🌹அடக்குமுறை 🌹
எப்படியெல்லாம் அடக்குமுறைகளை கையால்கிறோம் என்கிற நுணுக்கத்தை புரிந்து கொள்ளும் சிறு வழி இந்த பதிவு கொடுக்க வாய்ப்பு உள்ளது
ஒரு குட்டி கதை கொண்ட உதாரணம் மூலம் இதை பார்ப்போம்
ஒரு விவசாயி தன் மாடுகள்- ஆடுகள்- நாய் போன்ற ஜீவ ராசிகளை வளர்த்துகிறார், அதன் மேல் நல்ல உறவு வைத்துள்ளர், அதற்கு தேவையான அனைத்து உணவுகளையும் நேர நேரத்துக்கு மிக பக்குவமாக செய்கிறான்,
மொத்தத்தில் அதற்கு தேவையான சகல விஷயத்தையும் செய்கிறான்
ஆனால் அதன் கழுத்தில் ஒரு கயிற்றினால் கட்டி போடபட்டு உள்ளான்- அதன் காரணம் அது விட்டு விட்டு ஓடினால் தனது முதலீடு மற்றும் வருமானம் காணாமல் போய் விடும் என்ற அவ நம்பிக்கையில் - அது ஓடி ஆடி சுத்ந்திரமாக விளையாட கயிறு போட்டு கட்டி வைத்து ஒரு உயிரின் உணர்வுகளை உணராமல் இருப்பது என்னமோ பாவம் அந்த விவசாயிக்கு மனதை விரித்து பார்க்கும் பக்குவம் இல்லை
ஆனால் அந்த கயிற்றினால் கட்ட பட்டிருக்கும் அந்த ஆடு -மாடு- நாய் ஒவ்வொரு தடவையும் தன் இயல்பாக அந்த பக்கம் -இந்த பக்கம் நடக்கவும், துள்ளி ஆடவும் முயற்சி செய்யும் பொழுது- அந்த கயிற்றின் இறுக்கம் அந்த உயிருக்கு துன்பத்தை தருகிறது அந்த சமையத்தில் எல்லாம் அந்த உயிர் பார்த்து வளர்த்தும் விவசாயின் மேல் எரிச்சல் கோபம் படுகிறது - இது இயல்பான உயிரின் செயல் ,
இதை பொறுத்துக் கொள்ளும் சில உயிர்கள் அமைதியாக துன்பத்தை ஏற்றுக்கொண்டு மனதளவில் சுமக்கின்றது - இதை பொறுத்துக் கொள்ள முடியாத உயிர் விவசாயீனை எட்டி உதைக்ககின்றது - இந்த வலியை விவசாயீனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
பார்த்து பார்த்து வளர்த்தி இப்படி பண்ணிவிட்டதே என்று திரும்ப அதை அடித்து ஒரு உயிரின் உணர்வுகளின் சாப அழுத்தத்தை வாங்கி கொள்கிறான்
இந்த கதையில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது,
இந்த விவசாயி போல தான் ஒவ்வொரு விட்டீலும் தலைமை ஏற்று வழி நடத்தும் பெற்றோர்கள் தன் குழந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் பல விஷயங்களை தனக்கு நிறைவேறாத ஆசைகளை அதன் மேல்(இதில் முக்கிய பங்கு இன்றைய படிப்பு ) திணிக்கும் நிலையில் உள்ளனர்,
கணவன் தன் மனைவியினை - மனைவி தன் கணவனை - தனக்கு மட்டுமே சொந்தம் என்று இயல்பாக யாரிடமும் பேச கூட விடுவதில்லை - தன் இயல்பான விருப்பத்தை கூட செய்ய விடுவதில்லை - இதில் ஆன்மீகம் முதல் பல்வேறு விஷயங்கள் அடங்கும் ,
தொழில் கூடங்களில் முதலாளிகள் தன் தொழிலாளர்களை வழி நடத்துதல் என சொல்லிக் கொண்டே போகலாம்,
இந்த உறவுகளில் நான் எல்லாம் செய்கிறேன் என்று செய்வதை நினைத்து கொண்டு சந்தோஷம் அடைகிறது தனிப்பட்ட கணவன் - மனைவி - முதலாளி - என எதுவாக இருந்தாலும் சரி ,
ஆனால் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறது நாம் சுத்ந்திரமாக செயல் பட உறவுகள் என்ற தன்மையில் தனக்கு தக்கவாறு மட்டுமே நடக்க வேண்டும் தான் நினைத்த படி எல்லோரும் செயல் பட வேண்டும், தன்னை மீறி எதுவும் செய்து விட கூடாது என்றும் மிக பெரிய மன கயிறு போட்டு கட்டி வைத்து வழி நடத்துவது தெரிவதில்லை- இந்த பார்த்து பார்த்து வழி நடத்தும் - முன் நின்று அல்லது எந்த ஒரு தனிப்பட்ட உயிராக இருந்தாலும் சரி , அதற்கு தெரிவதில்லை தான் தன்னை சுற்றி உள்ள உறவுகளை பாசம் என்ற மனதின் பிடியில் கயிறு போட்டு கட்டி வைத்து தானும் துன்ப பட்டு சுற்றி உள்ள உறவுகளையும் துன்ப படுத்தி வாழ்வதும் புரிந்து கொள்ள முடிவதில்லை
இதை பொறுத்து கொள்ள முடியாத உயிர்கள் திருப்பி எகிருகின்றது அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை
காரணம் பாசம் என்னும் மன சுருக்கம் தான் - ஆனால் அன்பு என்ற மன விரிவு இருந்தால் சக உணர்வுகளை எப்பொழுதும் புரிந்து கொண்டு சுத்ந்திரமாக வழி நடத்தும்
அதற்கு தன்னை தன் உணர்வுகளை உணர்ந்து சுத்ந்திரமாக செயல் படும் பக்குவம் உள்ளே வளர வேண்டும்
பெரும்பாலன புது புது படைப்புகள் , புது புது வளர்ச்சிகள் , புது புது கண்டுபிடிப்புகள் , ஆட்டம் பாட்டம் , கொண்டாட்டங்கள் எல்லாமே அன்பு என்கிற சுதந்திரத்தின் மூலம் வளர்பவை என்பது நூற்றுக்கு நூறு மறுக்க முடியாத உண்மை - ஏனெனில் சுத்ந்திரத்தில் மனவிரிவு இயல்பாக வந்து விடுகிறது - அங்கு படைக்கும் திறன் அதிகரிக்கிறது - மனம் சுருங்க வழிகள் இல்லை ,
இப்பொழுது படிக்கும் நபர்களுக்கு கேள்வி வரும் சுத்ந்திரமாக விட்டால் தவறுகள் வரும் என்று, இந்த கேள்வியே ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் வருவது, இப்பொழுதும் அங்கு சுத்ந்திரம் கொடுக்கும் மன விரிவு வரவில்லை என்பது தான் இதன் பொருள் கொண்ட உண்மை
சந்தேகம் இல்லாத முழு சுதந்திரம் கொடுத்து பார்த்தால் தான் உண்மை புரியும் - தவறை செய்தாலும் மறைக்காமல் அந்த உயிர் சொல்லி விடும் - திரும்ப அதை செய்யாமல் விழிப்புணர்வு பெற்றுவிடும்,
ஆனால் கயிறு போட்டு கட்டி வைத்து பாசம் என்ற பிடிப்பில் அடக்கி வைத்தால் அது தான் எல்லா குற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது
உண்மையில் ஒவ்வொரு உயிரும் தனித்துவமானது , சுதந்திரமானது , எந்த உயிரும் பற்றுக்கு சொந்தம் இல்லை - அனால் அன்புக்கு ஒவ்வொரு உயிரும் இணைப்பு கொண்டுள்ளது
என் -என்னுடையது - எனக்கு என்ற அடையாளம் கொண்ட அடிப்படை மனதின் தன்மை கரைத்து விட்டு, உணர்வுகள் என்ற அன்பின் தன்மையில் சக உறவுகளை பார்க்கும் உள் தன்மை மாற்றம் வந்தால் தான் நிலையான சந்தோஷம் நிலைக்கும்,
அடக்குமுறை என்பதை இதன் மூலம் சற்று ஆழமான அடிப்படையை புரிந்து கொண்டு செயல் பட்டால் வாழ்வு கொண்டாட்டங்கள் நிறைந்தாக மட்டுமே இருக்கும்
தியானத்தன்மை தான் இதற்கு அடிப்படை கருவி
நன்றி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.