Saturday, 16 July 2016

கடவுளும் தெய்வமும்

கடவுளும்  தெய்வமும்

"பயம்தான் கடவுளைக் கற்பித்தது."
பயம்தான் தெய்வத்தையும் கற்பித்தத்து
மனிதன் இருட்டைக்கண்டு பயந்த போது,நோயைக் கண்டு பயந்த போது,முதுமையைக் கண்டு பயந்த போது,இறப்பைக் கண்டு பயந்த போது

அவனைப் பாதுகாக்க ஒருவர் தேவை என்றாகி விட்டது.

எங்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை.

அப்படி ஆகிவிடும் போது ஏதாவது ஒரு பாதுகாப்பை ஓர் ஆறுதலுக்காவது கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

இவைதான்
தெய்வத்தயும் உருவாக்க
வைத்தது

சரி இப்போ
தெய்வம் உருவானதை
பற்றி பாப்போம்

தெய்வம் என்பது
கோயிலில் இருக்கும் விக்கிரகங்கள் உண்மையில் அவை
ஏற்கனவே ஏதோ ஒரு ஊரில் வாழ்ந்த உதவிகள் செய்ய கூடிய ஒரு நல்ல மனிதர் அந்த ஊர் தலைவர்னு கூட வச்சிக்கலாம்
அவர் இறந்த பிறகும் அவரது பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாத ஊர் மக்கள்
அவரை அந்த ஊரில் கிடைக்கும் ஏதோ ஒரு பொருளை கொண்டு அந்த மனிதரின் உருவத்தை உருவாக்கி அவர்களோடு இருப்பதாக எண்ணிக்கொண்டு வாழ தொடங்கினர்

இது தான் கொஞ்சம் கொஞ்சமா பரப்ப பட்டு விக்கிரகங்கள் பெருகின

விக்கிரகங்கள்
தெய்வங்கள் என பெயர் சூட்டப்பட்டு

இன்னும் தெளிவா சொல்லனும்னா செத்துப்போன நம்
தாய் தந்தையரோட போட்டோவுக்கு
மாலை அணிவித்து
வணங்குவது போல
இந்த காலகட்டத்தில்
இறந்தவரின் போட்டோவ பிரேம் போட்டு மாட்ட நமக்கு விஞ்ஞானம் வசதி பண்ணி குடுத்திருக்கு
2000 வருஷத்துக்கு முன்னாடி கல்லில்
சிலையாக வடித்த அந்த வாழ்ந்த மனிதரைத்தான்
இப்போ நாம தெய்வங்கள் என்கிறோம்
இப்படித்தான் தெய்வம் பிறந்தது உண்மையில் அவர்கள் வாழ்ந்து ஊருக்கு உழைத்த நல்ல மனிதர்கள் இவர்கள் நல்ல ஆத்மாக்கள்
என்றும் புரிந்து கொள்ள வேண்டும் மொத்தத்தில் அவர்கள் மனிதர்கள்
மனிதர்களில் பலவகை உண்டு
இறைவன் முதல் நிலை
யோகி+ஞானி இரண்டாம் நிலை
தெய்வம் மூன்றாவது
மற்ற சாமியார்கள் நாலாவது
கடைசியில் சாதாரண மனிதர்கள்
நமக்கு கீழே விலங்குகள்
அதனால்தான் ஓசோ போன்ற எந்த ஞானியும் யோகியும் தெய்வங்களை வணங்குவதில்லை இப்போ இறைவனையும்
பற்றியும் சொல்றேன் கேளுங்க
இறைவன் + கடவுள்
இவை வேறு தெய்வத்துக்கும் இவைகளுக்கும் சம்பந்தம் இல்லை
கடவுள் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பவர்களுக்கு
புரியிர மாதிரி சொல்லணும்நா
நமக்குள் இருக்கும்
*உயிர்* தான் கடவுள்
இந்த பிரபஞ்சம் முழுவதும் எங்கும் இருப்பது அதுவே நமக்குள்ளும் இருப்பது அதுவே கடவுளை பற்றி ஒரே வரியில் சொல்லி விடலாம் எல்லாமே அதுதான் நமக்குள்ளேயும் வெளியேயும் ஒவ்வொரு அணுவிலும் இருப்பது அதுவே
உயிரே கடவுள்.....!!!
இன்னும் சிந்திப்போம்
Jainjamal😊

இதை தான்
தெய்வம் வேறு கடவுள் வேறு என்றேன் தவறாக பட்டால் பெரிய மனசு பண்ணி இந்த சிறுவனை மன்னிக்கவும்🙏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.