Thursday, 31 March 2016

கர்மாவின்செயலின்,தியானம்?

கர்மாவின்செயலின்,தியானம்?
உண்மையில் தியானிப்பது கர்மாவின் செயல்பாட்டில் தலையீடு செய்வது கிடையாது   
பதிலாக அதை தாண்டி குதித்து விடுவது அந்த சுழலும் சக்கரத்திலிருந்து வெளியே எட்டி குதித்து விடுவது நீ அதிலிருந்து வெளியே வந்துவிடலாம் ஓரு முறை நீவெளியே வந்து விட்டால் பின் அது மாயையாகிவிடும்
ரமனமகரிசி:-✳✳✳✳✳✳
கான்சரில்இருந்தபோது பரிசோதித்த மருத்துவ ர்கள் ஆச்சரியம் அடைந்தனர் அவரது உடல் மிகவும் வலியோடு சிரமப்பட்டு இருந்தது ஆனால் அவரது கண்களின் வலி தெரியவில்லை வலியை அனுபவிக்க வில்லை
இந்த உடல் கர்மாவின் பகுதி தண்ணுணர்வால் தாண்டி போகும்முடியும் ✳✳✳அவர் சாட்சியாளனாக இருந்தார் உடல் வலியை அனுபவித்து கொண்டு இருக்கும் போது அதில் தலையீடு செய்யவில்லை என்ன நடக்கிறது என பார்த்து கொண்டு இருந்தார் யாருக்கோ நிகழ்வது போல✴✴✴✴✴✴பல பிறவிகளாக சேர்ந்த கர்மாகளும்,எல்லா துயரமும் இந்த பிறவியிலேயே அனுபவித்தாக வேண்டும் ஏன்னெனில் நீ மறுபடியும் பிறப்பெடுக்க போவதுஇல்லை இது தான் கடைசி உடல்  ஞானம் அடைந்த பிறகும் உடல் ரீதியாகவும் பல துன்பத்தை அனுபவிப்பது பல முறை நடந்திருக்கிறது

ஆத்மா பற்றிய விளக்கம்

👉ஆத்மா பற்றிய விளக்கம்👈

A nice explanation for soul

👉 உடலுக்குள் ஆத்மா உண்டா??

👉 அது அழிந்து போகாதா??

உடல் அழிந்து போகிறதே?.
~~~~~~~~~~~~~~~~~~

👉 விளக்கம் சொல்லுங்கள் என்ற சீடனுக்கு குரு விளக்கினார். .

"  பால் "
பயனுள்ளதுதான்...

ஆனால் அதை அப்படியே விட்டால் கெட்டுப்போகும்..

அதில் ஒரு துளி
உறை மோர் விட்டால் பால் தயிராகி விடும் கெடாது...

தயிரான பால் இன்னும் ஒரு நாள் தான் தாங்கும்....

அப்படியே விட்டால் கெட்டுப் போகும்...

அதைக் கடைய வேண்டும்.... கடைந்தால் வெண்ணெய்
ஆகி விடும் கெடாது...

வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது....

அப்படியே விட்டால் கெட்டுப் போகும்....

அதை உருக்க வேண்டும்...

சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும்...

அந்தப் பரிசுத்தமான நெய் கெடவே கெடாது......

கெட்டுப் போகும் பாலுக்குள்
கெடாத நெய் இல்லையா??

அதுபோலத்தான்...

👉 அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஆன்மா உண்டு...

பார்

எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கவனத்தோடு பார்

எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தியானித்து பார்

தியானம் உன்னை முழுமையாக்குகிறது

ஆழ்ந்து கவனிக்கும் போது  அறிவு கிடைக்கும்

தியானத்தோடு கவனிக்கும் போது அறிவு கழியும்

கூர்ந்த கவனம் இறுக்கத்தை ஏற்படுத்தும்

தியானம் மனதில் எந்த இறுக்கமும் இல்லாமல் தளர்வை ஏற்படுத்தும்

தெரிந்து கொள்வது அறிவு
புரிந்து கொள்வது தியானம்

தியானத்தில் நீ எதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை

தியானத்தில் மனம் கழிந்து போய் கேட்கிறாய்

அதில்தான் பரவசம் இருக்கிறது

சத்தியத்தை கேட்கும் போதெல்லாம் அதை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை

அது உன்னுடைய இருப்பின் ஒரு பகுதி ஆகி விடும்

அறிவு சாதிப்பது
அறிவு இலக்கு நோக்கியே பயணிக்கும்

பயன் கருதியே எதையும் அறிவு கற்றுக் கொள்ளும்

அறிவு உன்னைக் காரியம் செய்கிறவன் ஆக்குகிறது

அப்போது நீ ஒரு போலியான மையத்தை ஏற்படுத்திக் கொள்கிறாய்

முழுமைக்கு மட்டுமே மையம் இருக்க முடியும்

நீ கற்றதை கழித்து விடும்போது உனக்கு அகங்காரம் என்ற ஒன்று இல்லாமல் போய் விடுகிறது

மக்கள் எல்லோரும் சவால்களையும் சண்டை போடவும் தான் விரும்பு  கிறார்கள்

சண்டையிடும் போது தான் அகங்காரத்தை காப்பாற்றி வைத்துக் கொள்ள முடியும்

கற்பது காரியம் ஆற்ற துணை செய்கிறது

காரியம் செய்வது போராடத் துணை செய்கிறது

போராட்டம் அகங்காரத்தை படைக்கிறது

நீ இல்லாமல் போகும் போது எல்லாமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது

முழுமை இயங்கிக் கொண்டிருப்பதால்

எல்லாமும் நடந்து கொண்டிருக்கின்றன

செய்வதை நிறுத்தி விடும் போது நீ முழுமைக்கு ஒரு பாதையாகிப் போகிறாய்

அப்போது முழுமை உன் வழியாக இயங்கிக் கொண்டிருக்கும்

ஓஷோ
தாவோ
மூன்று நிதியங்கள்

மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.!!.

குட்டிக் கதை

ஒரு அழகான சிறுமி, தன் கைகளில் இரண்டு ஆப்பிள்களை வைத்திருந்தாள்...

அங்கு வந்த அவளின் தாய், "நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கிறாய்.. ஒன்று எனக்கு கொடு.!." என்றாள்...

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.

அடுத்ததாக இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்...

தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது.

தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...

உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்...
"அம்மா இந்த ஆப்பிள்தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க.!. என்றாள்...

🔴நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.,..

🔴எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்.,..

🔴அறிவு விஸ்தீரமாகவும் இருக்கலாம்.,..

ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்...

அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து,
அவரை அறியவும்...
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்...

எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்...

மனக்கணக்கு தவறலாம், மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.!!.

அடிப்படை உண்மைகளை உணர்ந்து சந்தோஷமாக வாழு - பகிர்வு

அடிப்படை உண்மைகளை உணர்ந்து சந்தோஷமாக வாழு - பகிர்வு

நீ உன்னை உணர முதலில் உன் அடிப்படை உண்மை தன்மை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

ஆழமான உண்மையை உனக்கு எந்த வழி  சிறந்ததோ, எந்த வழி சுலபமோ, எது இயல்பாக காண்பிக்கிறதோ அதை நீ முழுமையாக உணர்ந்து  பெற்று கொள்வதுக்கு-  உன்னை நீ எப்படி வேண்டுமானாலும், உனக்கு பிடித்த மாறி, எந்த வகையில் வேண்டுமானாலும்  மாற்றிக்கொள் அது தவறாக நிச்சயம் ஆகாது , ஏனெனில் உண்மை என்பது ஒன்றே ஒன்று தான்!

உனக்கு உள்ளே நீ ஆழமாக உணராத எதுவாக இருந்தாலும் அது  ஒரு பொய்க்கு சமம் தான் அது ஞானிகள் சொல்லி முழுமையான உண்மையாக  இருந்தாலும் இதில் அடங்கும் !

நீ முழுக்க முழுக்க 99% உன்னை சுற்றி வெளியே கிடைத்த கருத்துக்கள், வெளியே கிடைத்த தத்துவங்கள், சடங்குகள், மனமற்ற நிலை அல்லது சுத்தவெளி என உனக்கு வரும் தத்துவங்கள்  எந்த நிலையாக இருந்தாலும் அது உன்னை அடக்கி பிடித்து வைக்கும் பிடிப்பு தான்- அது  உன்னை உணர ஒருபோதும் உதவாது என்று எப்பொழுது புரிந்து கொள்ள போகின்றாயோ அப்பொழுது தான் நீ நீயாக அடிப்படையை உணர்ந்து வாழ  முதல் படி எடுத்து வைக்கிறாய்,

கருத்துக்களை தத்துவங்களை பிடித்து தொங்கிக் கொண்டே வாழ்க்கை தொலைத்து கொள்கிறாய், உன்னை தொலைத்து கொள்வது இல்லாமல் இயல்பாக இருப்பவர்களுக்கு அதே புரியாத உணராத உனது  தத்துவங்களை சொல்லி அவர்கள் வாழ்க்கையும் இழக்க செய்கின்றாய் என்பதை உணர்வது எக்காலமோ இறைவா !

உனக்கு தேவை பட்டால் இணைத்து கொள்ளவும், உன் ego வு க்காக வெளியே ஏற்றுவதுக்கும் நான் உனக்கு ஆளில்லை , இது போல உன்னை வெளியேற்றம் செய்யும் பொழுது ஏன் சங்கம் சேற்று குச்சல் செய்து கொண்டிருக்கிறாய் அங்கு உன் தத்துவம் எங்கே போயிற்று, உனக்கே நிலையான முடிவை எடுக்க தெரியவில்லை பின்பே ஏன் வெட்டி தத்துவம் பல ஆண்டுகால ஆன்மீக சடங்கு என உனக்கு நீயே கேட்டு பார்!

இழப்பதுக்கு எனக்கு ஒன்றுமில்லை ஆனால் உன் ego வால் பல பேர் உண்மையை உணர்வதற்கு நீயே தடை என்பதை புரிந்துகொள்,

நீ ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்று வைத்துக்கொள்  அதன் உண்மை வழி பாதையை உனக்கு கிடைத்தை நீ உணர்ந்து உள்ளாய்-ஆனால் அதில் நீ உன்னை எப்படி இழக்கிறாய் என்பதை உதாரணம் கொண்டு பார்ப்போம் பின்வருமாறு,

நீ வாகனத்தை ஓட்டி செல்கிறாய் -உனக்கு முன்னே,
உனக்கு பின்னே ,
உனக்கு இடதில் ,
உனக்கு வலது புறம் என நான்கு பக்கமும் உன்னை சுற்றிலும் வாகனம் செல்கின்றது நீ நடுவில் உனக்கு கிடைத்த  பாதையை நோக்கி  பயணிக்கிறாய்,

அப்பொழுது உன்னை சுற்றி உள்ள வாகனத்தில் வருபவர்கள் ஆளு ஆளுக்கு high beam  digital effect horn  sound  எழுப்புகின்றனர் அவர்கள் பயணிக்கவும் , அவர்களுக்கு தெரிந்த தன்மையை கொண்டு உன்னை ஒதுக்கி ஓரம் கட்டி செல்வதுக்கு , அப்பொழுது நீ அதை பொருட்படுத்தி நீ அதை கவனித்தால் அல்லது பார்வையை மாற்றினால் உன் பாதையை உன் இயல்பை இழந்து மாற்றி விடுவாய்.

ஆனால் நீ உனக்கு கிடைத்த பாதையை, நீ எதையும் கண்டு கொள்ளாமல் உன் முழு கவனத்தில் கிடைத்த உண்மை பாதையை மட்டும் நீ நோக்கி சென்றால் உன் இயல்பில் நீ போக வேண்டிய இடத்துக்கு நிச்சயம் சென்று விடுவாய்,

சுற்றி உள்ள டிஜிடல் horn sound என்று சொல்வது முட்டாள் கருத்து , ஒன்றுக்கும் உதவாத உணராத தத்துவங்கள் ஆகும் - பாதை என்பது ஆன்மீக பாதை ஆகும்.

இன்னொரு உதாரணம் ஒருவன் உதவி செய்யும் கையில் அன்பு இருந்தால் போதும் அது வலது கை - இடது கை என பிரித்து பார்க்க நினைக்கும் பொழுது அங்கு சடங்குகளை பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கின்றாய் என புரிந்துகொள்,

ஒருவன் உள்ளே வெறுப்பு கொண்டு வலது கையில் அந்த வேலையை செய்வதும் , ஒருவனுக்கு வலது கையே இல்லாமல் இடது கையில் அன்புடன் கொடுப்பது என இரண்டிற்கும் உள்ள வித்யாசத்தை புரிந்து கொள்பவன் உண்மையை உணர்ந்து கொள்கின்றான்,

உனக்கு வலது கையில் இதை செய்ய வேண்டும், இடது கை பீச்சாங் கை அதில் எதையும் செய்யகூடாது  என சொல்லி கொடுத்தது சமுதாயம் தானே அங்கு நீ உணர்ந்தாயா ?

எந்த கையில் எதை செய்தால் என்ன தவறு இருக்கிறது? என்ன அதை வாங்கி கொண்டு பயன் பெறுபவனுடைய  குடி மூழ்கி போகுமா? வாங்கி கொண்டவன் வாழ்க்கையில்  பெரும் நஷ்டம் பெற்று விடுவானா?- இந்த போலி பண்பு பணிவு இதெல்லாம் உன் மனதில் நீ உருவாக்கி கொண்டவை தானே, அதர்க்கு முன்னே சமுதாயம் உனக்கு சொல்லி கொடுத்ததை உணராமல் மொட்டையாக செய்யும் சடங்கு என எப்பொழுது உணர போகின்றாய்? 

கையே இல்லாதவன் காலில் எல்லா வேலைகளையும் செய்வதை பார்த்து இயல்பாக பரிதாபபட்டு ஏற்றுக்கொள்ளும் இயல்பும் உன்னிடம் உள்ளது தானே!

இந்த மாறி உன்னை சுற்றி உள்ள போலி தனமான ஏராளமான  சடங்குகளை பிடித்து   தொங்கிக் கொண்டிருப்பது, உணராத தத்துவங்கள், பொருந்தாத கருத்துக்கள் சொல்வதை கேட்பதும்,

நீ நீயாக வாழ  உண்மை  பாதையை உணர உனக்கு நீயே தடையாக மாறி விடுகின்றாய்,

உன்னை சுற்றி இருப்பவர்கள் கருத்துக்கு, அவர்கள் அபிப்ராயத்துக்கு தீனியாகி விட்டு உன்னை இழக்காமல் , அதில் ஆழமான உண்மை இருந்தால் பொருத்தமாக இருந்தால் ஆய்வு செய்து எடுத்துக்கொள் இல்லையெல் அதை கண்டு கொள்ளாமல் உன் பாதையில் நீ சென்று கொண்டு இரு !

ஆனால் பல நேரத்தில் உண்மை இது தான் இப்படி சென்றால் நாம் வந்த வாழ்க்கையின் அர்த்தம் உணர்ந்து கொள்வதுக்கு உண்டான பாதை இது தான் என்று தெரிந்தும் -அது முழுமையாக ஏற்றுக்கொள்ள சமுதாயம் என்ன சொல்லுமோ? என முட்டாள் தனமான உன் உண்மைக்கு பொருத்தமில்லாத ஒன்றை concrete உன் உணர்வுகளை  பிடிப்புடன் கட்டி வைத்து கொள்வது மிக அடி முட்டாள் தனமான ஒன்று என்று ஒருநாள் புரிந்து கொள்வாய்- அதை இயற்கை உனக்கு உணர்த்தும்!

ஒவ்வொரு விஷயத்திலும் ஆழமான உண்மை என்ன?, ஒவ்வொரு அசைவிலும் ஆழமான உண்மை என்ன ?என உனக்கு உள்ளே ஆழமான ஆய்வுடன் கவனித்து கொண்டே செல்,

அது  உண்மையின் பாதையை, நபர்களை, சூழ்நிலைகளை காண்பித்து கொண்டே இருக்கும்,

யாருக்காகவும் அவர்களின் முட்டாள் தனமான அறிவுரைகளையும் கோட்பாடுகளை கொண்டு அடிமை படுத்தும் தன்மைகளுக்கு இடம் கொடுத்து  உன்னை நீ இழக்காமல்,

நீ நீயாக உண்மையை உணர்ந்து சந்தோஷமாக வாழு!

வாழ்க்கை உனக்கே உனக்காக

பெண்ணைப் பெற்றவர்கள் அவசியம் படிங்க.

ஒரு தந்தை மகளின் உரையாடல் -
பெண்ணைப் பெற்றவர்கள் அவசியம் படிங்க.
--------------------------------------------------
அவர் சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார் “குளிர் காலம் பாருங்க, இருட்டா இருக்குன்னு பொண்ணோட ஸ்கூல் பஸ் வர்ற இடம் வரைக்கும் நான் காலேல துணைக்குப் போறேன். அப்போ நாங்க தனியா எங்களுக்குள்ள பேசிக்குவோம்.

அவ , ஒரு வாரம் முன்னாடி இப்படி ஒரு காலை நடையில் , “அப்பா , ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?” அப்படின்னாள்...

“மாட்டேன், தாராளமாச் சொல்லு”

”அந்த 304-ல இருக்கானே, ராகுல் ? அவன் என்னப் பாத்து சிரிக்கறான்”

“சரி” என்றேன் கொஞ்சம் எச்சரிக்கையாக.

அவனுக்கு இவளை விட ஒரு வயசு கூட இருக்கும். 12ம் வகுப்பு.

”மொதல்ல அந்த பையங்கிட்ட ஒழுங்காத்தான்ப்பா பேசிட்டிருந்தேன். நாலுநாள் முன்னாடி, திடீர்னு அவன் ‘நீ எனக்கு ஸ்பெஷல் ப்ரெண்டு’ன்னான்.”

“நீ என்ன சொன்னே?”

“ம்ம். .. நானும்..  Shut Up-னு முதல்ல சொல்லிட்டேன். ஆனா, அவனைப் பாக்கறப்போ என்னமோ ஒரு மாதிரி படபடன்னு வருதுப்பா. “

நான் மவுனமாக இருந்தேன்.

“இது தப்பாப்பா? எனக்கு ரொம்ப பயம்ம்மா இருக்கு. நான் தப்பு பண்றேனோ?”

நான் இன்னும் அமைதியாக நடந்தேன்.

“அப்பா” என்றாள். பெண் குரல் உடைந்து, ரோடு என்றும் பார்க்காமல் திரும்பி, என் கைகளைப் பிடித்துக்கொண்டு “சாரிப்பா, நான் தப்பா ஏதேனும் சொல்லிட்டேனோ? சாரி..  சாரி” என்று அழுதாள்.

“இல்லேம்மா., நினைச்சுப் பாத்தேன். நீ ஒன்ணாங் கிளாஸ்ல இருக்கறச்சே, ஸ்கூல்ல க்ளாஸ்லயே உச்சா போயிட்டே. ஸ்கர்ட் எல்லாம் நனைஞ்சு .. It was a mess you know?.
அந்த வயசுக் குழந்தைக்கு இயற்கை உபாதையை அடக்கத் தெரியாது. இப்ப நீ எவ்வளவு பெரிய , பொறுப்பான பெண்ணாயிட்டன்னு நினைக்கறச்சேயே, பெருமையா இருக்கு”

“அப்பா?” என்றாள் அவள் குழம்பிப்போய். இதுக்கும், அவள் சொன்னதுக்கும் என்ன தொடர்பு?ன்னு நினைச்சிருக்கலாம்.
“இப்போ கிளாஸ்ல இருக்கறச்சே பாத்ரூம் வந்ததுன்னு வைச்சுக்கோ.
அது இயற்கைன்னு க்ளாஸ்லேயே போயிட முடியுமா? “

“சீ. ச்சீய்” என்றாள் அவள்.
வெட்கமாக, என் கையைக் கிள்ளினாள்.
“கிளாஸ் முடியற வரை அடக்கி வைச்சிருந்து, இண்டெர்வெல்ல ஓடிப்போறேல்ல? அதுமாதிரிதான். இந்த பையன் பத்தின உணர்ச்சியெல்லாம், இயற்கையோட வேலை.

நாம படிக்கறச்சே இதைத் தவிர்த்திடணும். அப்புறம் காலம் வந்தப்போ அதும்பாட்டுக்கு நடக்கும்.”

அவள் கலங்கிய கண்களோடு ஒரு நிம்மதியுடன் என்னைப் பார்த்தாள்.

“So, இனிமே அந்தப் பையனைப் பார்த்தா பாத்ரூம்னு ஞாபகம் வரும் இல்லையா?”

“உவ்வே” என்றாள் போலியாக வாந்தி எடுப்பதாகக் காட்டி. பஸ் திருப்பத்தில் வந்திருந்தது.

எப்படி ஒரு நாசூக்கான விஷயத்தை,”நாயே, அதுக்குள்ள காதல் கேக்குதோ?” என்றெல்லாம் பொங்காமல், மிக அமைதியாக ஒரு பொறுப்புணர்வுடன் கையாண்டு இருக்கிறார்?

வளர்ப்பதில் நாமும் வளர்கிறோம்...

ஏகன் அநேகன்!!


ஏகன் அநேகன்!!
மாணிக்கவாசக சுவாமிகள் சிவபுராணத்தில் 'ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க' என்று கூறியிருக்கிறார். இதன் உட்கருத்தைப் பற்றி சிறிது சிந்திப்போம்.
ஒரு கை ஒசை எழுப்பாது என்பார்கள். வாழ்க்கையில் எந்த ஒரு செயல் நடைபெற வேண்டும் என்றாலும் அதற்கு இரண்டு விஷயங்கள் அடிப்படையாக வேண்டும். ஒன்று என்று இருந்தால் எந்த செயலுமே நடைபெறாது. உதாரணமாக நாம் சூரியனைப் பார்க்கிறோம். இது ஒரு செயல். இந்த செயல் நடைபெற வேண்டும் என்றால் முதலில் நமக்கு பார்பதற்கு கண்கள் வேண்டும். இரண்டாவது சூரியன் இருக்க வேண்டும். இவற்றில் எந்த ஒன்று இல்லாது போனாலும் அந்த செயல் நடைபெறாது.

இதேபோல மனதில் எழும் அனைத்து சலனங்களுக்கும், காமம், கோபம் போன்றவை தோன்றுவதற்கும் இந்த இரண்டு என்ற நிலையே காரணம். எப்போது தன் முனைப்பு (Ego) தாக்குதலுக்கு உள்ளாகிறதோ அப்போது நான் என்ற உணர்வு கிளர்ந்து எழுகிறது. அந்த நிலையில் தான் மற்றும் எதிரில் இருப்பவை இரு துருவங்களாக மாறி கோபம், பொறாமை போன்ற உணர்சிகள் வெளிப்படுகின்றன. ஆசை என்ற காமத்திற்கும் அடிப்படையான காரணம் நான் வேறு நான் விரும்பும் பொருள் வேறு என்று வேறுபடுத்தி பார்பதால்தான். இரண்டாகக் காண்பதால் அந்த பொருள் தனக்கு வேண்டும் என்ற ஆசை எழுகிறது. ஆசையை தொடர்ந்து கோபமும் கூடவே வருகிறது.
இந்த நிலை மாற வேண்டும் என்றால் சத்தியத்தை நாம் உணர வேண்டும். எது சத்தியம்? என்னில் இருக்கும் ஆத்மாவே இந்த உலகில் உள்ள சகல ஜீவராசிகளிடமும்நிறைந்துள்ளது. இந்த உலகத்தில் அனைத்துமே சிவ சொரூபம். நாம் காணும் உயிருள்ள, உயிரற்ற அனைத்துமே சிவனால் படைக்கப் பட்டவை. பஞ்ச பூதங்கள், சூரியன், ஆகாசம், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொறு அணுவும் சிவமே. சிவனே அனைத்திலும் நிரம்பி இருக்கிறார். காண்பது சர்வமும் சிவமயம் என்று எண்ணும் நிலையை நாம் அடைந்தால் பிறகு இரண்டு என்பது இல்லாது போகும். காண்பது அனைத்தும் ஒன்றே என்ற நிலை வரும் அப்போது மனதில் எந்த விகாரங்களும் எழும்ப முடியாது. மனம் நிம்மதியில் நாளும் நிலைக்கும்.

மாணிக்கவாசக சுவாமிகள் இதையே குறிப்பிடுகிறார். ஏகம் என்பது ஒன்று. அனேகம் என்பது பல. மூல சக்தியான சிவம் அனேக வடிவமாகி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனடி வாழ்க என்று பாடியிருக்கிறார்.

🙏�🙏�🙏�🌺🌺🌺💐

ஆன்மீக வியாதியின் அறிகுறிகள்

ஆன்மீக வியாதியின் அறிகுறிகள்
1. சுத்தமே இறை வழிபாடு என்று தோன்றும்.
2. செயல்கள் செய்வதைவிட நடக்கட்டும் என்று விட்டுவிடத் தோன்றும்.
3. அடிக்கடி சிரிப்பு வரும்.
4. இயற்கையோடும் சுற்றி இருப்பவர்களோடும் இணைப்புணர்வு     தோன்றும்.
5. அடுத்தவர்களைப் பாரட்டுதல் அதிகம் நடக்கும்.
6. இறந்த கால அனுபவங்களின் பயமுறுத்தல்களிலிருந்து செயல்படாமல்,               இயல்பாகவும் நடப்பதை ஏற்றும் செயல்படத் தோன்றும்.
7. இந்தக் கணத்தை அனுபவிக்கும் ஆற்றல் அதிகமாகும்.
8. கவலைப்படும் சக்தி குறைந்துபோகும்.
9. தகராறு செய்யும் சக்தி குறைந்துபோகும்.
10. மற்றவர்களை எடைபோடுவது வீண்வேலையாகத் தோன்றும்.
11. தன்னை எடைபோட்டுக் கொண்டேயிருப்பதிலும் சலிப்பு தோன்றும்.
12. மற்றவர் செயல்களை வியாக்கியானம் செய்வதில் ஆர்வம் குறையும்.
13. இருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் அழிய ஆரம்பிக்கும். புதிய   நம்பிக்கை              கொள்ளவும் முடியாது.
14. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு தோன்ற ஆரம்பிக்கும்.

குருதரிசனம்

குருதரிசனம்
கேள்வி பதில்
1. குரு எல்லாம் குருவா ?
எல்லா குருவும் குரு அல்ல
குருமுன் உன் மனம் நின்றாலே அவர் குருவாவர்
குருவிடம் உன் மனம் பேச வேண்டும்
குருவிடம் பணம் பேசக் கூடாது
2. குருவை தேடுபவர் யார்?
குருவைத் தேடுபவர் இறைவனைத் தேடுகிறான்.
குருவைத் தேடுபவன் தன்னைத் தானே அறிகிறான்.
3. குருவின் தகுதியை சோதிப்பவன் யார்?
குருவின் தகுதியை சோதிப்பவன் துடுப்பு இல்லா படகோட்டி.
6. குருவைக் கண்டால் என்னவாக உருவாகிறான்?
குருவைக் கண்டவன் உருப்பெறத் தொடங்குகிறான்.
குருவை ஏற்பவன் குருவின் சீடனாகிறான்.
7. குரு முழுமையானவராக சாட்சி என்ன?
குருவை முழுமையானவராக அறிய, அவர் மெய் ஞானமே சாட்சி
8. குரு என்பவர் யாருக்காக?
குரு என்பவர் மக்களுக்காக வந்த இறைதுhதர்
9. குருவிடம் என்ன கிடைக்கும்?
குருவால் திருவருள் கிட்டும்.
10. குரு என்பவர் யார்?
குரு என்பவர் மெய் ஞானத் திறவுகோல்
11. குருத்துவம் என்றால் என்ன?
குருத்துவம் தனித்துவம் ஆனது.
12. குருகடாட்சம் யாரிடம் சேர்க்கும்?
இறைவனிடம் சேர்க்கும்.
13. நல்ல குருவை அறிவது எப்படி?
சுயநலம், ஆடம்பரம், பாரபட்சம் அற்ற எளிமை, ,இனிமை, தெய்வீகம்
அமைதி, சாந்தம் நற்பண்பின் வடிவுமானவர்.
14. குருவாக ஆவதற்கு வயது உண்டா?
தெய்வீக தெளிவு இருந்தால் போதும்.
15. குருவில் ஆண் பெண் உண்டா?
தெய்வீக வழியில் நhடவும்.- அறியாமை ருளை மறையச் செய்ய - யார்
வேண்டுமானாலும் இருக்கலாம்.
16. குரு தன்மை என்ன?
இறைத்தன்மை நிறைந்தவர்.
17. குருவால் தெய்வீகத்தை காட்ட முடியுமா?
முடியும் நீ தகுதி உடையவனாய் இருந்தால்.
18. குருவுக்கு தகுதி வேண்டுமா? - கடவுளை காட்ட
வேண்டும் உணர முடியாததை உணர்த்தும் போது உணர்ந்து கொள்ள
வேண்டும் நீ உணரவும் தகுதி உள்ளவனாக வேண்டும்.
19. குரு ஞானம் எப்படிப்பட்டது?
காலத்தில் உன்னை மீட்பது
காலம் கடந்தும் வாழ்வதும்
மறைந்த பின்னும் வாழவைக்க வாழ்வது
20. குரு ஞானத்தை வெல்ல முடியுமா?
குரு ஞானத்தில் நீ வெற்றியடைந்தால் உன் வெற்றி
குருவின் வெற்றியை பன்மடங்காக்கும்
21. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?
பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம்
நீ முன்னேறாமல் இருப்பாய்
22. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?
முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு
23. குரு சேவை எதற்கு?
குரு சேவை குருவுக்கு அல்ல அவருக்குள் இருக்கும் அருளுக்கும்
மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறை சேவை.
24. குரு ஆடையை வைத்து எடை போடலாமா?
குரு என்பவர் ஆடை அணிகலன்களில் இல்லை. பணிவும், பண்பும், சொல்லும்
செயலும் ஒன்றாக இருக்கும் தெய்வீகம். தெய் வீகத்திற்கு ஆடை அலங்காரம் தேவையில்லை.
25. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?
குரு என்பவர் பாவ விமோட்சகர்.
26. குரு உருவம் எப்படிப்பட்டது?
குரு என்பவர் மனித உருவில் உயர் நிலையை உடையவர். ஒரு இறைவனின்
போதகர் சாந்தமான தெய்வீகமே குருவின் உருவம்.
27. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?
இறைதேடல், இறைதாகம், இறைப்பசி, இருந்தால் நீ தேடுவாய்
28. குரு என்பவர் கடவுளா?
உன்னுள் கடவுள் ஒழிந்து இருக்கிறார்
குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார்
29. ஒழிந்து இருப்பதின் அர்த்தம் என்ன?
எல்லாம் கடந்தவர் கடவுள்.கடவுளை அறிந்தால் குருவைத் தேடமாட்டாய்.
உன்னுள் ஒழிந்தவனை தேடுவாய் நீ ஒளிர.
30. குரு என்பவர் எதற்கு?
குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை
ஏற்படுத்துவதற்கு.மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார் .
31. குரு கடவுளை அறியச் செய்வாரா?
குரு கடவுளை உன்னுள் தெரியச் செய்வார்.
32. குருவின் மகத்துவம் என்ன?
தான் அறிந்ததை பிறர் அறியச் செய்வது
33. குருவை சோதிக்கலாமா?
அது நெருப்பாக இருந்தால் உன்னைச் சுடும்.
34. குருவை எவ்வாறு அறிவாய்?
மெய்யை மெய் அறியும்
34. குரு கடாட்சம் பெற என்ன வேண்டும்?
குரு கடாட்சம் பெற நற்பண்பு தெய்வபக்தியும் வேண்டும்.
35. குரு பக்தி எப்படிப்பட்டது?
குரு பக்தி குழந்தை தாய்மீது வைக்கும் அன்பு போன்றது.
தாய்மை தெய்வத்தின்(பிறப்பிடம்)
36. குருவிடம் போக மனப்போராட்டம் இருக்கலாமா?
முதலில் குருவிடம் சரணடைய மனப்போராட்டம் மாண்டுபோகும்.
37. தெய்வீக குருவை எவ்வாறு அறிவாய்?
அவரைக் காண மனம் துடிக்கும்
அவரை ஒவ்வொரு கனமும் காண மனம் ஏங்கும்
ஒரு நாள் ஒரு பொழுதேனும் அவரை நினைக்கும்
அவர் முன் அமர மனம் ஏங்கும்
அவரைப் பிரியாது இருக்க மனம் மறுக்கும்
அவர் முன் மனம் அடங்கும்
அவர் சொல்வதை கேட்டு ரசித்து நல்வழியில் நடக்கும்.
38. குருவாக பணம் வேண்டுமா?
குருவாக நல்ல மனம் மட்டுமல்ல இறைவனின் உணர்நிலையுடன் உள்ளவரே குருவாவர்.
39. குருவைப் பார்ப்பாயா? குருவை சுற்றியுள்ளவரை பார்பாயா?
உன் வியாதிக்கு மருத்துவரையே அறிய வேண்டும்.
சுற்றியுள்ளவர்களிடம் நற்பண்புகளை பாற்க வேண்டும். குரு
உன்னை அறிந்துக்கொள்வார்.
40. குருவுக்கு ஜாதி உண்டா?
சுவாசம் ஒன்றே.
41. குருவிடம் ஜாதி பார்க்கலாமா?
இறைவனிடம் ஜாதி பார்க்கலாமா
42. குருவுக்கு தனித்தனி தெய்வம் உண்டா?
குரு தனித்துதான் இருப்பார்கள். குருவுக்கு தனி தெய்வம் இருக்கலாம். குரு
காட்டும் தெய்வம் ஒன்றே.
43. குருவிடம் பிற மதத்தவர் போகலாமா?
குரு என்பவர் மதம் சார்ந்தவர் அல்ல
எல்லாம் கடந்தால் குருவாக முடியும்
எல்லாம் கடந்தால் தான் குருவாக பிரகாசிக்க முடியும்.
44. குருவால் உலகிற்கு என்ன பயன்?
அன்பான உலகம், பகையில்லா குடும்பம், தெய்வீகமான மனம்,
அமைதி எங்கும் நிலவும்.
45. குரு சீடனால் உலகிற்கு பயன் என்ன?
குருவால் நற்சீடனும் சீடனால் குருவும் உருவாகிறார்கள்.
இவர்களால் மட்டுமே இறைபுகழ் ஆன்மீகம் பரவுகிறது.
46. குருவை யார் தேர்வு செய்கிறார்கள்?
குருவை கடவுள் நிர்ணயம் செய்கிறார்
47. குரு சிஷ்ய துரோகம் பாவமா?
தெய்வ நிந்தனைக்கு உரியது. பல இழிபிறப்பைத் தரும்.
48. குருவாக ஏற்க மறைந்தவர்களை தேர்வு செய்யலாமா?
மறைந்தவர் என்றாலும் உன் மனம் மானசீகமாக ஏற்க வேண்டும்.
49. குருவாக முதல் தகுதி என்ன?
எப்போதும் இறை உணர்நிலையில் சமாதி நிலை அடைபவரே.
50. குரு பட்டம் யார் தருவார்?
இறை பக்தர்கள் மூலம் இறைவன் குருபட்டம் தருவார்.
51. என் குரு நீயே என்றால் நம்பலாமா?
குருவால் பயனடைந்தால் மட்டுமே குரு என்பான்
ஒருவனால் வஞ்சபுகழ்ச்சிக்கு கூட குருவை தன்னைவிட உயர்த்த முடியாது.
இது இறைவன் தீர்ப்பு.
52. குரு கிடைக்காதவன் யார்?
வழி இருந்தும் குருடே. அவன் மகாபாவி
53. குரு இல்லாது இறைவனில் கலந்தவன் யார்?
உலகம் உடல் எல்லாம் மறந்து தெய்வத்தையே நினைப்பவன்.
இவனே இறைவன் விரும்பிய மனிதன்
54. நம்முடைய பாதி வயதில் குருவிடம் செல்ல சந்தர்ப்பம் அமைவது ஏன்?
கர்மபலன்இ செயல்பயன் கடவுளையும் குருவையும் நிர்ணயமாகும்.
55. குருவே இல்லாது ஆன்மீகத்தில் ஜெயிக்க முடியுமா?
பிறப்பிலேயே ஜென்மபலன், கர்மபலன், யோகபலன், ஆன்மீகப்பலன்
கூடியவனாக இருக்க வேண்டும்.
56. குருவிடம் பயின்றவன் யோகி ஆக முடியுமா?
முதலில் சன்னியாசியாகி பின் யோகியாகமுடியும்
57. குரு சன்யாசம் தரலாமா?
குருவின் முதல் கடமையே சன்னியாசியை உருவாக்குவதே.
58. குருப் பெரியவரா? சன்னியாசி பெரியவரா?
குருவே பெரியவர். குருவை மிஞ்சிய சிஷ்யனும் உண்டு.
59. குரு எவ்வாறு வெளிப்படுகிறார்?
சிஷ்யர்களை, சன்னியாசிகளை, சாதுக்களை உருவாக்கும் போது ஒரு
குரு வெளிப்படுகிறார். சன்னியாசத்தில் தெய்வம் nவளிப்படும்.
தெய்வீகம் குருவில் வெளிப்படும்.
60. குருவுக்கு நிறம் தேவையா?
குருவுக்கு மனம் அதிலும் தெய்வீக குணம் மட்டுமே வேண்டும்
61. குருவுக்குள் அடங்கியது எது?
பிரபஞ்சமே அண்டம் அண்டமே ஆண்டவன். ஆண்டவனையே
உள் அடக்கியவன் குரு.
62. குரு இறையை அடக்கி வாழ்வாரா?
குரு முதலில் தன்னை அடக்கி வாழ்வார்
63. இறைவனை அடைவதற்கு ஞானம் தேவையா?
இறைவனை அடைவதற்கு தேடல்கள் மடடுமே,ஞானம் தேவையில்லை.
64. குருவிடம் விஞ்ஞானம் செல்லுமா?
குருவிடம் விஞ்ஞானம் செல்லாது. ஏனெனில் விஞ்ஞானம் என்பது
மாயை குருவின் தெய்வீகம் என்பது உண்மையின் உண்மை.
65. குரு நேசம்?
சிவ நேசம்.
66. குருவின் பதி?
சிவபதியே ஆவாள்.
67. குருவால் முக்தி தர முடியுமா?
குருவால் பக்தியையும் முக்தியையும் காட்ட முடியும்.
68. ஞான குரு என்றால் என்ன?
தியானத்தில் ஞானம் கிடைக்கும்.ஞானத்தில் தெளிவு கிடைக்கும.
குருவே ஞானம்.
69. குரு எதையாவது தேடுவாரா?
தேடுவார் நல்ல சிஷ்யனை.
70. குரு சிஷ்யனை ஏன் தேட வேண்டும்?
இறை அமுதைப் பருக ஆள் வேண்டாமா
71. நான் குருவாக முடியுமா?
முடியும் 'நான்' என்பதை அறிந்து ;நான்' என்பதை மறந்தால்
72. குருவுக்கு ஞானம் எங்கிருந்து கிடைக்கிறது?
இறைவனிடம் இருந்தே கிடைக்கிறது
உலகின் தேவை அனைத்தும் இறைவனிடமிருந்தே பெறப்படுகிறது.
73. குருவுக்கு 'நான்' என்பது இருந்தால் என்ன?
நான் என்பதற்கு இரண்டு நிலைகள் உண்டு.
நான் - அகங்காரம்
நான் - தெய்வீகம்
அகங்காரம் மனித இயல்பு
தெய்வீகம் தெய்வீக இயல்பு
இதனை ஆத்மபலன் மிக்கவரே அறிய முடியும்.
74. குரு ஜடநிலையா?
எல்லாம் மறந்தவர்கள். அதாவது துறந்தவர்கள் எல்லாம்
இல்லாது இருந்தாலும் ஒன்றானவனிடம் ஒன்றாதல் ஆகும்.
75. குரு சம்மந்தம் நமக்கு வேண்டுமா?
உன் மனம் ஏற்றவhறே சம்மதம்.
76. குருவிடம் குருட்டு நம்பிக்கை வைக்கலாமா?
உண்மை குருவிடம் வைக்கும் நம்பிக்கை தெய்வத்தையே போய் சேரும்.
77. குரு உன்னதம் எவ்வாறு அறிவது?
தேன் சொரியும் மலர் - மலர் தேடும் வண்டு
குருவே மலர் - உன்னதம் தேன்
78. குருவைத் தேடி கூட்டம் செல்வது ஏன்?
நற்பொருள் ஞானம் - மெய் தன்னால் பரவும்.
79. குருவுக்குள் கோயில் கொள்வது எது?
இறைவன்
80. குருவானவர் பேதம் பார்ப்பாரா?
இறைவனிடம் பேதம் கிடயாது.
81. குரு பாவத்தை போக்குவாரா?
குரு பாவத்தை அறிந்து தெளியச் செய்வார். பாவத்தை அனுபவித்து
கழிக்கச் செய்வார். பாவம் கழிக்காது ஆண்டவனிடம் போக முடியாது.
82. குருவுக்கு சிஷ்யன் தட்சணையாக பணம் தர வேண்டுமா?
குருவுக்கு மனதையும் உன்னையும் கொடு மனமுள் பணம் பறந்து போகும்.
83. குருவுக்கு சிஷ்யன் ஆற்றும் கடமை யாது?
நல்ல பண்புள்ள சிஷ்யனாக இருப்பதுவே குருவுக்கே பெருமை.
84. குருவிடம் சிஷ்ய பாரபட்சம் உண்டா?
குரு ஒரு ஜீவகாந்தம் (பரகாந்தம் - குரு) இரும்பாக இருந்தாலும்
துரும்பாக இருந்தாலும் ஈர்த்து கொள்ளும். இரும்பும் பின் காந்தமாகும்.
85. குரு சிஷ்யன் வளர்வதை எவ்வாறு அறிவார்?
முளை நெல்லின் மூக்கை அறியலாம்
86. குரு சிஷ்யனை சன்னியாசம் பெற வற்புறுத்தலாமா?
தெய்வீக நாட்டம் இருந்தால் குருவிடம் சரண் புகுவான்.
இறைவன் அவனுள் புகுந்து கொள்வார்.
87. குரு சிஷ்யனை அறிய முடியுமா?
தாய் அறியா சூழ் உண்டோ, தெய்வம் அறியாத நிலை உண்டா
88. குருவுக்கு சிஷ்யன் பிரியமாகுவது ஏன்?
மாறாத தெய்வீக பணிவு, பணிவுடன் மதிப்பும் மரியாதையும்
89. குருவிடம் சிஷ்யன் முழுமையான சரணடையக் காரணம்?
குருவுக்குள் இருக்கும் கடவுள் என்னும் கருணையாளன்.
90. குருவுக்கு முன் தாயை ஏன் வைத்தார்கள்?
தயாபரன் தாயுமாகிறான்.
91. குருவின் முதல் குரு யார்?
முதல் குரு உன் தாயே.
92. குருவுக்கு கல்வி தேவையா?
தெய்வத்தை அறிய கல்வி தேவையில்லை
93. குரு தந்தையாக முடியுமா?
எல்லாம் ஆகியவன் எல்லாம் ஆக இருப்பதால்
94. குரு கற்றவராக இருக்க வேண்டுமா?
குருவின் தெய்வீகத்தை படிக்கவே முடியாது.
கல்வி ஒரு உபகரணமே.
95. குரு வேதம் கல்லாதவராக இருந்தால் என்ன?
ஒருகினைந்த மனம் மட்டுமேபோதும். பக்தன் பயபக்தியுடன்
இறைவனை மூச்சாக மூச்சில் இருந்தாலே போதும்.
96. குரு வேதம் ஓத வேண்டுமா?
மானசீக பூஜையுடன் மானசீகமாக இறைவனாகவே இருப்பார்.
97. குருவிடம் சென்றால் நீ சித்தனாகலாமா?
குருவின் சிவநெறியை கடைபிடித்தால் சித்தனாகலாம்.
98. குருப்பயிற்சியில் சாதனை முக்கியமா?
பயிற்சியில் தபம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, வைராக்கியம் அவசியம்.
99. குரு ஜாதி பார்க்கலாமா?
சிவமாகியவர்.
100. குரு ஜாதி பார்த்து அருள் புரிவாரா?
இறைவன் சாதி பார்த்தா அருள் புரித்தான்.
101. குருவுக்கு வேஷம் உண்டா?
குரு அதுவே தெய்வம். வேஷம் அல்ல நேசம்
102. குரு சோதனை செய்வாரா?
சோதனை செய்வார் இறைவன் செய்ய நினைத்தால்.
103. குருவை மறந்தால்?
தெய்வம் மறக்கும்
104. குருவிடமிருந்து விலகியவன்?
தெய்வத்திடமிருந்து விலகிடுவான்.
105. குருவை வஞ்சிப்பது?
தெய்வக் குற்றம்
106. குருவுக்கு பின்னால் புறம் பேசுவது?
மிகப் பெரிய பாவம்.அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கொல்லும்.
தெய்வம் தண்டனை தராது- உன்னைக் கொல்லும்.
107. குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது?
நற்குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது தாழ்ந்த மனமுடையவனால்
மட்டுமே முடியும். அது அவன் அழிவிற்கு வழி வகுக்கும்.
108. குருவிடம் மந்திரம் திருடலாமா?
குருவிடம் மந்திரத்தை தந்திரமாகக் கூட வாங்க கூடாது. தந்திர
திருட்டே ஆனாலும் அதற்கேற்ற பலனே இறை தருவார்.
109. குருவின் வெளிப்பாடு யாது?
குருவின் வெளிப்பாடு மெய் ஞானம்.