நமக்காக நம் வாழ்க்கை - பகிர்வு
இந்த பதிவை படித்து முடிக்கும் பொழுது ஒரு புள்ளி அளவாவது நம் வாழ்க்கை எப்படி நாம் இழக்காமல் வாழ்வது , சந்தோஷத்தை ஒவ்வொரு நொடி பொழுதும் இழக்காமல் வாழ்வது எப்படி என்று புரிந்து கொள்ள முடியும்,
பெரும்பாலும் இன்றைக்கு நம் வாழ்க்கையை யார் வாழ்கிறார் என்று பார்த்தால் அடுத்தவர்களுக்காகவே, அடுத்தவர்கள் கையில் நம் வாழ்க்கையை மனதளவில் கொடுத்து தான் வாழ்கிறோம் என்பது கிட்ட திட்ட 90 விழுக்காடு உண்மை என்பதை, பின் வருமாறு புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது,
இந்த பதிவில் முதலில்
மேலோட்டமாக ஆரம்பித்து பின் ஆழமாக செல்வோம்,
உதாரணம்
1.ஓரு வாலிபன் தனக்கு ஒரு தொழிலில் மிக ஆர்வமாக உள்ளான் அதை பற்றி முழுமையாக தெரிந்து வெற்றி அடைய அவனுக்கு தெரியும், ஆனால் இந்த நிலையில் அவன் வீட்டில் பெற்றோர்களிடம் சொல்கிறான் , அவர்கள் உடனே ஜாதகம் பார்த்து நேரம் காலம் பார்த்து விட்டு செய்யலாம் என்று சொல்கிறார்கள் இது அவன் முன்னேற்றத்திர்க்கு முதல் தடை,
பின்பு ஜாதகத்தை தூக்கி கொண்டு ஜாதகரிடம் செல்கின்றனர், அவர் சொல்கிறார் இந்த ராசி நட்சத்திர படி இப்பொழுது இதை செய்தால் நட்டம் ஆகும் என்றும்
ஒரு வருடத்துக்கு பின் தொழில் செய்தால் முன்னேறலாம் என்று சொல்கிறார், உடனே பீதி பேதி வந்து -வேண்டாம் என்று முடிவு செய்து அந்த வாலிபருடைய திறமைகளை, அவனுடைய உத்வேகமான உணர்வுகளை மற்றும் வாழ்க்கையை ஒரு வருட காலத்திர்க்கு முடக்குவதை உணர்வதில்லை
ஓரு உதாரணம் இங்கு தேவைபடுகிறது
அமைதி படை படத்தில் சத்யராஜ் தன்னுடைய ஆயுள் எவ்வளவு என்று கேட்பதும் ஜாதகர் அதர்க்கு உங்களுக்கு ஆயுள் குறைவு என்றும் பிறகு உங்களுக்கு எவ்வளவு ஆயுள் என்று கேட்கும் பொழுது கிட்ட திட்ட 90 க்கு மேல் என்று சொல்வார், உடனே சத்யராஜ் துப்பாக்கி எடுத்து சுட்டும் கொன்று விடுவார் அங்கு அவரின் நிலை அல்ப்ப ஆயிசு தான் அந்த ஜாதகர்க்கு - அதை பார்த்து வேடிக்கையாக சிரிப்பார் சத்யராஜ் ,
அது போல தான் நான் வெகு வேய்க்காணம், என்னை யாரும் ஏமாற்றி விட முடியாது என்று பல பேர் நினைத்து கொண்டு தன் வாழ்க்கையை முட்டாள் தனமாக இழக்கின்றனர் என்பதை பின்வருமாறு புரிந்து கொள்ளலாம் ,
இப்பொழுது உங்களது கேள்வி என்னிடம் என்னவென்று எனக்கு தெரியும் அப்ப ஜாதகம் பொய்யானதா ? அது எனக்கு தெரியாது, ஆனால் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று நாம் தீர்மானம் செய்ய முடியாத வாழ்க்கை சூழ்நிலையில் ஒரு வருடத்திர்க்கு அப்புறம் நடப்பதை எப்படி தீர்மானம் செய்ய முடியும். இங்கு இந்த நிமிட நிகழ் காலம் மட்டுமே உண்மை என்பதை எல்லோரும் அறிந்ததே!
ஜாதகர் எல்லாம் கணிக்க கூடியவர்கள் என்றால் தன் வாழ்வில் அனைத்தையும் பெற்று விட முடியுமே , ஆனால் ஏன் முடிவதில்லை என்பது எனக்கு தெரியவில்லை!
இன்னும் சொல்ல போனால் சந்திரன், சூரியன் , காற்று ,கடல் , மரங்கள் வளர்வது, இதெல்லாம் நேரம் காலம் பார்த்து இயங்கினால் இங்கு நாம் உயிர் வாழ முடியுமா ?
பூனை, நாய் மிருகங்கள் என எதுவும் நேரம் காலம் பார்க்காமல் சந்தோஷமாக வாழ்கின்றது ஆனால் நாம் ?
மறுபடியும் matter க்கு வருவோம்,
அந்த வாலிபருக்கு- இருக்கும் ஆற்றல், வாய்ப்பு ,திறமை, நம்பிக்கை, அவனுக்கு நிறைவேற்ற, முடிகின்ற ஆசை அவனது முன்னேற்றம் என அனைத்தையும் ஜாதகர் நம் முட்டாள் தன நம்பிக்கையினால் சுரண்டப்படுவதையும் சுத்தமாக உணர்வதில்லை
2.இது போல தான் சமையல் செய்யும் பெண்கள் முழுக்க முழுக்க தன் உழைப்பை கொடுத்து சமைத்து விட்டு தன் சமையல் திறமையை தன் கணவனிடம் கேட்கிறார், அவர் சரி இல்லை என்றால் -தன் உணர்வுகளை இழக்கின்றனர், தான் செய்யும் சமையல் ருசி தனக்கு முழுமையாக (அதை சாப்பிட்டு பார்த்து தெரிந்திருக்ககூடும்) என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
3.ஒரு பிடித்தமான ஆடையை தேடி தேதி பார்த்து எடுத்து அதை ஒரு function கு போட்டு கொண்டு போகிறோம் அங்கு யாராவது ஒருவர் சரி இல்லை என்றால் அல்லது முகம் சுழிக்கும் படி பார்த்தால் தன் மொத்த மகிழ்ச்சியையும் இழக்கின்றனர்- பிறர் தன் அபிப்ராயம் சொல்லும் நிலை வரை -நாம் நாமாக இருந்தோம் , ஆனால் அதற்க்கு பின்னர் நாம் நம்மை நம் சுய உணர்வுகளை இழந்தோம் , என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
4.ஓரு குடும்பத்தில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் ஒரு நாள் உறவினர் ஒரு பெண் வருகிறார் வந்த பின்பு எனக்கு என் மகன் 10 pown நகை வாங்கி கொடுத்தான் என்று இந்த வீட்டில் இருக்கும் சந்தோஷம் பொறுக்க முடியாமல் உசுப்பு ஏற்றுவதை புரிந்து கொள்ளாமல் அவர்களோடு ஒப்பிட்டு தன் மகன் மேல் இருக்கும் அன்பு சலிப்பாக divert ஆகுவதை உணர்வதில்லை
5.பார்த்து பார்த்து வீடு, car, dress என ஆசை பட்டு வாங்கும் பொருள்களில் தன்னை விட சிறந்ததாக பக்கத்து வீட்டில் வந்தால் ஒப்பிட்டு நம் மகிழ்ச்சியை அடுத்தவர்களுக்காக இழந்து சலிப்பை ஏற்படுத்தி கொள்கிறோம்.
மொத்தத்தில் நாம் எல்லாவற்றையும் அடுத்தவர்கள் கையில் கொடுத்து அவர்களின் அபிப்ராயத்தில், நாம் நம்மை இலக்கிறோம் என்பதை உணர்வதில்லை.
இதெல்லாம் car bike வீடு வாகனம் இவை எல்லாம் ஒரு வகையில் மேலோட்டமாக சந்தோஷத்தை கொடுத்தாலும் ஆழமான சந்தோஷம் என்பது இதற்கு எல்லாம் அப்பாற்பட்டது
நாம் வெளிப்படையாக நம்மை சுற்றி உள்ளவர்களிடம் எந்த வித சுயநோக்கம் இல்லாமல் பழகி வரும் அன்பு சிரிப்பு, மகிழ்ச்சி இதெல்லாம் காசு கொடுத்து வாங்க முடியாது, காசு மூலமாக மலரும் அன்பு எதுவாக இருப்பினும் அது ஒரு வியாபாரமே அது நம் குடும்பமாக இருந்தாலும் சரி,
சரி இதை எல்லாம் தாண்டி பேரானந்தம் என்று ஒன்று உள்ளது அது நமக்கு உள்ளே உணர்வுகளாக உள்ளது,
அதை நாம் உணரும் பொழுது நடந்தால், நின்றால்,தூங்கினால், உட்கார்ந்தால் என எதை செய்தாலும் நேசிக்கும் ரசிக்கும் தன்மை ஆகும்.
இதர்க்கும் அப்பால் ஒரே ஒரு உதாரணம் உலகம் முழுவதும் சரி சமமாக இயங்கி வரும் ஒரே ஒரு "காற்றை" - மரங்கள், மிருகங்கள் முதல் மனிதன் வரை உருண்ஜி சுவாசித்து உள்ளே இழுத்து , அதை வெளியே விட்டு ஒவ்வொருவரும் ஒரே ஒரு காற்றில் அனைவரையும் இணைத்து வைத்து அன்பின் வழியில் எல்லா உயிர்களுமே ஒன்றோடு ஒன்று இணைந்த சொந்தம் என்பதை மறைபொருளாக இருந்து "இயற்கை" இயக்கி கொண்டு இருப்பதை நினைக்கயில் கண்களில் நீர் தேங்குகிறது, இதை நாம் எப்பொழுது நிரந்தரமாக ஒவ்வொரு நொடிபொழுதும் உணர்வது,
நமக்கு சட்டென்று மன விரிவு வந்து பின்பு சட்டென்று மறைவதை புரிந்து தியானத்தின் மூலம் நிரந்தரமாக ஆக்கிக் கொள்வது நம் முயற்சியில் தான் உள்ளது.
இது போல இயற்கை பற்றின பேரானந்தத்தை பற்றி சொல்லி கொண்டே போகலாம் மனம் விரிய விரிய!
எனவே நண்பர்களே வாழ்க்கை நமக்காக மட்டுமே என புரிந்து கொண்டு உண்மையாக சுயமாக வாழ ஆரம்பிக்கும் வழியை தேடலாம் இயற்கை தன் பாதையை சரியாக நமக்கு உள்ளே காட்டும்
எனவே உழைப்பு, திறமை, சிந்திக்கும் திறன், அன்பு ,மகிழ்ச்சி , நட்பு இவை அனைத்தையும் அடுத்தவர்கள் கையில் கொடுத்து வாழ்வை இழக்காதீர்கள்,
உண்மையை தேடும் பொழுது உங்களுக்கு வரும் குழப்பங்கள் சந்தேகம் இவை அனைத்துக்கும் உண்மையாக இருக்கும் நபர்களை, வாழ்ந்து இயற்கையோடு இணைந்த ஞானிகளை இயற்கை காண்பிக்கும், உங்கள் அருகில் கொண்டு வரும்.
நமக்கான இந்த வாழ்க்கை சுய உணர்வை- அடுத்தவர்களுக்காக இழந்து வாழும் இடங்களை ஆழமாக நான் மேலே குறிப்பிட்ட உதாரணங்கள் தாண்டி உங்கள் வாழ்வில் இழந்து கொண்டு இருக்கும் தன்மையை உணர்ந்து மாற்றுங்கள் , உங்கள் வாழ்க்கை உங்களுக்காக.
சுயமாக சந்தோஷமாக வாழலாம் நண்பர்களே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.