படித்ததை அப்படியே
ஒப்பிக்க
கிளியோ ,சின்ன பையனே கூட போதும்
கிளி பேச்சு கேட்பதற்கு நன்றாக இருக்கும்
ஆனால் சுயமாக சிந்திக்க தெரியாது
ஆனால்
அதை நன்கு வளா்ந்த மனிதன்
அப்படி அல்ல,அவனால் சிந்திக்க முடியும்.
படித்ததை
தன் அனுபவத்தில் உணர்ந்து
சொல்பவரே உண்மையான வழிகாட்டி
இதை உணர்த்தும் குறள்:
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக
கற்க வேண்டியவற்றை பிழையின்றி கற்று, கற்ற பின் அதற்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.
நல்ல அர்த்தம் உள்ள குறள் தான்.
சிந்திக்க சிந்திக்க புதுப் புது அர்த்தங்களை தரும் குறள் .
எதை கற்க வேண்டும் ? கற்பவை கற்க வேண்டும். எது கற்பவை ?
கற்க கசடற = கசடு என்றால் ஒரு திரவத்தை வடி கட்டும் போது, வடி கட்டியில் கொஞ்சம் தங்கி விடும். அதற்கு கசடு என்று பெயர். அதே போல் படிக்கும் போது சில விஷயங்கள் புரியாமல் இருக்கும். அந்த மாதிரி புரியாதது ஒன்றும் இல்லாமல், அனைத்தும் புரியும் படி கற்க வேண்டும்.
இன்னொரு பொருள்,
கற்பது, மனதில் உள்ள கசடுகளை போக்க வேண்டும். உயர்ந்த நூல்களை படித்த பின்னும் மன மாசுகள் போக வில்லை என்றால் கற்றதனால் என்ன பயன்.
மனம் மட்டும் அல்ல மனம், வாக்கு, செயல் என்ற மூன்றிலும் உள்ள கசடுகளை போக்க வேண்டும்.
வாக்கில் இனிமை வேண்டும்.
செயல் சிறந்ததாக இருக்க வேண்டும்.
மனம் தூயதாக இருக்க வேண்டும்.
நம் மனம், மொழி, மெய்யை கசடு இல்லாமல் ஆக்கும் விஷயங்களை கற்க வேண்டும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.