எத்தனை வகை நமஸ்காரங்கள் உள்ளன?

நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து வகைப்படும். அவை, ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.
ஓரங்க நமஸ்காரம்:
🌞 வழிபடுபவர;, தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது.
மூன்று அங்க நமஸ்காரம்:
🌞 வழிபடுபவர;, தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம்.
பஞ்ச அங்க நமஸ்காரம்:
🌞 வழிபடுபவர;, தனது தலை, கைகள் மற்றும் முழங்கால்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகம்.
அஷ்டாங்க நமஸ்காரம்:
🌞 ஒருவர;, தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது.
சாஷ்டாங்க நமஸ்காரம்:
🌞 வழிபடுபவர; தமது தலை, கைகள், மார;பு மற்றும் முழங்கால்கள் முதலான அத்தனை அங்கங்களும் பு+மியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.
செயல் ஆவது யாதொன்றும் இல்லை
எல்லாம் உன் செயல்;
என்று இறைவனை சரணாகதி அடைவத நமஸ்காரத்தின் நோக்கமாகும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.