Saturday, 2 July 2016

வழிபாடு

தெய்வங்களை உபாசனம் செய்வது எப்படி ?
தெய்வங்கள் பல இருந்தாலும் மூன்று தெய்வங்கள் சிறப்பு வாய்ந்தது அனைவருக்கும். அது என்ன மூன்று தெய்வங்கள் ?
1. குல தெய்வம்.
2. இஷ்ட தெய்வம்.
3. உபாசன தெய்வம்.
1. குல தெய்வம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
குல தெய்வம் என்பது நம்முடைய முன்னோர் தான். நமக்கு முன்னாடி வாழ்ந்த நபர். நமது முன்னோரை வணங்குவது தவறு இல்லையே.
உதரணத்திற்கு முனீஸ்வரர் ஒருவருக்கு குல தெய்வமாக வைத்துக்கொள்வோம். முனீஸ்வரர் தான் அவரின் முன்னோர். முனீஸ்வரரை குல தெய்வமாக பெற்றவர்கள் முனீஸ்வரர் வழி வந்தாவர்கள். முனீஸ்வரர் இந்த உலகத்தில் வாழ்ந்த நபர்.முனீஸ்வரர் யாரென்று ஆராய்ந்து பார்த்தல் அந்த நபருக்கு தாதாவுக்கு, தாதாவுக்கு தாதாவுக்கு..... அப்படியே போய் முனீஸ்வரர் வரை போய் நிற்கும். அதாவது யாரிடம் இருந்து வந்தார்களோ அவர் தான் அந்த நபருக்கு குல தெய்வம்.
2. இஷ்ட தெய்வம் என்பது நாமாக இஷ்ட படுவது. அது யாராகவும் இருக்கலாம். அதில் விதிவிலக்கு இல்லை. அது தெய்வமாகவும் இருக்கலாம், சித்தர்களையும் இஷ்ட பட்டு வழி படலாம். அது முடிவில் பரமாத்மாவே.
இஷ்ட தெய்வம் என்றால் பிடித்தமான தெய்வம். பிடித்தமான தெய்வம் என்றால் உங்களுடைய ஒவ்வொரு செயல்கள் தொடங்கும்போது அவை நல்ல படியாக முடிந்து உங்களுக்கு நன்மையை தரவேண்டும் என்று வேண்டும்போது அவை உங்களுக்கு மனமுவந்து நன்மையை செய்யும்.
சிலர் பார்த்தீர்கள் என்றால் திருப்பதி ஏழுமலையானை கும்பிடாமல் எந்த ஒரு நல்ல காரியமும் தொடங்க மாட்டார்கள். அவர்களுக்கு அந்த காரியம் நடப்பதற்கு ஏழுமலையான் உதவி செய்வார் என்ற நம்பிக்கை. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கு திருப்பதி வெங்கடாசலபதிதான் இஷ்ட தெய்வமாக இருப்பார்.
அதுபோன்று ஒரு சிலருக்கு பழனி முருகன் இஷ்ட தெய்வமாக இருப்பார். எந்த கோயிலுக்கு சென்று அவர்கள் சாமி கும்பிட்டாலும் பழனி முருகன் கோயிலில் சாமி கும்பிட்ட ஒரு திருப்தி அவர்களுக்கு இருக்காது. காரணம் பழனி முருகனை கும்பிட்டு தொடங்கும் நல்ல காரியங்கள் அவர்களுக்கு நல்ல படியாக நடக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
சிலருக்கு பார்த்தீர்கள் என்றால் பல கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவார்கள். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட கோயிலுக்கு சென்று சாமி கும்பிடும்போது கிடைக்கும் நிம்மதி வேறு கோயில்களில் கும்பிடும் போது கிடைக்காது.
சரி, ஒருவருடைய இஷ்ட தெய்வம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
ஒருவர் பிறந்த போது அமைந்த ஒரு சில கிரக நிலைகளை வைத்து, அவைகள் அமைந்த பாவம், பாவத்தின் தன்மை போன்றவற்றை வைத்து அவருடைய இஷ்ட தெய்வம் யார் என்பதை கண்டுபிடிக்கலாம்.
இஷ்ட தெய்வம் யார் என்பதை தெரிந்து கொண்டால் நம்முடைய நியாயமான இஷ்டங்கள் நமக்கு சாதகமாக நன்மை செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரே சாந்தத்தில் அழுந்திப் போக வேண்டுமென்ற மனோபாவம் உள்ளவனுக்கு தட்ஷிணாமூர்த்தி இருக்கின்றார். ஆனந்தமாக ஆடிப்பாடி பக்தி செலுத்த விரும்புகிறவனுக்கு கிருஷ்ண பரமாத்மா இருக்கின்றார். விருப்பம் இருந்தாலும் விருப்பம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகாசக்தியிடம் பக்தி செய்வது என்று இல்லாமல் நம் மனசுக்கு எப்படி விருப்பமோ அதற்கு அனுசரனையாகவே அந்த மகாசக்தியை மூர்த்தியில் பாவித்து பக்தி செய்வதற்கு " இஷ்ட தேவதை " வழிபாடு வழிவகுக்கிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.