Friday, 22 July 2016

கவலை தீர்க"

மரணம் என்பது இயற்கை. தோன்றிய பொருள் யாவும் அழிந்தே ஆகவேண்டும் என்பது நியதி. காலங்கள் இரண்டுதான் உண்டு. அவை இறந்தகாலம் எதிர்காலம். நிகழ்காலம் என்றொன்று இல்லை. இப்படிப் போதித்தவர் புத்தர். அவரது வாழ்க்கையில் ஒரு சம்பவம். ஒரு ஊரில் ஒரு தாய். அவளுக்கும் கோமகன் போல் ஒரு பிள்ளை. அவன் இறந்து விட்டான். புத்தரிடம் ஓடோடிச் சென்று இறந்த தன் மகனை எழுப்பித் தரவேண்டும் என்று மன்றாடுகிறாள். உலகத்தில் இறப்பு என்பது இயற்கையானதுதான். எனவே அதற்கு வருந்துவது அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்தைப் போக்கி அத்தாயின் கவலையைப் போக்க நினைத்தார். அத்தாயை நோக்கி- 

தாயே நின் மனக் கவலை - ஒழிந்திடத்
தக்க மருந்து நான் அளிப்பேன்
சேயினை எழுப்பிடுவேன்- விளையாடித்
திரியவும் செய்திடுவேன்
நாவிய கடுகு வேண்டும்-அதுவுமோர்
நாவுரி தானும் வேண்டும்
சாவினை அறியாத - வீட்டினில்
தந்ததாய் யிருக்க வேண்டும். (ஆசியசோதி -9,35) 

அந்தத் தாய் சென்று வீடு வீடாக ஏறி இறங்கினார். சாவினை சந்திக்காத வீடு ஒன்று கூட அந்த ஊரில் இருக்கவில்லை. மீண்டும் புத்தரிடம் வந்தார். கடுகு கிடைக்கவில்லை என்றார். அப்போது புத்தர் சொன்னார் " தாயே! மரணம் இயற்கை. அதை யாரும் வெல்ல முடியாது. கவலை தீர்க" என்றார். 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.