Saturday, 30 July 2016

ஞானம்

🌹ஞானம் 🌹

ஒரு குடத்தில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது , அந்த குடத்தில் எவ்வளவு லீட்டர் தண்ணீர் இருக்கிறது என்று கேட்டால் எளிமையாக அளந்து பார்த்து சொல்லி விட முடியும் அதற்கு ஒரு அளவு முறையை மனிதன் உருவாக்கி உள்ளான்

ஆனால் அதுவே அந்த குடத்தில்  எத்தனை  சொட்டு தண்ணீர்  உள்ளது என்று கேட்டால் அந்த கேள்வியை பெரிய சுமையாக கருதிக் கொள்கின்றது மனம்

அதுபோல தான் மனம் என்ற அடிப்படையில் உனக்கு  உள்ளே நிரப்பி வைத்த தண்ணீர் போல எண்ணங்கள் நிரம்பிய பாத்திரமாக இருக்கிறாய்

அந்த பாத்திரத்தில் உள்ள தண்ணீர் என்பது எண்ணம், இப்பொழுது ஒவ்வொரு சொட்டாக பொறுமையுடன் அளந்து வெளியே உற்று - நீ ஒவ்வொரு சொட்டுகளையும் கவனிக்கும் பொழுது அதன் தன்மை பொருந்தும் ஒன்றா - இல்லை  பொருந்தாத ஒன்றா என்பதை உணர்ந்து பார்க்க முடியும்

இந்த உணர்வில் சுமை போல உள்ள எண்ணங்கள் கரைந்த ஒரு மெல்லிய உணர்வுகளாக  உன்னால் உணர முடியும்

பின்பு உனது எண்ணங்கள் கரைந்த தன்மையில்  உனது பாத்திரம் வெறுமை ஆகும் நிலையை உன்னால்  உணர முடியும்.

அங்கே உனது ஞானம் இயல்பில் மலருவதை மிக உற்சாக மகிழ்ச்சியுடன் உணர முடியும்

எந்த சொல்லுக்கும் ,செயலுக்கும் மூலம் எண்ணங்கள்-
எண்ணங்களை உன்னால் ஒவ்வொரு சொட்டாக பிரித்து பார்க்கும் பக்குவம் வரும் இடத்தில் எண்ணம் எழும் மூலத்தை அறிய முடியும் பின்பு அது ஒரு எண்ணமாகவே தெரிவதில்லை -அது ஒரு அலைத்தன்மை வடிவில் உணர முடியும்

அந்த அலையோடு அலையாக கரையும் தருணத்தில் அங்கு வெற்று மனமாக இருக்கிறாய்

அங்கே அது பிரபஞ்சத்துடன் இணைவதையும் அதை உள் வாங்கும் தன்மையை உணர முடியும்

இந்த நிலை உனது இயல்பு வாழ்க்கையில் மலரும் எனில் அங்கு நீ எந்த ஒன்றிலும் எதனுடனும் ஒட்டி கொள்ள மாட்டாய், தேவை அறிந்த செயல்படும்  விழிப்பில் மட்டுமே இருப்பாய்

நீ சமுதாயத்தில் இருப்பாய் - ஆனால் உனக்குள் சமுதாய தன்மை போகாது

ஏனெனில் உனக்கு உள்ளும் -வெளியும் பரி சுத்தமான அன்பு பரிமாற்றங்கள் மட்டுமே இருக்கும் பற்று இருக்காது

பற்று கரையும் இடங்களில் ஞானம் இயல்பில் மலரும்

நன்றி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.