வோடு இருத்தல்.

நேசம் மிகவும் மெதுவாக வளரும், அதற்கு பொறுமை தேவை.

பொறுமை மிகவும் கவனமானது, பொறுமை சக்தியானது, பொறுமை விரிவடையக்கூடியது.

காத்திருத்தல் என்பது மிகவும் சிறப்பான குணம், அதற்கு ஆழ்ந்த பொறுமை தேவை. அது ஆழமான இணைப்புணர்வு.

உன் உள்ளிருப்பு குணப்பட தேவை ஒரு ஆழ்ந்த பொறுமை.

பயணகாலம் அளவிட முடியாதது. எனவே அளவற்ற பொறுமை தேவை.

பொறுமையான மனிதன் தியானிப்பவனாக மாறுவான், ஏனெனில் அவன் உள் வாங்குபவனாக மாறுகிறான்.

❤ ஓஷோ ❤

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.