Thursday 14 July 2016

தற்பெருமை

🌹தற்பெருமை 🌹

தன்னை தானே சிறந்தவன் - உயர்ந்தவன் என்ற அடிப்படையில் எழும் தன்மை தான் தற்பெருமை என்று சொல்கிறோம்,

இது நடைமுறை வாழ்க்கையில் மனதின் அடிப்படையில் வாழும் பொழுது பல பேருக்கு இது ஒரு positive energy போல வளம் வருகின்றது

இது பொருள் வளர்ச்சி, புகழ் இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஒரு வகையில் வளர்ச்சியை கொடுக்க தான் செய்கிறது

ஆனால் இது வெளி வாழ்க்கைக்கு மனம் சார்ந்து வாழும் பொழுது எனக்கு m.p மாமா தான் ஆகிறார் , எனக்கு இவ்வளவு சொத்துக்கள் உள்ளது என்று வெளிப்படுத்தி சில முடியாத காரியங்களை செய்து கொள்ள இந்த சமுதாயத்தில் பயன்படுகிறது

இதெல்லாம் ஒரு வகையில் மேலோட்டமான சந்தோஷத்தை கொடுக்கின்றது

ஆனால் இந்த மன நிலையில் வாழும் நபர்கள் பெரும்பாலும் தன்னை விட மற்றவர்களின் சிறு வளர்ச்சியைக் கூட தாங்கி கொள்ள முடியாத நபர்களாகவே உள்ளனர்

ஏன் தான் மட்டுமே சிறப்பானவன் உயர்ந்தவன் என்று கருதுகிறது இது எப்படி  என்று பார்த்தால், உயர்வு- தாழ்வு  என்ற  ஆணவத்தன்மை கொண்ட ஒப்பீடு தான் காரணமாக அமைகிறது

அடிப்படையில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒரு செயல் செய்யும் பொழுது அது தனக்கே தனக்கென செய்யும் பொழுது அது தற்பெருமையாக வளம் வருவது இல்லை - பெரும்பாலும் எந்த செயல் செய்தாலும் தன்னை நிரூபிக்க அல்லது பாராட்டை எதிர்பார்த்து வெளிப்படுத்தும் நிலையில் இது வளம் வருகின்றது

இது ஆன்மீக கேள்வியின் - நமது  விளக்கத்துக்கு கூட பொருந்தும்  அதாவது தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற தன்மை - எனக்கு தெரியும் என்று மற்றவர்க்கு  காட்டிக் கொள்ளும்
நிலை வெளிப்பாடு

உண்மையில் மனதை உடைத்து வெளியே வர வேண்டும் அதற்கு மனதில் இருக்கும் குப்பைகளை அகற்றினால் அது அடியாளத்துக்கு கொண்டு செல்லும் அதாவது கூடத்தை சுத்தம் (empty) செய்ய கூடத்தில் இருக்கும் தண்ணீரை வெளியே கொட்ட வேண்டும்

அதன் அடிப்படையில் ஆழ்ந்து செல்லும் பொழுது இயல்பாக மேலடுக்குகளில் இருப்பது வெளியே வரும் அதில் இந்த தற்பெருமையும் அடங்கும்

இதை அடக்காமல் வெளியே விடுங்கள் அதில் உங்களுக்கு தயக்கத்தை கொடுத்தால் தனியாக உளரி கொட்டி விடலாம் - தெரியாத மொழியில்  உளரும் ஓஷோ meditation கூட ஒன்று உள்ளது

தான் மட்டுமே சிறந்தவன் என்ற தன்மை அடக்கினாலும் அது நம்மை அறியாமல்   அது இயல்பாக வெளிப்பட்டு விடும் - எனவே அதை இயல்பாக விட்டு விட்டு வேடிக்கை மட்டுமே பாருங்கள் அதை ரசியுங்கள் ஒரு கட்டத்தில் உங்களுக்கே உங்களது முட்டாள்  தனத்தை ஒரு கட்டத்தில் புரிந்து கொள்ளகூடும்

அதாவது நாம் நம் மனதின் அடிப்படையில் ஒரு பொருளை , உறவுகளை, பதவிகளை , தன் படைப்புகளை ,  என தன்னை சார்ந்த அனைத்தும் மட்டுமே சிறந்த ஒன்று என்று அடையாள படுத்தி கொண்டு மதிப்பை தேடும் ஒரு முட்டாள் தனமே இந்த தற்பெருமை என்பது புரிந்து எல்லா இயக்கத்துக்கும் மூலம் நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்று நம்மை கருவியாக வைத்து செயல் படுத்திக் கொண்டு இருக்கிறது என்று அடி ஆழத்தில் உணரும் பொழுது இந்த தற்பெருமை இயல்பாக நின்றுவிடும்

நான் சில பேர் எனக்கு தனிப்பட்ட முறையில் பேசிய பொழுது என் சந்தோஷம் எனது எழுத்து கொண்ட  வெளிப்பாடுகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி அதன் படி வாழ சில அனுபவம் கொண்ட விளக்கம் கேட்கும் பொழுது,

அதற்கு நான் குழு மூலம் அவர்களின் சுருக்கம் - இருக்கம் கொண்ட தன்மையை உடைக்க நான் என்னை மைய படுத்தி அங்கு வெளிபடுத்தும் பொழுது அட இவரே வெளிப்படையாக  சொல்கிறார் நமக்கு என்ன நாமும் இயல்பாக மாறுவோம் அந்த சோகத்தை - இருக்கத்தை கூட சந்தோஷமாக வெளிப்படுத்தி புரிந்து கொள்ளும் தன்மையை உருவாக்கும் சூழல் தான் அது என்று பலருக்கு புரிந்து கொள்ள தெரிவதில்லை

ஆனால் தனிப்பட்ட வெளிப்பாடுகள் நல்ல விதத்துக்கு இருந்தால் கூட அதை ஏற்றுக்கொள்ளும் தன்மை அவரவர் மனதை பொருத்தே உள்ளது

உணர்ந்து கொண்டிருக்கும் ஒருவன் தன்னை ஏன் இப்படி பெருமை போல வெளிப்படுத்தி கொண்டிருக்கிறான்- எந்த சூழ்நிலைக்காக செய்கிறான்  என்பதை கூட புரிந்து கொள்ள முடியாதது சற்று வேடிக்கையே - அடக்கி வாசித்தால் நல்லா இருக்கும் என்று மறைமுகமாக கூறுகின்றது!

சரி அடிப்படையில் ஒன்று உணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று அதாவது எந்த ஒன்றும் தன்னில் தான் உணர்வதற்குத் தன்னையே பரி சோதனை செய்து அந்த அனுபவம் மூலம் வரும் விஷயம் தான் உண்மை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

எனவே ஒருவர் கேட்கும் கேள்விக்கு - ஒருவரை நல்ல நோக்கத்தில் பயணிக்க வைக்க தன் அனுபவத்தை வைத்து தன்னை மைய படுத்தி தானே சொல்ல முடியும் என்ற ஆழமான ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்

இதை தான் ஞானிகள் உணர்ந்த ஒன்றை மனதின் அடிப்படையில் வெளிப்படுத்தாமல் உள் இருக்கும் தன் உணர்வில் இருந்து நான் இப்படி இருந்தேன் செய்தேன் கண்டேன் என்று தன்னை தானே வெளிப்படுத்துகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

ஆனால் ஞானியே ஆயினும் அவர் வாழ்க்கை அனுபவம் மற்றவர்க்கு பொருந்தாது, புரிதலுக்கும் உணர்வை நோக்கி பயணிக்கும் பாதைக்கு மட்டுமே  உதவும் எதையும் தனி நபர் உணர்ந்தால் மட்டுமே அது உண்மை ஆகும்

எனவே அடிப்படை உணர்வை நோக்கி பயணிப்பது அதற்கு இந்த மேலோட்டமாக உள்ள தற்பெருமைக்கு உண்டான மூலமான அடையாளம் கரைக்க சந்தோஷமாக எடுத்துக்கொள்ளும் பொழுது இயல்பாக மாறும்

தான் மட்டுமே சிறந்தவன் அல்ல தன்னை போலவே எல்லோரும் சிறந்தவன் என்பதை அடி ஆழத்தில் உணரும் பொழுது இது போன்றவை காணாமல் போய்விடும்

🌹செயல் செய்பவன் மறைந்து செயல் மட்டுமே இருக்கும் விழிப்புணர்வு  தருணத்தில் இந்த தற்பெருமை எல்லாம் காணாமல் போய் விடும் 🌹

தியானம் தான் அதன் ஆழத்துக்கு கொண்டு செல்லும் தன்மையை நம்மில் உருவாக்கிறது 

நன்றி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.