Tuesday, 12 July 2016

அன்பு

*🌺           அன்பு            🌺*

*பிரார்த்தனை என்பதை               நான் 'அன்பு ' என்று          சொல்கிறேன். பிரார்த்தனை என்னும் வார்த்தையை மறந்துவிடுங்கள்; அதற்குப்பதிலாக 'அன்பு ' நினைவில் இருக்கட்டும்.*

*முதலாவதாக ஏற்படும் அன்பு தன்னிடமே . தன்னிடமே அன்பாய் இருப்பது சுயநலம் அல்ல.*

*அன்பும் கருணையும் ஒன்றையே குறிக்கும் வார்த்தைகள் அல்ல . அன்பு கருணையை விட உயர்ந்தது

*அன்பின்பணியைச் செய்தபடி வாழுங்கள். அப்போது நீங்கள் கடவுளின் பணியைச் செய்பவராய் இருப்பீர்கள்.*

*அன்பு எந்த ரகசியத்தையும் வைத்திருக்கக் கூடாது.*

*அன்புக்காக தன்னிடமிருந்த மற்ற எல்லாவற்றையும் இழந்துவிட்டாலும் எதுவும் இழக்கப்பட்டதாகாது. ஆனால் அன்பை இழப்பதால் மற்ற எல்லாவற்றையும் காப்பாற்றிவிட்டாலும் எல்லாமே இழக்கப்பட்டதாகிவிடும் .*

*பாலுணர்வும் அன்பும் இருகோடுகளைப் போன்றவை. பாலுணர்வு உடலைச் சார்ந்தது. அன்பு ஆன்மாவைச் சார்ந்தது.*

*அன்புடன் தேர்ந்தெடுக்கும் போது அது நாள்பட மறையாது தங்கி இருக்கும். ஏனென்றால் அன்பு ஒன்றுதான் வாழ்வில் சாசுவதமானது, நிரந்தரமானது.*

*உண்மையானவராக இருங்கள் . உணர்வுப்பூர்வமாக வாழுங்கள். அதிகாரப்பூர்வமாக வாழுங்கள். செய்வது எதுவானாலும் அதை அன்புடன் செய்யுங்கள், இல்லா விட்டால் செய்யாதீர்கள்.*

*உங்கள் வாழ்வில் அன்பு இல்லை எனில் உங்கள் வாழ்வு கவிதை வளமற்றதாக இருக்கும்.*

*வெளியிலிருந்து அன்பை பற்றி தெரிந்து கொள்ள வழியில்லை.*

*அன்பில்லாமல் வாழ்வது மரணத்திற்குச் சமம்.*

*மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் பாலம் போன்றது அன்பு.*

*நினைவிருக்கட்டும்., அன்பு உங்கள் மெய்யிருப்பின் ஒரு நிலை . இது ஒரு உறவு அல்ல.*

*நிபந்தனை இன்றிதன்னையே கொடுப்பதுதான் அன்பு.*

*ஒரு துளியை அன்பின் கண்களால் பார்க்கும் பொழுது அது மாகடலாகிவிடுகிறது.*

*எவ்விடத்திலாவது அன்பு இல்லாமல் போய் விடுமானால் அதை நான் பாவம் என்பேன்*

*அன்பு எல்லோரிடமும் தன்னை பகிர்ந்து கொள்ள விழைகிறது.*

*நான் அன்பு மட்டுமே கடவுள் என்று தெதிந்து கொண்டிருக்கிறேன்.*

*அன்புதான் என் செய்தி. அதுவே உங்கள் செய்தியாயும் இருக்கட்டும்.*

*அன்பின் கரங்களில் பாறையின் இதயமும் உயிருடன் துடிக்க ஆரம்பித்துவிடும்.*

*மற்ற எல்லா ஒழுக்கங்களையும் , சமயக்கட்டளைகளையும்,பெயர்பெற்ற போதனைகளையும் மறந்து விடுங்கள் . அன்பு என்னும் தனிச்சொல்லை மட்டும் நினைவில் வைத்திருங்கள். அதில் எல்லாமே அடங்கும்.*        
           
                        *➖ஓஷோ*

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.