Thursday, 14 July 2016

ஆணவ மலத்தின் வெளிப்படு.

திருச்சிற்றம்பலம்.

ஆணவ மலத்தின் வெளிப்படு.

மோகம்
மதம்
அராகம்
கவலை
தாபம்
வாட்டம்
விசித்திரம்

என்று ஏழு வடிவங்களில் ஆணவமலமானது ஒரு மனிதனிடத்தில் இருந்து வளிப்படுகிறது.

அவை எவ்வாறு என சிறு விளக்கம்.

மோகம்

ஆசையை உண்டு செய்வது. உலகவாழ்வில் உள்ளவைகள் மீது ஆசை உண்டாக செய்யும்.
என் வீடு என் மனைவி என் குழந்தை என் வாகனம் என் ஆடை என் அணிகலன் எனது தொழில் என பலவிதமாய் தன்னை சுற்றியுள்ள எல்லாற்றையும் என்னுடையது என்று எண்ணச்செய்யும். அவைகளிலே முற்றிலும் எண்ணத்தை செயல்படச்செய்யும்.

மதம்

இவ்வாறு எல்லாவற்றையும் எனது என்று எண்ணி இவைகளை சம்பாதித்துவிட்டால் அடுத்தபடியாக  அவன் நினைக்கிறான் இவுனைகள் அனைத்திற்கும் நான் அதிபதி என்ற எண்ணம் ஏற்ப்படுகிறது... இதை மதம் என்று குறிப்பிடுகிறார்கள்.

அராகம்

அடுத்த படியாக....இவ்வளவு சொத்துக்கள் சேர்த்தாலும் இவைகள் போதாது இன்னும் வேண்டும் மேலும் மேலும் சொத்துக்களை சேர்த்த வேண்டும் என எண்ணுகிறான். இதை அராகம் என குறிப்பிடுகிறார்கள்.

கவலை

இவ்வாறு சேர்த்தி வைத்த பொருள்களில் ஏதோ ஓன்றோ அல்லது மொத்தமாகவோ ஏதேனும் ஒரு காரணத்தால் இழக்க நேரிட்டால் உடனே அவனுக்கு கவலை உண்டாகி விடுகிறது.

தாபம்

கவலை அடைந்த அந்த மனம் ஓயாமல் அதையே எண்ணி எண்ணி விதும்புகிறது. இதற்கு தாபம் என்று பெயர்.

வாட்டம்

அப்படியான தாபத்தால் மனம் சோர்ந்து உடல் வாட்டம் மன வாட்டம் உண்டாகிறது.

விசித்திரம்

இவ்வளவு நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் துன்பங்கள் அனுபவித்தாலும் இந்த உயிரானது உலக இயல்புகள் மீது மீண்டும் பற்று கொண்டு விசித்திரமாகவும் வெளிப்படுகிறது. மீண்டும் எல்லாம் என்னுடையது என்ற எண்ணம் அவனை சூழ்ந்து கொள்கிறது.

இந்த அனைத்து துன்பங்களுக்கும் மூலக்காரணம் மோகம் தான். இதை அறிந்து தெளிவடைந்து மோகத்தை விலக்க முயன்றோமே ஆனால் கவலைகள் நிகழாது. இதற்கு ஒரே வழி இறைவனின் பாதம் பணிதல் மட்டுமே.

அவன் ஒருவனால் தான் இந்த உலகப்பற்றை நம்மிடமிருந்து விலக்கி தூய்மை படுத்த இயலும்.

திருச்சிற்றம்பலம்.

🙏�🙏�🙏�🙏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.