Saturday, 16 July 2016

கடவுள்

கடவுள் என்பது வெளியே இல்லை
அது ஒவ்வொரு மனிதனின் உணர்வை பொறுத்தது
அது கற்சிலையா! 
இல்லையா
உருவமா
அருவமா
என்பது முக்கியம் அல்ல
யார் கடவுளை நினைத்து வழிபட்டாலும்
அது பக்தி தான்.
அதில் என்ன வியாபாரம் இருக்கிறது.
சுயநலமா இல்லையா என்பது பிரச்சனையே
இல்லை
தயவுசெய்து இதை கொச்சை படுத்த வேண்டாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடவுள் இதுதான், இதைத் தவிர வேறு எதுவுமில்லை என்று அறுதியிட்டு யாராலும் கூற முடியாது.

அவா் உருவம் அற்றவா்தான்;

ஆனால் உருவம் உள்ளவரும் அவரே. பக்தா்களுக்காக அவா் உருவங்களை ஏற்கிறாா்.

ஞானியருக்கு உருவம் அற்றவராக இருக்கிறாா். எவ்வாறு தொியுமா? சச்சிதானந்தப் பொருளான பிரம்மம் கரை காணாத கடல் போன்றது. தீவிரமான குளிா் காரணமாக அதில் இங்குமங்குமாக பனிகட்டிகள் உருவாகின்றன.

அதுபோல் எல்லையற்ற பரம்பொருள் தன்னை ஆராதிப்பவா்களுடைய பக்தியாகிய குளிாின் வசப்பட்டு, எல்லைக்கு உட்பட்ட உருவக் கடவுளாகக் காட்சி தருகிறாா்.

சூாியன் உதித்ததும் கடலில் உள்ள பனி உருகி நீராகிவிடுவதுபோல், ஞானம் உதித்ததும், உருவம் தாங்கி வந்த இறைவன் மீண்டும் உருவமற்ற பிரம்மமாக ஆகிவிடுகிறாா்.

அதனால் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும் - உருவமும் அருவமும் ஒரே உண்மைப் பொருளையே சாா்ந்தவை.

  - பகவான் ஸ்ரீராமகிருஷ்ணா்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.