அதிகாலை குளியல் மகத்துவம் !!!
காலையில் படுக்கை தேனீர்அருந்துபவரா நீங்கள்? இது உங்களுக்குத்தான்! அதிகாலையில் விழித்து எழுபவர்களை பற்றிய இலண்டன் பல்கலை ஆய்வை கீழே படியுங்கள்.
அதிகாலையில் பிரம்மமுகூர்த்தத்தில் செய்யும் செயல்கள் இரட்டிப்பு பலன் தரும் என்று முன்னோர்கள் கூறி அதிகாலை எழும் பழக்கத்தை உண்டாக்கினார்கள்.
பாரதியாரும் காலை எழுந்தவுடன் படிப்பு என்கிறார். கோவில்கள்,ஆஸ்ரமங்கள், காலை 5-5.30மணிக்கு,பூஜைக்காக அழைக்கிறார்கள் வேதங்கள் படிக்கிறார்கள். காலை 3 முதல் 4 வரை தேவகுளியல், மானிடர் குளிக்கலாகாதென்றும், 4 முதல் 6 வரை மானிடக் குளியலென்றும், சூரியோதயத்திற்க்குப் பின் ராட்சச குளியல் குளிக்கலாகாதென்றும் வகுத்து அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதுவும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பதால் நாடி நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன.வியாதியஸ்தர்கள் மட்டுமே வெந்நீரில் குளிக்கலாம்.
அதிகாலைக் குளியல் தங்கத்திற்கு சமம். தங்கத்தை சுடாக்கியபின் சில விநாடிகளில் சுடு ஆறிவிடும். அது போல் பிரம்ம முகூர்த்த குளியலில் உடல் சுடு முழுமையாக வெளியேறுகிறது. ஆறுமணிக்கு பின் ஒரு மணி நேரத்திற்குள் குளிப்பது வெள்ளிக்கு சமம். உடல் சுடு பாதிதான் வெளியேறுகிறது. ஏழுமணிக்கு பின் குளிப்பது இரும்பிற்கு சமம். இரும்பு சுடு ஆற அதிக நேரம் ஆகும் அதுபோல் உடல் சுடு முழுமையாக வெளியேறாமல் உடலிலேயே இருக்கும். குளிப்பதனால் கிடைக்க வேண்டிய பலன் கிடைக்காது.
மேலும் படுக்கையில் இருந்து வெறும் வயிற்றில் சூடாக அருந்துவதால், இயல்பான நிலையிலிருக்கும் குடல் விரிவடைந்து, பலமிழக்கின்றன.ஜீரண சுரப்பிகள் அழிந்து அஜீரணக்கோளாறுகள் உண்டாகின்றன.
இப்படி உடலை கெடுக்கும்-சோம்பேறியாக்கும் பழக்கம் நமக்கு தேவையா?
அதிகாலையில் விழித்தெழுங்கள்!
சுறுசுறுப்பாயிருங்கள்!!
மேலை நாட்டினரை நம் கலாச்சாரத்திற்க்கு வரும்போது நீங்கள் ஏன் அவர்களை
போல் மாறுகிறீர்கள்?
நாம் நாமாகவே இருப்போம்!
நமது கலாச்சாரம்,பண்பாடு காத்து -ஆரோக்கியமாய் வாழ்வோம்!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.