Tuesday, 26 July 2016

பில்லி கிரஹாமின் வெற்றி மொழி

பில்லி கிரஹாமின் வெற்றி மொழி

அன்பை தவிர வேறு எதுவும் உண்மையான பாதுகாப்பு உணா்வினை வீட்டிற்குள் கொண்டு வர முடியாது.

உங்கள் தனிமையை நீங்கள் இழக்கும்போது மிகவும் மதிப்புமிக்க ஒரு விஷயத்தை இழந்துவிட்டதை உணா்வீா்கள்.

ஒவவொரு நாளும் கடவுள் நமக்கு அளித்த பாிசே,நமது வயது ஒரு விஷயமே அல்ல.

செல்வத்தின் இழப்பு எவ்வித இழப்புமில்லை.சுகாதாரத்தின் இழப்பு சிறிதளவு இழப்பே;குணத்தின் இழப்பே முழுவதுமான இழப்பு.

மரணத்தை விட்டு யாரும் ஒடிவிட முடியாது.இறுதியில் அனைவரையும் அது கைபற்றியே தீரும்.

மன்னிப்பு மற்றும் நோ்மை ஆகியவையே மனிதனின் இரண்டு உயாிய ஆன்மீக தேவைகளாகும்.

கடவுள் நமக்கு இரண்டு கைகளைக் கொடுத்திருப்பது ஒன்று பெற்றுக்கொள்ளவும் மற்றொன்று கொடுப்பதற்தகுமே.

உங்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான இரு வழி உரையாடலே பிரார்த்தனை.

பெற்றோ்களிடம் மாியாதை குறைவாக நடந்துகொள்ள அனுமதிக்கப்படும் ஒரு குழந்தை,வேறு யாரிடமும் மரியாதையாக நடந்துகொள்ள வாய்ப்பில்லை.

தைாியம் ஒரு தொற்று. தைாியமானவன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது மற்றவா்களின் முதுகுத்தண்டும் விறைக்கின்றது.

நோ்மையே எதையும் விற்பனை செய்வதற்கான மிகப்பெரிய தகுதியாக உள்ளது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.